‘இஸ்லாமிய பெண்கள் குறித்த பாகத்தை படித்த போது வியந்து போனேன்...
சாட் ரூம் (chat room) வழியாக "ஷஹாதா கலிமா" மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!
[ நான் சிறுமியாக இருந்தபோது "இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப்
பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்". பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது.]
நான் ஒரு ஆங்கில கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். என் தாய் ஒரு குடும்பத்தலைவி. என் தந்தை மின்னனுவியல் துரையில் ஒரு விரிவுரையாளராக இருக்கிறார். என் தந்தை கத்தோலிக்க பின்னனியில் இருந்தும் என் தாய் புராட்டஸ்டண்ட் பின்னனியில் இருந்தும் வந்தவர்கள். அவர்கள் 1970 ஆரம்பத்தில் திருமணம் முடித்தனர். நான் வளர்ந்த வந்த போது அவர்கள் கடவுளை நம்பாதவர்களாகவும் மதம் என்பது பெயருக்கு கூட வீட்டில் இல்லாமல் இருந்து. நான் வளர்ந்து கொண்டிருக்கும் போது மத அடிப்படையில் வாழ விரும்பினால் என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவு தர முடிவு செய்தனர்.
சிறு வயதில் இருந்தே மதம் சார்ந்த அடிப்படையில் நான் வளர்க்கப்படவில்லை என்றாலும் கூட நான் கடவுளை நம்பினேன். ஆயினும் நான் பயின்று வந்த கிறிஸ்தவ பாட சாலையில் போதித்தவைகள் ஏதோ ஒரு வகையில் தவறானவை என்று எனக்குத் தோன்றியது. இயேசுவின் மீதோ அல்லது பரிசுத்த ஆவியின் மீதோ எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இவை அனைத்தும் தவறாக எனக்கு தோன்றின. ஆனால் பள்ளிக்கூடத்தில் இவைகள் தான் சரியான வழி என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் தவறானவை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது. ஆகையால் நான் மிகவும் குழப்பமடைந்தேன்.