Wednesday, July 29, 2020

பக்ரீத் பண்டிகை. / Vavar F Habibullah

பக்ரீத் பண்டிகை
a bit long skip if you want


சென்னையில் இருந்தாலும்
நாகர்கோவிலில் இருந்தாலும்
எங்கள் வீட்டு ஈத் பெருநாள்
விருந்து நிகழ்ச்சிகளில் எனது
மாற்று மத நண்பர்கள் அதிகம்
கலந்து சிறப்பு செய்வதுண்டு.
கொரோனா இப்போது இந்த
நிகழ்ச்சிகளுக்கு தடைவிதித்து
விட்டது.

நோன்பு பெருநாள் பற்றி
தெரியும்...ஆனால் ஹஜ்
பெருநாள் ஏன்..எதற்காக!
மத பண்டிகை பற்றி அறிய
விரும்பும் நண்பர்கள்
சாதாரணமாக என்னிடம்
கேட்கும் கேள்விகளுக்கு
நான் சில விளக்கங்கள்
தருவது உண்டு.

மக்காவில் சிலை வணங்கும்
குடும்பத்தில் தான் முகமது நபி
தோன்றினார்...தெரியுமா!
இஸ் இட் ட்ரூ சார்...
நம்புவது சற்று கடினம் தான்!

அவர் வாழ்ந்த காலத்தில்
கஃபா ஆலயம்
365 சிலைகளால்
அலங்கரிக்கப்பட்டு தினமும்
ஒரு சிலை வழிபாடு நடந்தது.
பெண் தெய்வங்களை வழிபடுவது
கஃபா ஆலயத்தை ஆண்களும்
பெண்களும் நிர்வாண நிலையில்
சுற்றி வருவது, பெண் குழந்தைகளை
பலியிடுவது, மது போதையில்
பல மாதர்கள் அரவணைப்பில்
கூடிக்களிப்பது, சரச ஆடல்
பாடல்களில் மூழ்கி விழுந்து
புரள்வது, பல தெய்வங்களை
இறந்து போன மூதாதையர்
களை,வழிபடுவது போன்ற
மூட நம்பிக்கைகளின் செயல்
கூடாரமாக திகழ்ந்த மக்கா
மாநகரில் இளைஞர்
முகமது நபி கண்ட காட்சிகள்
தான் இவை.அவரது உற்றார்
உறவினர் நண்பர்கள் எல்லாம்
சிலை உருவ வழிபாடு நடத்தும்
மத குருக்களாகவே இருந்தனர்.
அவரது தாத்தா தான் கஃபா
ஆலயத்தின் தலைமை நிர்வாகி.

இவர்கள் மத்தியில் தான்
இறைவன் ஒருவன் என்ற
இறைச்செய்தியை
துணிச்சலாக சொன்னார்
இறைத்தூதர் முகமது நபி.

இந்த ஒரே இறைக் கொள்கையை
முகமது நபிக்கு முன்னரே
போதித்தவர் தான் இறைத்தூதர்
இப்ராகீம் என்ற ஆப்ரகாம்.
இவரது தந்தை
களி மண்ணில்
தெய்வச்சிலைகளை
வடிவமைக்கும்
கைதேர்ந்த சிற்பி.தான்
வடிவமைத்த
சிலைகளை அவமதித்தார்
என்பதற்காகவே மகன் என்றும்
பாராமல் சிறுவனாக இருந்த
ஏப்ரகாமை எரியும் நெருப்பு
குண்டத்தில் தூக்கி எறிய
வழி வகுத்தவர்.ஆனாலும்
மக்கள் அதிசயிக்க உயிர்
பிழைத்து எழுந்து வந்த இப்ராகீம்
அவர்களைப் பார்த்து இறைவன்
ஒருவனே என்ற இறைச் செய்தியை
சொன்ன போது மக்கள் அவர் பின்னால்
அணி திரண்டனர்.

இப்ராகீம் நபி தன் மகன்
இஸ்மாயிலை இறைவனுக்காக
அறுத்து பலியிடுவதாக கனவு
கண்டார்.அதை இறைக்கட்டளை
என எண்ணி நிறைவு செய்ய
முயன்ற போது, இறைவனால்
தடுத்தாளப்பட்டு மகனுக்கு
பதிலாக ஒரு ஆட்டினை
அறுத்து பலி கொடுக்க
ஏவப்பட்டார்.
இதுவே
தியாகத் திருநாள்
என்று உலக முஸ்லிம்களால்
பெருநாளாக
உலகெங்கிலும்
கொண்டாடப்படுகிறது.

மக்கா மாநகரில் ஒரே
இறைக் கொள்கையை
விதைத்தவர் இப்ராகீம்.
இவர் வழி வந்தவர்களான
மோசஸ் ஜீசஸ் முகமது
போன்ற இறைத்தூதர்களால்
தோற்றம் பெற்ற யூத கிருத்துவ
முஸ்லிம் மதங்கள் இன்றும்
ஆப்ஹாமிக் ரிலிஜியன் என்றே
அழைக்கப் படுகின்றன

ஆப்ரகாம் அவரது
மனைவி ஹாஜரா
மகன் இஸ்மாயில்
இவர்களின் தியாக
உணர்வுகளை
நினைவு கூறும்
நிகழ்ச்சிகளின்
தடங்களில் மனம் பதித்து
கால் பதித்து ஆத்ம பலம்
பெறுவது ஒன்று தான் மக்கா
செல்லும் ஹஜ் பயணிகளின்
முதன்மை நோக்கம்.

ஒரு ஆட்டை, இப்ராகீம் நபி
கஃபா ஆலயத்தில் மகன்
உயிருக்கு பதிலாக பலி
கொடுத்தார் என்பதாலேயே
முஸ்லிம்கள் இன்றும் ஒரு
காளை மாடு அல்லது ஆடுகளை
அறுத்து அதன் இறைச்சியை
ஏழைகளுக்கு தானம் செய்கிறார்கள்.
என்றாலும்...
நீங்கள் அறுத்து பலியிடும்
மிருகங்களின் இரத்தமோ
அல்லது அவற்றின் மாமிசமோ
இறைவனை அடைவதில்லை.
என்றே இறைவேதம் சொல்கிறது.

புனித மக்காவில் காளை பசு
மாடுகள் ஒரு போதும் அறுக்கப்
படுவதில்லை. உயர் ரக
ஆஸ்ட்ரேலிய ஆடுகள் பல
கோடிகள் அளவில் இறக்குமதி
ஆகின்றன. தூய்மையாக
அறுக்கப்பட்ட அவற்றின் இறைச்சி
ஏழை நாடுகளில் இலவசமாக
விநியோகம் செய்யப்படுவது
ஒரு மகத்தான தர்மம் தான்.

சிலை வணங்கும் குடும்பத்தில்
பிறந்த இந்த இறைத்தூதர்களே
சிலை வணக்கம் தவறு என்று
போதித்தார்கள் என்பதும்
ஒரே இறைக் கொள்கையை
உலகில் நிலை பெற செய்தார்
கள் என்பதையும் சரித்திரம்
சொல்லும் போது வியப்புக்கான
விடை தெளிவாக தெரிகிறது.

எல்லாம் சரி டாக்டர்..
சிலைகளை தெய்வமாக
வணங்கும் நாடுகளில்
இஸ்லாத்தின் நிலை என்ன..!
முன்னாள் அமைச்சர் எனது
நண்பர் திருச்சிஆர். சவுந்தரராஜன்
தான் ஒருமுறை இந்த கேள்வியை
என்னிடம் கேட்டார்.
உங்களுக்கு உங்கள் மதம்
எனக்கு என் மதம் என்பது
தான் இஸ்லாத்தின் நிலை
அல்குர்ஆன் 109:6
there is no cmpulsion in religion
என்பது மதநல்லிணக்கத்தின்
அஸ்திவாரமாகவே படுகிறது.
Islam is the best religion

but the worst followers
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
சொன்னதும் நினைவில்
வந்து போகிறது.

No comments: