Showing posts with label கெட்டவர். Show all posts
Showing posts with label கெட்டவர். Show all posts

Saturday, September 15, 2012

ஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்?

 ஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். இது விதியா? பிறப்பினால் வந்ததா? அல்லது வியாதியா? சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் காரணங்கள் உள்ளனவா என்ற சிந்தனை நமக்கு விடை கிடைக்க உதவலாம். அதற்கு  ஏதாவது சிகிச்சை உள்ளதா என்பதிலும் நமக்குள் ஓர் ஆய்வு தேவையாகலாம்.
நல்லவர்கள் நல்லவர்களாக தொடர்ந்து இருப்பார்களா? இதனையும் நாம் சிந்திக்க வேண்டும்.
நல்லவனாவதும் கெட்டவனாவதும் இறைவன் வசம்தான் உள்ளது என்று அனைத்து பொறுப்பையும் அதன் பாரத்தையும் இறைவன் மீது போட்டு தப்பிக்க முயல்வது இயலாமையைத்தான் காட்டுகின்றது.
சூழ் நிலை, சந்தர்ப்பம் ,பரம்பரை , நட்பு இவைகள் ஒரு காரணமாய் இருந்து ஒருவர் கெட்டவர்களாக மாறிவிட்டார்
என்பதில்தான் நம் கவனம் உள்ளது. என் பையனை அவன் கெடுத்து விட்டான் என்று மற்றவர் மீது குற்றம் சாட்டி நாம் தப்பித்துக் கொள்கின்றோம் .ஒருவர்  கெட்டவராக மாறிப் போவது அவரே ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்பதை நாம் சிந்திப்பதில்லை.