Showing posts with label மதிப்பெண்கள். Show all posts
Showing posts with label மதிப்பெண்கள். Show all posts

Saturday, November 9, 2013

பொய் என்பது ஒரு தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும்.

"ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒரு வார காலம் இருந்தது.

மேலும், அது சுலபமான பேப்பர் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாச ஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்ப வேண்டிய தருணம் வந்தது.