Friday, January 13, 2023

பவள விழா நாயகராக இடம் பெறுபவர் முஹம்மது கபூர்.Mohamed Kaffoor

   Abu Haashima


                    

.                                               Mohamed Kaffoor 


                                               Abu Haashima

பவள விழா நாயகராக இடம் பெறுபவர் 

முஹம்மது_கபூர்.Mohamed Kaffoor 

கோட்டாறுக்கும் பிறந்த பள்ளித்தெருவுக்கும் பெருமை சேர்க்கும் 

ஆலியாக்கர் குடும்பத்தின் உயர்ந்த மனிதர்.

எளிய குடும்பத்தில் பிறந்தாலும் 

தன்னுடைய விடா முயற்சியாலும் 

தன்னம்பிக்கையாலும் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வந்தவர்.

ஆரம்பத்தில் கேரளத்தில் பிரபலமான பிஸ்மி பேனா கம்பெனியில் பணிசெய்து 

பின்னர் உகாண்டா நாட்டுக்குச் சென்றார்.

தன்னுடைய உழைப்பால் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் வெற்றியும்  பெற்றார்.

உகாண்டாவில் வாழும் குமரி மாவட்ட மக்கள் ஒன்று சேர்ந்து 

#உகாசேவா என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள்.

அதை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல கபூர் எடுத்துக் கொண்ட பங்களிப்பு 

அதிகம்.

கோட்டாறிலும் உகாசேவா மருத்துவமனை 

ஆரம்பித்து அதனுடைய வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டு வருகிறார்.

உகாசேவா மருத்துவமனையின் தலைவராகவும் நிர்வாகிகளில் ஒருவராகவும் பல பொறுப்புகளை வகித்தவர் இப்போது அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

கபூரின் தன்னலங்கருதாத சேவைகள் ஏராளம்.

* உதவி கேட்டு வருபவர்களை வெறுங்கையோடு இவர் திருப்பி அனுப்புவதில்லை.

* சில வருடங்களுக்கு முன்னால் ஒரு பெண் தன் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக என்னிடம் உதவி கேட்டு வந்தபோது நான் கபூரைத்தான் கைகாட்டி அனுப்பினேன். கணிசமான ஒரு தொகையை உடனே கொடுத்து உதவினார்.

* கல்வி உதவி உட்பட பலருக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார்.

* ஊருக்குள் சில தண்ணீர் சுத்திகரிப்பு 

நிலையங்களை அமைத்து மக்களுக்கு 

சுவையான குடிநீர் வழங்க வழிவகை செய்திருக்கிறார்.

* ஏழைகளும் அநாதைகளும் இறந்த பிறகும் 

பயன் பெறும் வகையில் 

பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு ஜனாசா குளிப்பாட்டும் அறையும் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

* முதியோர் இல்லங்களில் மரித்துப்போகும் 

உறவுகளில்லாத மனிதர்களுக்கு 

உறவாக இருந்து சாதிமதம் பாராமல் தனது சொந்தச் செலவில் இறுதிச் சடங்குகளை 

முன்னின்று செய்து வருகிறார்.

* ஒவ்வொரு ரமளான் மாதத்திலும் 

ஏழைகளை கண்டறிந்து இவர் வழங்கும் ஜகாத் அழகானது.

* இவர் வழங்குவதோடு நில்லாமல்  

ஒரு கணிசமான தொகையை எனக்குத் தெரிந்த ஏழைகளுக்கும் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கும் வழங்குவதற்காக என்னிடம் தருவதும் வழக்கம். 

சில வருடங்களாக இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

* கபூரின் மனித நேய சேவைகளைப் பாராட்டி பல அமைப்புகளும் பத்திரிகைகளும் விருது வழங்கி அவரை சிறப்பித்து வருகின்றன.

* தமிழக அரசும் அவரை பாராட்டும்  நேரம்

நெருங்கி வருகிறது.

கபூரின் சேவைகள் தொடரவும் 

அவரது அழகான முயற்சிகள் 

வெற்றி பெறவும் 

அவரால் ஊரும் உறவும் 

சிறப்படையவும் இறைவன் 

அருள் செய்ய வேண்டும்.

வளமான ஆயுளும் 

நிறைவான நலமும் பெற்று 

முஹம்மது கபூர் பல்லாண்டு இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் . வாழ்க !

Abu Haashima


No comments: