உணவு மற்றும் அடிப்படை தேவைகள் அனைவருக்கும் மலிவாக கிடைக்க வேண்டும். இது அனைவரும் விரும்புவது. இதற்கு வழி என்ன? எல்லோருக்கும் இது ஒரு கனவாக காட்சி தருகின்றது. பல முயற்சிகள் அரசும் எடுத்து வருகிறது. அது எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது! அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகள் மடமடவென உயர்ந்துக் கொண்டே இருக்கின்றது. ஆட்சி செய்வோர்களின் முறை மட்டும் இதற்கு காரணமாகிவிடுமா! அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பளத்தைக் உயர்த்திக் கொண்டே. இருக்கும் போது, பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. அரசாங்கம் பெட்ரோல் விலையை அதிகரிக்கிறது அதனால் பொருட்களின் விலையும் அதிகமாகிறது. பெட்ரோல் விலை குறைப்பு இருக்கும் போது பொருட்களின் விலையில் எந்த குறைப்பும் இல்லை. பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகளை விலை அரசாங்கத்தின் கையில் ஆனால் வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர் பொருள்களின் விலையை அதிகரிக்கும் போது, அரசாங்கம் தடுத்து நிறுத்துவது கிடையாது . அரசு விதிகள் இருக்கலாம், ஆனால் அந்த விதிகள் மற்றும் சட்டங்களுக்கு இடுக்கினை கண்டுபிடித்து, கொடுக்க வேண்டியதனை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து தனக்கே உகந்ததான முறைகளை கையாண்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலையை நிறுத்த முடியாத நிலைமையை உண்டாக்கி விடுகின்றனர். பொருள்களின் விலையை அதிகரிக்கும் போது ஒரு கடுமையான தண்டனை அவர்கள் மீது எடுக்கப்படும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள் . எச்சரிக்கை மட்டுமே பொருட்களின் விலை அதிகரிக்கும் வர்த்தகர்களை தடுக்க முடியாது! பொருட்களின் விலை ஏற்றம் என்பது தேவை மற்றும் விநியோகத்தினை சார்ந்தது. பொருட்கள் நிறைய கிடைக்கும் போது பொருட்களின் விலை குறைந்துவிடும். ஆனால் தேவை அதிகமாக இருந்து பொருட்கள் குறைவாக இருக்கும் போது பொருட்களின் விலை ஏற்றத்தினை யாராலும் தடுக்க முடியாது.
Showing posts with label அரசாங்கம். Show all posts
Showing posts with label அரசாங்கம். Show all posts
Thursday, May 3, 2012
Thursday, October 28, 2010
வேலைநிறுத்தம் என்பது எங்குதான் இல்லை ! பாரிசிலிருந்து பாரிமுனை வரை ..
வேலைநிறுத்தம் என்பது எங்குதான் இல்லை .அரசின் கவனத்தை ஈர்க்க இதுதான் ஆயுதம் என்று மிகவும் முக்கியமான பிரச்னைகளில் அரசின் கவனத்தை ஈர்க்க முயல்கின்றனர். ஆனால் இது ஒன்றும் இல்லாத தன் சுய நலத்திற்காகவும் இருக்கலாம் . உலக அளவில் இது அரசுக்கு பெரிய சவாலாகவும் இருந்து மக்களையும் பாதிக்கின்றது . இதற்கு விடிவு எப்பொழுது !
பிரான்ஸில் இடம்பெற்று வரும் வேலைநிறுத்தம் மற்றும் அரச எதிர்ப்பு பிரான்ஸ் அரசாங்கம் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 to 62 ஆக அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸில் இடம்பெற்று வரும் வேலைநிறுத்தம் மற்றும் அரச எதிர்ப்பு பிரான்ஸ் அரசாங்கம் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 to 62 ஆக அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)














