Monday, November 30, 2020
Sunday, November 29, 2020
Friday, November 27, 2020
Thursday, November 26, 2020
Wednesday, November 25, 2020
Tuesday, November 24, 2020
கலைமகள் ஹிதாயா றிஸ்வி அவர்களை பிழைப்பொருத்து மன்னித்து அவருக்கு நற்கூலி வழங்குவானாக... ஆமீன்...
சகோதரி
@Kalaimahel Hidaya Risvi இலங்கையின்
குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஆளுமை. அவர்களுடன் எனக்கு சில ஆண்டுகால முகநூல் நட்பு. நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காதபோதும், ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் என்னை இலங்கை வருமாறு அன்புடன் அழைப்பு கொடுத்தார். என்னையும் தடாக குரூப்பில் சேர்த்துக் கோண்டார்.
அவரது
கவிதைகளை எமது வலைதளத்தில் மற்றும் வலைப்பூவில் அவர்கள் அனுமதியுடன் வெளியிட்டு மகிழ்வேன்.
அவர்களை
இறைவன் தன்வசம் அழைத்துக் கொண்டான் என்பது எனக்கு பெரிய வருத்தத்தை தந்தது.
இன்னா
லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...
வல்ல
நாயன் அவர்களை பிழைப்பொருத்து மன்னித்து அவருக்கு நற்கூலி வழங்குவானாக... ஆமீன்...
அறியப்பட
வேண்டியவர்கள் வரிசையில் கலைமகள் ஹிதாயா றிஸ்வி
Monday, November 23, 2020
The life of Umar Ibn Al-Khattab, the second Caliph of Islamic State, before and after he embraces Islam.
The life of Umar Ibn Al-Khattab, the second Caliph of
Islamic State, before and after he embraces Islam.
Farouk Omar is a historical Arab series co-produced (2012)
by MBC1 and Qatar TV and directed by Hatem Ali, which is based on one of the
best companions of Prophet Muhammad (Peace be upon him) and the 2nd Caliph of
the Islamic state, Umar Ibn Al-Khattab (May Allah be pleased with him) .
A 30-episode series showcasing the various events during the
life of Umar Ibn Al-Khattab (May Allah be pleased with him) from his
pre-Islamic days till his assassination. The series depends solely on
established historical facts hence didn't face criticism in terms of its
content as past movies on similar subjects did.
The series commences with the 23 year of Hijra at Makkah,
where the Muslim pilgrims have come together for the Hajj. In midst of them, we
can see Umar Ibn Al Khattab (May Allah be pleased with him) supplicating to the
Lord while doing the Tawaaf around the Ka'abah. On the return journey to
Medinah from Makkah, they pass by a group of people tending to their camels in
the desert. Umar (May Allah be pleased with him) reminisces his past days, when
he used to tend to his father Al-Khattab's camels in the desert, and how his
father used to work him to exhaustion and beat him up if he slackened.
Sunday, November 22, 2020
#தொட்டால்_தொடரும்_19 #குறுந்தொடர் அபு ஹாஷிமா
தொட்டால்_தொடரும்_19
#குறுந்தொடர்
அபு ஹாஷிமா
சவூதி பிளாஸ்டிக் பேக்டரியில் வேலைக்குச் சேர்ந்து ஹவுஸ் கீப்பராக வேலைபார்த்து அதன் பிறகு மெஷின்
ஆப்பரேட்டராக பனி உயர்வு பெற்று
ஒரு மாதமே வேலை செய்து முடித்திருந்த ஏழாவது மாதத்தின் முதல்நாள் ......
அன்றுதான் சம்பள நாளும்கூட .
அந்தநாள் ....
எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷ சிரிப்பு வந்து ஒட்டிக் கொள்ளும் நாள் .
அந்த நாள் வியாழக்கிழமையாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.
பெருநாள் மாதிரி கொண்டாட்டமாகத்தான் இருக்கும் .
இந்த நாளும் வியாழக்கிழமையாக
அமைந்து விட்டதில் எல்லோருக்கும்
ஏக குஷி.
நபியின் இறுதி பேருரை The last sermon of Prophet Muhammad (peace be upon him)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வல்ல இறைவனால் கடமையாக்கப்பட்ட அனைத்து வணக்கங்களிலும் வழிகாட்டி விட்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது ஹஜ் என்ற இறுதிக் கடமை மட்டுமே!
அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (5:3) வசனம் அருளப்பட்டது. “ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன், ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது.
அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்கள்.
-----------------------
வலிமார்கள் அவ்லியாக்கள் ஸஹாபாக்கள்
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக்கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள்.
அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள்
வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும்
-.mailofislam
Saturday, November 21, 2020
வணிகமும் தமிழக இஸ்லாமிய சமூகமும்..! #நிஷா மன்சூர்
வணிகமும் தமிழக இஸ்லாமிய சமூகமும்..!
#நிஷா மன்சூர்
இஸ்லாமிய
சமூகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே வணிகச் சமூகமாகத்தான் காலம்காலமாக இருந்து வந்திருக்கிறது.நபித்தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் இமாமுல் அஃலம் அபூஹனிஃபா ரஹிமஹுல்லாஹ் அவர்களையும் போன்ற முன்னுதாரன வணிகச் சான்றோர்கள் நடந்தவழியைப் பின்பற்றியே உலகளாவிய இஸ்லாமிய சமூகம் பீடுநடை போட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் விமானம் புழக்கத்துக்கு வராத காலத்திலேயே முஸ்லிம்கள் கடல்தாண்டி பற்பல நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்துவந்த சரித்திரத்தை நாம் அறிவோம். கீழக்கரையைச் சேர்ந்த அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இலங்கையில் பெருவணிகம் செய்து வந்தது மட்டுமல்லாமல் முதல் அரபுக்கல்லூரியை உருவாக்கியும் கிட்டத்தட்ட 350 பள்ளிகளை நிர்மாணித்தும் பெரும்சேவை புரிந்து போர்த்துக்கீசிய மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகளில் உருவான மதக்குழப்பத்திலிருந்து இஸ்லாமிய சமூகத்தை மீட்டெடுத்து புதிய மறுமலர்ச்சியை உருவாக்கினார்கள்.
வணிகமும் தமிழக இஸ்லாமிய சமூகமும்(பகுதி-2)..! #நிஷா மன்சூர்
வணிகமும் தமிழக இஸ்லாமிய சமூகமும்(பகுதி-2)..!
#நிஷா மன்சூர்
“வாணிபஞ் செய்வார்க்கு
வாணிபம் பேணிப்
பிறவும் தமற்போற் செயின்”
வாணிபம் செய்பவர்கள்
வாணிபத்தின் தர்ம நியாயங்களை முறையாகப் பேணி நடப்பதுடன் தமது பொருட்களை எவ்வளவு பாதுகாப்பாகக் கையாள்கிறோமோ
அதேபோலப் பிறரது பொருட்களையும் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
கடந்த பகுதியில் தமிழ் இஸ்லாமிய வணிகர்கள் மத்தியில் தற்பொழுது நிலவும் தேக்க நிலையைக் குறித்துப் பேசினோம். அந்தத் தேக்கநிலை உருவாகுவதன் காரணிகளையும் அதனைப் போக்குவதற்கான தீர்வுகளையும் குறித்து இப்போது பேசலாம்.
இஸ்லாமிய வணிக அறம் என்பது ஆழ்ந்த பொதுநோக்கையும் சமூகநீதியையும் கொண்டது.
உதாரணமாக நீங்கள் ஒரு மளிகைக்கடை வைத்திருக்கிறீர்கள். உங்கள் கடைக்கு எதிர்புறமாக இன்னொரு மளிகைக்கடை இருக்கிறது. உங்கள் கடையில் காலையில் கடைதிறந்தது முதல் மதியம் வரை கணிசமான வியாபாரம் நடந்திருக்கிறது. ஆனால் எதிர்புறக் கடையில் இன்னும் முதல் போணிகூட நடக்கவில்லை. இந்நிலையில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் அடுத்து வரும் உங்கள் வாடிக்கையாளர் கேட்கும் பொருள் உங்களிடம் இருந்தாலும்கூட "அது இல்லையே அண்ணே,எதிர்த்த கடையில் இருக்கு நீங்க அங்க வாங்கிக்கங்கண்ணே" என்று அவரை எதிர்த்த கடைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
வணிகமும் தமிழ் இஸ்லாமிய சமூகமும்..! பகுதி 3 #நிஷாமன்சூர்
வணிகமும்
தமிழ் இஸ்லாமிய சமூகமும்..!
#நிஷாமன்சூர்
பகுதி
3
"நாலுபேத்துக்கு
நல்லது நடந்தா எதுவுமே தப்பில்ல"
நமது
சுய நலத்துக்காக இந்த வாசகத்தை பலமுறை நாம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இதன் ஆதார நோக்கம் மக்கட்சமூகம் பயனுற உழைப்பதுதான் அறம் என்கிற உலகளாவிய நீதியைச் சொல்லுவதுதான்.
எனக்குத்
தெரிந்த ஒரு மூத்த வணிகர் பேக்கரிகளுக்கான மூலப்பொருள் வணிகத்தை நடத்திக் கொண்டிருந்தார். மிகச்சிறப்பாக வணிகம் நடந்தது. இவரைப் பொறுத்தவரை பெரிய திறமைசாலி என்று சொல்லமுடியாது. ஆனாலும் அடிப்படை வணிக தர்மத்தைப் பேணி நடந்து கொள்வார். இவரது வீடு எப்போதுமே கலகலப்பாக இருக்கும். இரவு உறங்கச்செல்லும் முன் அவரது தாயாரிடம் பத்து நிமிடங்கள் பேசிவிட்டுத்தான் உறங்கச் செல்வார். வீட்டிலும் சாப்பாட்டு நேரத்துக்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் போக முடியாது. ஆதரவற்ற உறவுக்காரப் பெண்கள் பலரையும்
வீட்டில் வைத்துப் பராமரித்து அவர்களின் திருமணத்தையும் பிரதிபலன் எதிர்பாராமல் முன்னின்று நடத்தினார். இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் ஹஜ்ஜுக்குச் சென்றபோது ஊரே திருவிழாக்கோலம் பூண்டு ஊர்வலமாகச்சென்று ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தது.
மிகச் சமீபத்தில் அந்த வணிகரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது குடோனில் பழைய கலகலப்பு இல்லாமற்போனதை உணர்ந்தேன். பணியாட்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டிருந்தது.