Tuesday, September 1, 2009

நோன்பு கஞ்சி

நோன்பு கஞ்சி






இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது. நோன்பு திற‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌வுள் முழுவ‌தும் குடித்தால் ந‌ல்ல‌ என‌ர்ஜி கிடைக்கும்.இதை ப‌ல‌ வ‌கையாக‌ செய்யலாம் அதில் இது குக்க‌ர் முறை, இதில் தாளிப்பு, எண்ணை எல்லாம் குறைத்து செய்தால் நோன்பு நேர‌த்திற்கு ந‌ல்ல‌து.



தேவையான பொருட்கள்.



சிக்கன் (அ மட்டன் கீமா - 100 கிராம்

பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் - முக்கால் டம்ளர்



பச்ச பருப்பு - இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது) வெங்காயம் - ஒன்று பெரியது



தக்காளி - ஒன்று



தயிர் - ஒரு மேசை கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி



கேரட் - அரை துண்டு

பச்ச மிளகாய் - ஒன்று



மிள்காய் தூள் - அரை தேக்காண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி



உப்பு - தேவைக்கு எண்ணை - ஒரு தேக்கரண்டி



நெய் (அ) டால்டா - ஒரு தேக்கரண்டி தேஙகாய் - இரண்டு பத்தை (அ) தேங்காய் பவுடர் இரண்டு தேக்கரண்டி



பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று



வெந்தயம் = கால் தேக்கரண்டி



கொத்து மல்லி தழை - சிறிது புதினா - சிறிது





செய்முறை



1. வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.புதினா, கொத்துமல்லி , பச்ச மிளகாயை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும். கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.கேரட்டை பூ போல் துருவி வைக்க வேண்டும்.அரிசி பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.



குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,ஏலத்தை போட்டு பொடிய விட வேண்டும்.



அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.



வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)



இப்போது தக்காளி பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.



தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு,மிள்காய் தூள், கொத்து மல்லி, புதினா,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.







தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற் வேண்டும்.ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவேணும்.



தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும் பருபையும் தண்ணீரை வடித்து போடவேண்டும்.



நல்ல கிளறி கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும்.



குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து முன்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விடவேண்டும்.



ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொத்திக்க விட்டு கொத்து மல்லி தழை தூவை இரக்கி சாப்பிடவும்.



சுவையான நோன்பு கஞ்சி தயார்.







இதற்கு தொட்டு கொள்ள பகோடா, பஜ்ஜி,உளுந்து வடை, மற்றும் புதினா துவையல் நல்ல காம்பினேஷன்.



குறிப்பு.



குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோரு வைக்க அப்படியே குக்கரில் வைக்க கூடாது செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.கஞ்சியை வெளியிலேயே வேக விட்டும் செய்யலாம். கையில் பச்ச குழந்தைவைத்திருப்பவரகள், வேலைக்கு போகிறவர்களுக்கு இந்த முறை ஈசியாக இருக்கும்.வெயிட் போட்டதும் தீயை குறைத்து வைக்கனும். இல்லை என்றால் தெரிக்கும்.கீமா அதிகமா தேவை படுகிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.



இதை ம‌ட்ட‌ன் கீமா,வெஜ் டேபுள்ஸ் ம‌ட்டும் போட்டு கூட‌ செய்ய‌லாம்.



நொய் என்பது பாதியாக பொடித்த அரிசி.



இது நோன்பு காலத்திற்கு என்று ஒரு கிலோ முக்கால் பதத்திற்கு பொடித்து அதில் பாசி பருப்பு கால் கிலோ, வெந்தயம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள், பர்கல் இருந்தால் அதுவும் கால் கப் கலந்து வைத்து கொள்ளலாம். தேவைக்கு தினம் ஒரு டம்ளர் அளவிற்கு செட்து குடிக்கலாம், ஒரு டம்ளர் போட்டு செய்தால் நான்கு பேர் தாரளமாக குடிக்கலாம்.



Courtesy: allinalljaleela.blogspot.com



Thanks to=        nidur.info

No comments: