எவரின் குரல் சாயலுமின்றி முந்தைய கால இஸ்லாமிய பாடகர்களில் என் பள்ளிக்கால பிராயத்தில் நான் இவரைத் தவிர அதிகம் நேசித்த குரலுக்கு உரியவர் .ஏ.எம்.தாஃலிப்அவர்கள். நபிமணியே எங்கள் நாயகமே .....வானில் உதித்த வெண்மதி போல் தீனில் உதித்த ஜோதியே போன்ற இலங்கை வானொலியின் வழி அறிமுகமான அற்புத குரலுக்கு சொந்தக்காரர் .இவர் வியாபாரத் துறையில் சிங்கையில் ஈடுபாட்டில் இருந்ததால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பாடல்களை அரகேற்றியவர்.எனினும் இவரின் குரல்வளத்தில் விரல் விட்டு வித்தியாசமாக ஒலித்த இசை மெட்டுக்களும் இன்னும் என்னில் ஒலித்துகொண்டிருக்கின்றன .சில வருஷங்களுக்கு முன் மறைந்து போன இந்த மெலோடிக் குரலிசை பாடகரும் சாட்ஷாத் எங்க ஊர்க் காரர் என்பதில் மகிழ்கிறேன்
Gajini Ayub
வடகரை தாலிப் என்று
அழைக்கப்படும்
மர்ஹும்
முத்தலீப் அவர்கள் என்னுடன் படித்தவர்
நண்பர் மற்றும் உறவினர் ஆவார்
Mohamed Ali Jinnah

No comments:
Post a Comment