Monday, March 29, 2021
Sunday, March 28, 2021
மனதில் தோன்றிய எண்ணங்கள்
மனதில்
தோன்றிய எண்ணங்கள்
மனதில்
தோன்றிய எண்ணங்கள் மின்னூல்
இறைவனின்
திருப் பெயர் சொல்லி ஆரம்பம்
செய்கின்றேன்
இறைவன்
அருளால் நம் அனைவர் மீதும்
சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்
மனதில்
தோன்றிய எண்ணங்கள்
MTE
முஹம்மது
அலி
மின்னூல்
வெளியீடு :
FreeTamilEbooks.com
சென்னை
Saturday, March 27, 2021
நீடூர் நெய்வாசல் அரபிக்கல்லூரியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு சீரூடைவழங்குதல்
நீடூர் நெய்வாசல் இரண்டாம் அமர்வு அரபிக்கல்லூரியில் இன்று பட்டம் பெறும் மாணவர்களுக்கு சீரூடைவழங்குதல்
நன்றி Abuaiman அவர்களுக்கு
மசாய் முஸ்லிம்கள்..
மசாய் முஸ்லிம்கள்..
2000-ஆம்
ஆண்டு ஆப்ரிக்காவின் மசாய் பழங்குடியின முஸ்லிம்களுக்கு
ஒரு திருப்புமுனை வருடமாகும். மிக சமீபமாகவே இஸ்லாம்
இவர்களிடம் அறிமுகமான நிலையில், இச்சமுதாயத்தில் இருந்து
ஆறு பெரியவர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு
புறப்படுகின்றனர். தங்கள் பயணத்தை வித்தியாசமாக
திட்டமிடுகின்றனர். தங்கள் நகரமான கில்கொரிஸ்சில்
இருந்து கென்யாவின் இரண்டாவது பெரிய நகரமான மொம்பாசாவிற்கு
நடந்தே செல்வது. பின்னர் அங்கிருந்து சவுதிக்கு
பயணமாவது என்பது திட்டம்.
இந்த இரண்டு நகரங்களுக்கு இடையேயான 803 கிமீ தூரத்தை 22 நாட்கள் இவர்கள் நடந்தே கடந்ததற்கு காரணம், செல்லும் வழியில் தாங்கள் சந்திக்கும் முஸ்லிம்களிடம், தங்கள் பகுதியில் இஸ்லாமிய மையம் அமைவதற்கான பொருளாதாரத்தை திரட்டுவது தான். இவர்கள் திட்டமிட்ட இஸ்லாமிய மையமானது பள்ளிவாசல், மதரசா, சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப பள்ளி ஆகியவை உள்ளடங்கிய கட்டிடமாகும். கணிசமான பொருளாதாரத்தை இந்த நடைப்பயணத்தின் மூலம் திரட்டிய இவர்களுக்கு, துபாய் முஸ்லிம்களும் இஸ்லாமிய வங்கி மூலம் உதவி செய்ய இவர்களின் திட்டம் உயிர்பெற்றது.
எங்கெங்கு நோக்கினும் பிரியாணி அல்லது சிக்கன் புலாவ் சோறு தான் கிடைக்கிறது.
R. N சாமி
கடை, திருக்களாச்சேரி.
சில நாட்களாய் எடுத்துக்கட்டி சாத்தனூரில் நண்பர் ஒருவரது வீட்டில்
சில பராமரிப்புப் பணிகள்.
மதிய உணவு தேடினால், எங்கெங்கு
நோக்கினும் பிரியாணி அல்லது சிக்கன் புலாவ்
சோறு தான் கிடைக்கிறது.
தினசரி
அதையே தின்ன
முடியுமா? அருகிலுள்ள சங்கரன் பந்தலிலும் சொல்லிக்
கொள்ளும்படி ஒன்றும் உணவகம் இல்லை.
பொறையாருக்கு 5 கி. மீ செல்ல
வேண்டும்.
அப்போது
தான் திருக்களாச்சேரி சாமி கடைக்கு போய்
பாருங்கள் என கொத்தனார் சொன்னார்.
சரியென அங்கு போனால், மெயின் ரோட்டிலேயே மாரியம்மன் கோயில் அருகில் இருக்கிறது கடை. உட்கார்ந்து சாப்பிட இரண்டு பெஞ்சுகள் இருந்தாலும், அந்த பெஞ்சுகள் முழுவதும் பார்சல் செய்ய வேண்டியவை தான் இருக்கின்றன. எனவே டேக் அவே தான்!
Friday, March 26, 2021
அன்புடன் வாழ்த்துக்கள் நூர்ஷஃபியா காதிரியா அவர்களுக்கு
வாக்காளர் கடமை
வாக்காளர் கடமை
காலில் விழுந்து பிழைப்பை
நடத்துவோர்
காலை வாரிப் பிழைப்பை
நடத்துவோர்
குற்ற வழியில் பிழைப்பை
நடத்துவோர்
குற்றம் சொல்லியே
பிழைப்பை நடத்துவோர் ..
பழம்பெருமை
பேசிப் பிழைப்பை
நடத்துவோர் .
பழயதைக்
கிண்டியே பிழைப்பை நடத்துவோர்.
குட்டையைக்
குழப்பி பிழைப்பை நடத்துவோர்
குறுக்கு
வழியில் பிழைப்பை நடத்துவோர் .
கூட்டணி சேர்ந்து
பிழைப்பை நடத்துவோர் .
கூட்டணி உடைத்து
பிழைப்பை நடத்துவோர் .
Thursday, March 25, 2021
கண்டம் விட்டு கண்டம் தாண்டி செல்வது!
💞 இறைசிந்தனை
கண்டம்
விட்டு கண்டம்
தாண்டி
செல்வது!
கண்மணி
ஹபீபின் ஆசியுள்ளவர்க்கே!
காப்பபன்
தரும் அருட்
கொடையே!
அதற்குரிய
ஆரோக்யம்
இருந்தால்
மட்டுமே!
அதனாலேயே
பயணம்
ஓர் உன்னதமே!
Wednesday, March 24, 2021
Monday, March 22, 2021
Haja Gani 57 mins • ஆடிட்டர் மிஸ்கீன் என்னும் ஆளுமையின் மறைவு...
—————————————-
திருவாரூரின்
முன்னணி பிரமுகரும் புகழ்பெற்ற கணக்காளருமான முஹம்மது மிஸ்கீன் (வயது93) இன்று (23.3.2021) அதிகாலை
காலமானார்.
இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி
ராஜிவூன்.
திருவாரூர் லயன்ஸ் கண்மருத்துவமனை, ராபியாஅம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்களை உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தி சமுதாயத்திற்குப் பலனளித்தவர்.
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Abrar Ahmed (Anbuman Abrar) அப்ரார் அகமது
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Abrar Ahmed (Anbuman Abrar) அப்ரார் அகமது
மமக வின் மாநில வழக்குரைஞர் அணிச்செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்.அப்ரார் அகமது
அப்ரார், அல்தாஃப் ஆகியோரின் தந்தை சிறந்த மார்க்க அறிஞருமான மௌலவி அபூபக்கர் அவர்கள்
அப்ரார் அகமது அவர்கள் தம்பி தந்தி தொலைக்காட்சி உதவி ஆசிரியர் அல்தாஃப் அகமது
Abrar Ahmed (Anbuman Abrar)அப்ரார் அஹ்மத் அவர்கள் பாரிஸ் -ஈபிள் டவர் அருகில்
அப்ரார் அஹ்மத் அவர்கள் பாரிஸ் -ஈபிள் டவர் அருகில் அன்சாரியுடன்
நியூஸீலாந்- பள்ளிவாசலில் இனவெறியர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு படுகொலைகள் தொடர்பான கண்டனக்கூட்டம்-பாரீஸில் அன்றைய தினமே நடைபெற்றது. "ஃபிரான்ஸ் -பன்னாட்டு இசுலாமியர் கூட்டமைப்பு" ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்டக் கூட்டத்தில் நமது கண்டனத்தை தமிழில் பதிவு செய்தோம். அதை ஃபிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர் நண்பர் haja maraicar...Friday, March 19, 2021
வலித்தாய்
வலித்தாய்
நான் ஒரு பெரும் பணக்காரருக்கு
மகனாய்ப் பிறந்தேன். ஆனால் என் எட்டாவது
வயதிலேயே அவரின் திடீர் மரணத்தால்,
ஏழ்மையின் மரணப்பிடியில் சிக்கினேன்.
காரணம்,
என் தாய் என் தகப்பனாருக்கு
இரண்டாவது மனைவி. மூத்த தாரத்தின்
பிள்ளைகள் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு எங்களை நடுத்தெருவில் எறிந்துவிட்டார்கள்.
என் தாய்க்கு நானே மூத்தமகன். எனக்கு
முன் ஓர் அக்காள். எனக்குக்
கீழ் நாற்பதுநாள் கைக்குழந்தையையும் சேர்த்து நான்கு ஆண் பிள்ளைகள்.
பசி என்றால் என்னவென்றும் என்னால்
நாளெல்லாம் பேசமுடியும். இளமையில் வறுமையின் வலியை வலிக்க வலிக்க
எடுத்துரைக்க முடியும்.
ஆனால்,
வளர்ந்ததும் புரிந்துகொண்டேன், வலியைத் தந்த இறைவன்
அதன் வழியேதான் வாழ்க்கையைத் தந்திருக்கிறான் என்று.
முட்டிமுட்டி
பாறை பிளந்து வைரப் பயிராய்
முளைவிட எவருக்கும் வகுப்பெடுக்கும் தாய் வலித்தாய்தான்.
பெற்ற தாயின் கண்ணீர் அறிவுரைகள்
அவரின் வலி அவருக்குத் தந்த
படிப்பினைகள். படி படி படி,
எவரிடமும் கை ஏந்தாதே, எவர்
முன்னும் தலைகுனியாதே.
வீழ்ந்த
பள்ளத்தில் தாழ்ந்து கிடந்தாலும் வாழ்ந்த உயரத்தை என்
தாய் ஒருநாளும் இழந்ததில்லை
கருத்தாயின்
கண்ணீரும் வலித்தாயின் விரட்டலும் இன்றி எந்த உயரத்தையும்
நாங்கள் தொட்டிருக்க முடியாது.
அக்கா சிங்கப்பூரில், தம்பிகள் அமெரிக்காவில், நான் கனடாவில்.
வலி மட்டும் ஊக்கம் தராவிட்டால்,
உசுப்பேற்றாவிட்டால், உரமேற்றாவிட்டால், நாங்களும், மூத்ததாரப் பிள்ளைகளைப் போல எல்லாவற்றையும் விற்றுத்
தின்றுவிட்டு அல்பாயிசில் செத்துப்போயிருப்போம்..
வலி இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே
இல்லை.
வலியே தாயும் தகப்பனும் ஆசானும் இறைவனும்.
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறப்பின்
வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து
பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச்
சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்
பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச்
சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து
பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப்
படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப்
பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து
பாரென இறைவன் பணித்தான்!
மனையாள்
சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து
பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை
என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப்
பாரென இறைவன் பணித்தான்!
முதுமை
என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து
பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்
பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின்
பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து
பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான்
அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே
நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன்
சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம்
என்பதே நான்தான்’ என்றான்!
-கண்ணதாசன்
Thursday, March 18, 2021
Noor Saffiya 💞 இறைசிந்தனை மாநபி சரிதமே!
💞 இறைசிந்தனை
மாநபி சரிதமே!
மகிழும்
பூவாரமே!
மிளிரும்
பூமானே!
மனதில்
மணமாகுதே!
மகிழ்வை
பூக்களாய்
கோர்த்து
வைத்தேன்!
மனதில்
அவைதமை
சேர்த்து
வைத்தேன்!
அதில் புரிந்ததை
தெரிந்து
வைத்தேன்!
அதன்படி
நடந்திடவே
ஆசை வைத்தேன்!
இளமை சிந்தனையில்
விட்டு
விட்டேன்!
இனியும்
தள்ளாது எம்மில்
நினைத்து விட்டேன்!
Tuesday, March 16, 2021
Monday, March 15, 2021
*💞"விண்ணில் வந்த நிலவே"*
Noor Saffiya
*💞"விண்ணில் வந்த நிலவே"*
*பாடல்
வரிகள்: நூர் ஷஃபியா*
*காதிரியா*
*பாடியவர் : ஆஷீகே
ரஃபீக்💞*
➖🌹
விண்ணில்
வந்த நிலவே
என்மனதில்
நிறைந்த ஹபீபே
மண்ணில்
வந்த ஒளியே
என்உயிரில்
கலந்த ரசூலே
(விண்ணில்)
தவத்தில்
உள்ள ஹுப்புடனே
கண்ணில்
வரும் திருக்காட்சியை கண்டேனே
முத்தே
முஹம்மதே...
முஸ்தபா..
முர்தழா.. ரஹ்மதுலில் ஆலமீன் ராஹதுல் ஆஷிகீன்
(விண்ணில்)
ஏங்கிருந்த
உள்ளம்
நபியை கண்ட பின்னே
கல்பில்
ஒளி நிறைந்திட்டது
ஆனந்தத்தின்
எல்லையில்
அந்த நேரம் நாவு
ஸஹாதத்து
கலிமா சொல்லும்
விழிப்பினில்
காட்சியும்
வித்திட்ட
இறையச்சம்
ரப்பே நீ தந்தாய்
Sunday, March 14, 2021
Saturday, March 13, 2021
மயிலாடுதுறை மண்ணின் அடையாளமாக மணிக்கூண்டை வைக்க வேண்டுமென்று அமைப்பவரின் மனதில் மணியடிக்கும்.
மயிலாடுதுறையின்
இதயமாக
இருக்கும்
இடமான
பட்டமங்கலத்
தெரு மற்றும் காந்திஜி ரோடு
ஆகிய சாலைகள் சங்கமிக்கும் இடத்தில்
கம்பீரமாக எழுந்து நிற்கிறது மயிலாடுதுறை
மணிக்கூண்டு.
மயிலாடுதுறை
சார்ந்த ஒரு வால்போஸ்டர் அடித்தாலும்,
வாட்ஸ்
அப் குழு அமைத்தாலும்,
ஃபேஸ்புக்
குழு அமைத்தாலும்,
பேனர் வைத்தாலும்
மண்ணின்
அடையாளமாக
மணிக்கூண்டை
வைக்க வேண்டுமென்று
அமைப்பவரின்
மனதில்
மணியடிக்கும்.
அமீர் அஹமது அவர்கள் தமிழ்நாடு பேட்மின்டன் சூப்பர் லீக் போட்டி தேர்வு செய்யப்பட்டார்.*
அல்ஹம்துலில்லாஹ்
மகிழ்ச்சியான
செய்தி
*நீடூர்
நெய்வாசல்,ரயிலடி தெரு குச்சிகடைகார
வீடு சாகுல் மகனார் அமீர்
அஹமது அவர்கள் தமிழ்நாடு பேட்மின்டன்
சூப்பர் லீக் போட்டி தேர்வு
செய்யப்பட்டார்.*
அவர் சென்னை பறக்கும் கிராவிட்டி
அணியால் ரூ.25000 ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இவர் தொழுகையை விடாதவர்.
எங்கள்
வீட்டுக்கு எதிரில் உள்ள பள்ளியில்
தொழ வருபவர்
*எல்லா
புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.*
தமிழக அளவில் கவனம் பெற்ற நமதூர் அமீர், இந்த முதல் படியை பயன்படுத்தி இந்திய அளவில் விளையாடி சாதனை படைக்க நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
Friday, March 12, 2021
உதவுதல்
உதவுதல் எப்போதும் இருந்தது
Thursday, March 11, 2021
நபிகள் பிறந்தனரே--------அஹமது அலி----
விண்ணுலகும்
மண்ணுலகும்
போற்றும்
நபியம்மா
அன்பிற்கும்
பண்பிற்கும்
அர்த்தம்
அவரம்மா....!!!!!!
அண்ணல்
நபி நாயகம்
அன்பு நிறை தாயகம்
அவர் போல் இங்கு யார்
கூறம்மா..!!!!
இஸ்லாம் / ஈரோடு தமிழன்பன் கவிதை
ஈரோடு தமிழன்பன் கவிதை
மதம்
மாறச் சொல்வதல்ல இஸ்லாம்
மனம்
மாறச் சொல்வது இஸ்லாம்
குணம்
மாறச் சொல்வது இஸ்லாம்
சாதியை
மறந்து
மனித குலம் ஒன்றாக
மாறச் சொல்வது இஸ்லாம்