Showing posts with label அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். Show all posts
Showing posts with label அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். Show all posts

Sunday, August 21, 2011

இந்திய முஸ்லிம்களின் முதலாவது கல்வி நிறுவனம்


ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அண்ணாமலைப்பல்கலைக் கழகம், காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகம் என தேசத் தலைவர் பெயராலும் நிறுவனர்கள் பெயரா லும் பல்கலைக்கழகங்கள் உள் ளன. ஆனால் நிறுவனரின் பெயரை அறியவாய்ப்பில்லாமல், அமைந்த இடத்தின் பெயரைக் கொண்டு விளங்குவது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். அலிகர் என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது முஸ்லிம் பல்கலைக்கழகம் என்றால் அந்தச் சமுதாயத்தினருக்கென்றே அது நிறுவப்பட்டுள்ளது என்ற கருத்து உருவாகலாம். ஆனால் இந்தப் பல் கலைக்கழகம் அனைத்து சமயத் தினருக்கும் இடம் கொடுத்தது; கொடுக்கிறது. இதன் முதலாவது மாணவனும் ஒரு இந்து; பட்டதாரி யும் இந்து என்பது பலரும் அறியாத தகவலாகும். பின்னர் ஏன் இது முஸ்லிம் பல்கலைக்கழகம் எனப் பெயர் பெற்றது? அது ஒரு சுவா ரசியமான வரலாறு.

இந்திய நாட்டை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது ஆங்கில மொழி யைக் கற்கலாமா? அது இஸ்லாத் திற்கு எதிரான கொள்கையல் லவா? என்ற ஐயம் எண்ணற்ற முஸ் லிம்களின் உள்ளத்தில் இருந்தது. மேற்கத்திய கல்வித்திணிப்பு தங் களைக் கிருத்தவர்களாக மாற்றவே என இஸ்லாமியர்கள் பயந்தனர்.