Showing posts with label மழலையர் பள்ளி. Show all posts
Showing posts with label மழலையர் பள்ளி. Show all posts

Monday, June 4, 2012

உங்கள் பையன்(குழந்தை) என்ன படிக்கிறான்?

உங்கள் பையன்(குழந்தை) என்ன படிக்கிறான்?
எல் .கே . ஜி படிக்கிறான் .
உங்கள் பெண் (குழந்தை) என்ன படிக்கிறாள்?
யூ.கே .ஜி படிக்கிறாள்.
கிராமத்து பாட்டி கேட்க குழந்தையின் தாய் பதில் சொல்கிறாள். 

எல் .கே . ஜி , அப்புறம்  (மற்றும் ) யூ.கே .ஜி, யின்னா  என்னாங்க?
அது இந்த காலத்திலே ஒன்னாவதுக்கு (ஒன்றாவதுக்கு) முதலில் படிப்பது.   அது உனக்கு சொன்னா  தெரியாது! (என்னமோ இவங்களுக்கு மட்டும் தெரிந்தது போல் குழந்தைகளின் தாய் சொல்கின்றாள். தாய்க்கே தெரியாது அதனை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கே தெரியாது என்பது!)

'ஏம்மா பாவம் ,சரியாக சாப்பிடவும் இல்லாமல், இவ்வளவு  பெரிய பையிலே கனமா புஸ்தகம்,நோட்டு எல்லாம் தூக்கிட்டு போறாங்க. சின்ன குழந்தை.அதிலும் பையன்  வீட்டிலே ரப்பர் போட்ட பாட்டிலே (பீடிங் பாட்டில்லே) பால் குடிக்கிறான் பள்ளிக் கூடத்திலே எப்படி சாப்பிடுவான்'?  'நான் தான் போய் கொடுக்க வேண்டும். என்பாள்  தாய்.

நீ கொஞ்சம் அவங்களை பள்ளிக் கூடத்திலே விட்டு வாயேன்!
அதெல்லாம் நம்மாலே முடியாது .எனக்கு நிறைய வேலை இருக்கு.அத்தோடு  இல்லாமல் ஆட்டோவிலே போனால் எனக்கு மயக்கம் வரும்.
அதுலே அனுப்ப பயமாஇருக்கு.ஆட்டோலே நிறைய திணிச்சுட்டு போறாங்க, சரி பள்ளிக் கூட வேன்லேயே அனுப்பி வைக்கிறேன். பள்ளிக் கூடத்திலே பல வகையிலே காசு வாங்கிறாங்க வேன் வாடகையை வேறே ஏத்திட்டாங்க . கேட்டா டீசல் விலை ஏறிப் போய்சுன்கிறாங்க.

  Lower Kindergarten    ஜெர்மன் மொழி வந்து பின்பு  Lower Kinder garten ஆக ஆங்கிலத்தில் மாற்றமடைந்து  எல் .கே . ஜி மழலையர் பள்ளியாக  அதாவது "குழந்தைகளின் தோட்டம்"உருவாகியது. இது ஒரு குழந்தைகள்  பாலர் கல்வி நிறுவனம் ஆகும்.

கிண்டர் கார்டன் பள்ளி முறை இங்கிலாந்து நாட்டில் ராபர்ட் ஓவன் என்பவரால் முதன் முதலில் 1816-ல் ஏற்படுத்தப்பட்டது.
மேலை நாடுகளில் வேலைக்கு செல்வோர் வீட்டில் யாரும் இல்லாமையால் அங்கு விட்டுச் செல்வார்கள் .
அது ஒரு தோட்டமாக விளையாட்டுத்  தளமாகவே இருக்கும். ஒரு தோட்டத்தில் தாவரங்களை ஊட்டச்சத்து கொடுத்து வளர்ப்பது  போல் அந்த "குழந்தைகள் தோட்டங்கள்" பள்ளியில் குழந்தைகளை  கவனித்து மற்றும் ஊட்டச்சத்து கொடுத்தும்  விளையாட விட்டு அறிவை வளர்ப்பார்கள். பிரான்ச் நாட்டில் இப்பொழுதும் ஐந்தாவது வரை எழுதச் சொல்லி சொல்லிக் கொடுப்பதில்லை.  குழந்தைகள்   பலவண்ணங்களில் இருக்கும் உள்ள எழுதுகோளைக்  எடுத்து ஏதாவது  எழுதி பழகிக் கொள்ளும்.  முறையாக ஐந்தாவது வந்த பின்புதான் எழுத்து முறை கல்வி பயன்படுத்தப்படும்.ஆனால் அதற்குள் அந்த குழந்தைகள் அதற்கு தகுதியான அறிவை பெறுவதற்கு வழி செய்து விடுவார்கள். அது அனுபவ  வழியான கல்வியாக கிடைத்துவிடும் . ரயில் ,பஸ் மற்ற வகைகளை படம் போட்டு கற்பிப்பதைவிட அதை அனுபவத்தில் பயணம் செய்தே தெரிந்துக் கொள்ளும்.(இதை விளக்க வேண்டுமென்றால் ஆசிரியர்களை ,அல்லது பள்ளிக்கூடம் நடத்துபவர்களை அந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்! அனைத்து முன்னாள் இந்நாள் மாண்புமிகு மந்திரிகளும் பார்த்து வந்திருப்பார்கள்)   
Lower Kinder garten .
மழலையர் பள்ளி
Upper Kindergarten
உயர் மழலையர் பள்ளி.
இப்பொழுது Pre பிரீ எல்.கே.ஜி யும்,  பிரீ(PreLKG & UKG.) யூ.கே.ஜி யும்வந்துவிட்டது.

"யாழ் இனிது குழல் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்."
இவைகளை இழக்க வேண்டிய நிலை.
மழலையர் பள்ளியில் சுகாதாரம் அறவே கிடையாது.ஒரு வகுப்பில் பல குழந்தைகளை  காற்று வராத வகுப்பரையில் அடைத்து வைத்திருப்பார்கள். நல்ல குடி நீர்  இல்லாமையால் ஒவ்வொரு பள்ளி செல்லும் சிறார்களும்  வீட்டிலிருந்தே சுடுநீரை   ஆற வைத்து எடுத்துச் செல்கின்றனர்   குழந்தையர்களுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவால்,வெகு சீக்கிரமே பல வியாதிகள் வந்தடைகின்றன. குறிப்பாக பிரைமெரி  காம்ப்ளெக்ஸ்,தோல் சம்பத்தப்பட்ட வியாதிகள் வர வாய்புகள் அதிகம்.உளச் சோர்வு பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளும் உளச்சோர்வு அடைய வாய்ப்புகள் உண்டு.இது உணவு முறைகளில் மாற்றம் ஏற்படும் போதும் சில நடவடிக்கை மாறுதல்களாலும் ஏற்படுகிறது
இப்பொழுது சட்டம் அனுமதிக்கின்றது வீட்டிலேயே ஆசிரியரை வைத்து கல்வி கற்பித்து  ஓரளவு அறிவு கிடைத்த பின் தகுதியான வகுப்பில் சேர்க்க முடியும் .அதனை நாம் யாரும் பயன்படுத்துவதில்ல.ஆங்கில மோகம் நம்மை ஆட்டி வைக்கின்றது.