Showing posts with label சந்தி. Show all posts
Showing posts with label சந்தி. Show all posts

Sunday, August 18, 2013

தன்னை சிரிக்க வைத்தவர்களைப் பார்த்தே ஒருநாள் .... சந்தி சிரிக்கும் !

சந்தி ....
அந்தி நேரங்களில் கூடும்
வம்புகளை வளர்க்கும்
அம்புகளைத் தொடுக்கும்
வாதங்களைக் கேட்கும்
விவாதங்களை ரசிக்கும்
பக்கத்திற்கொன்றாய்
வாத்தியமும் இசைக்கும்
மூடனைக்கூட
மேதையென விளிக்கும்
சத்தமிடுபவனை
சத்தியவான் எனச்சொல்லும்
சண்டைக்காரனை
சாதனையாளனாய்
சிலாகிக்கும்
சண்டாளனை
சாகசக்காரனென
சரசம் செய்யும்
சாக்கடைகளை
சந்தனமெனச் சொல்லி
சந்தோசம் தரும் !
சத்தியத்தை இகழ்பவனை
உச்சி மோந்து மெச்சும்
********