#தொட்டால்_தொடரும்_18 #குறுந்தொடர் அபு ஹாஷிமா
(அரேபிய
தேசத்து வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய தொடர் )
சூப்பிரன்டன்ட்
பஸ்ஸாம் தாமர் என்னை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார்.
பஸ்ஸாமுக்கு
35 வயசுதான் இருக்கும்.
ஆங்கிலப்பட
கதாதாயகனைப் போன்ற தோற்றம். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் முகப்பொவுகூட அவரிடம் இருந்தது. அளவான உடம்பு . ஆறடிக்கும்
சற்றும்
கூடுதலான உயரம் .
நீட்டான
டிரஸ். அழகான கோட்.
நான்
பார்த்த லெபனானிகளைவிட
வித்தியாசமான
மனிதர்.
பார்த்த
மாத்திரத்தில் அவரது கம்பீரம் எல்லோரையும் கவரும் வண்ணம் இருந்தது. ஒரு ஆங்கிலேயனைப் போலவே அவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
பஸ்ஸாம்
என்னுடைய பயோடேட்டாவை பார்த்துவிட்டு என்னைப் பற்றிய விபரங்களைக் கேட்டார்...
பிரிட்டிஷ்காரனின் தாய்மொழியில்.
நான்
பதில் சொன்னது தமிழ்நாட்டு இங்கிலீஷில்.
தொரை
இங்கிலீஷ்லாம் பேசினீங்களோன்னு கேக்கப்படாது.
ஏதோ
பேசினேன்.
என்னைப்பற்றிய
விபரங்களை கேட்டுவிட்டு மற்ற தொழிலாளர்களின்
பேப்பர்களை
கையிலெடுத்து
இதையெல்லாம்
எழுதியது யார்னு நக்கீரனைப்போல அவர் கேட்க ...
" நானேதானய்யா
எழுதினேன் " என்று
நாகேஷைப்போல
நான் பதில் சொன்னேன் .
கொஞ்ச
நேரம் நடந்த சம்பாஷணையில்
வேலை
செய்யும் பலருக்கு ஆங்கிலம் அறவே தெரியாது என்பதை அவர் நன்றாகத் தெரிந்து கொண்டார் .