கர்பத்தடைக்கு ஆதரவான சட்டம் போடுவோம் மனதார வாழ்த்தவும் செய்வோம் . இரட்டை வேடம்.
கர்ப்பமாக உள்ள இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கும் கேத் மிடில்டனுக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், கேத் மிடில்டன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. - செய்தி .
அரபு நாட்டில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோதச் செயல்களும் ஆக்கிரமித்திருந்தது. அரபு நாடுகளில் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவதும் அல்லது கொன்றுவிடும் பழக்கம் இருந்தபோது இறைவனால் இறக்கப்பட்ட வசனம் இவைகள்.
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.- Qur'an 17:31 திருக்குர்ஆன்-17:31
எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை. - Qur'an 6:140 திருக்குர்ஆன்6:140