துபாயை அறியாதோர் யாரும் இல்லை. இருப்பினும் நம் மக்களுக்கு வேலை தருவதில் முக்கிய அங்கம் வகிக்கும் நகரங்களில் துபாய் இருக்கும் பொழுது அது நம் நினைவில் வந்துக் கொண்டே இருக்கின்றது , ஏதோ ஒரு வகையில் நம் குடும்பத்தில் உள்ளோர் ஒருவர் அங்கு சென்று வேலை செய்து வருவதனை நாம் அறிவோம்,
எங்கள்குடும்பத்திலும் அதிகம் நபர் துபாயில் அதிகம் உள்ளனர்.
துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெரிய நகரமாகும். அங்கு போதிய அளவு எண்ணெய் வளம் இல்லாததால் துபாய் தன கவனத்தினை வேறு ஒரு வகையை தேடிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்ற நகரமாக விளங்குகின்றது . ஹாங்காங் போன்று தன்னை ஒரு உலக சந்தை கூடமாக தன்னை உருவாக்கிக் கொண்டது . ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இது மிகவும் பிரசித்திப் பெற்றது. இது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் இஸ்லாமியர் மட்டுமில்லாமல் அனைத்து மார்க்கத்தினை சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.(இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அனைத்து கேளிக்கைகளுக்கும் அது இடமாகவும் உள்ளது)
இஸ்லாமியர், கிருத்துவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அனைத்து மத மக்களும் இங்கே நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.ஆனால் அரபியர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது குடிஉரிமை கொடுப்பதில்லை.வெளிநாட்டு முதலீடு பெருக சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்துள்ளது . துபாயைச் சார்ந்த அரபியர்களைக் காட்டிலும் மற்ற மக்களே மிகைத்து அங்கு உள்ளனர்.
