Wednesday, June 17, 2026

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் B..M.Z.ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள்

 


பி.எம்.இசட். ஜியாவ்தீன் ஹஜ்ரத் (BMZ Ziawdeen) அவர்கள் மார்க்க அறிவு பெற்றுள்ளார் சொற்பொழிவு செய்வதில் தனி ஆர்வம் கொண்டவர் அவரது பேச்சை மக்கள் விரும்புவர்.

சேவை உணர்வுடன் மார்க்க சேவை செய்து வருகிறார் 

தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் சமூக-மத ரீதியான விவாதங்களில் ஈடுபடும் ஒரு தீவிரமான சமூக ஊடக ஆளுமையாகவும், டிஜிட்டல் வர்ணனையாளராகவும் அறியப்படுபவர். இவரது பொதுச் செயல்பாடுகள் முக்கியமாக இணையதளத் தளங்களை மையமாகக் கொண்டவை; அங்கு இவர் நடப்பு நிகழ்வுகள், பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச மோதல்கள் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்.


: உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.


இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில்


   சிறந்த எழுத்தாளர் .,பண்பாளர் ,மனிதநேயம் கொண்டவர் ,அனைவரின் மீதும் பாசம் காட்டி மற்றவர்களை அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)


'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

 நம்மைப்பற்றி நாம் அறிவோம்


நம்மை வாழ்வித்தவர்களை


நமக்கு கல்வி கொடுப்பவகளை


நம் உறவுகளை


நம் நண்பர்களை


நன்கு அறிந்து கொள்வதில்


நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்


இவரை வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .


இறைவன் அருளால் தொடரட்டும் இவரது  சேவைகள் .


இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்


மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காத வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை


கடனில்லாத வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை


கடுமையான உழைப்பும் நல்ல எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும்.


உற்சாகப் படுத்துபவர்.சிறந்த வழிகாட்டி  

ஹஜ்ரத் அவர்கள் நீருர் நெய்வாசல் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் பேராசிரியராகப் நீண்ட காலம் பணி செய்தவர் அத்துடன் 

நீடூர் நெய்வாசல் ஜாமியா பள்ளிவாசலில் தலைமை இமாமாக சிறந்த சேவை செய்தார்.

அவரது சேவை காலத்தில் நான் பள்ளிவாசல் டிரஸ்டியாக இருந்த பெருமையும் மன மகிழ்வும் எனக்கு உண்டு 

ஹஜ்ரத் அவர்கள் பிறந்த ஊர் அய்யம்பேட்டை

இப்போது அதே சேவையை தங்கள் ஊரில் செய்து வருகிறார்கள்

அல்லாஹ் அவர்களுக்கு நீடித்த ஆரோக்கியமான வாழ்வையும் தந்தருள்வானாக 

ஆமீன்.

முஹம்மது அலி ஜின்னா 






No comments: