அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Lks Meeran Mohideen
அன்புடன் வாழ்த்துக்கள் Lks Meeran Mohideen அவர்களுக்கு
Lks Meeran Mohideen
படித்தது வணிகவியல்
செய்வது விவசாயம்.
Proud to say an Agriculturist.
Education Employment Economy
The Muslim Higher Secondary School at Secretary & Corespondent
District president at Indian union muslim league tamil nadu
Corespondent at Keelakkarai Seena Thana Syed Abdul Kader Institute
Works at Kaaduvetti Farm,Nanguneri Taluk,
Asst.secretary at Isha Athul Islam Sabai
Working committee member at Muslim Orphanage Committee
Sakathullah Education Society
member at United Economic Forum
Business management at Agriculture
Studied Commercial art at Sadakathullah Appa College, Trinelveli
Graduated in 1985
Went to The Muslim Higher Secondary School
Went to Muslim Higher Secondary School, Melapalayam
Went to The Muslim Hr. Sec School
From Melapalaiyam, Tamil Nadu, India
Married
பேராசிரியர் போர்த்திய பொன்னாடைகள் இரண்டு.
கடந்த 38 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தில்,கல்வி ,சமயநல்லிணக்கம் ,பொதுத்தொண்டுகள் தொடர்பான பணிகள் செய்து வருகிறேன்.
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களை எங்கள் மாமா வீட்டில் பார்த்தது ....கனவு போல் உள்ளது...
சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப்,ஷம்சீரே மில்லத் அப்துல் லத்தீப் சாகிப்,முதலான தலைவர்களைத் தொடர்ந்து
பல்லாயிரம்.... பலநூறு பேர்களை பட்டதாரிகளாக்கி,....அவர்களில் பலரை கோடீஸவர தொழில் கோமான்களாகவும் சீமான்களாகவும் ஆவதற்கு துணை நின்ற பேராசிரியர், முனீரூல் மில்லத் கே.எம்.காதர் முகைதீன் அவர்களின் தூய தலைமையின் கீழ் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்ற தம்பிகளில் நானும் ஒருவனாக உள்ளேன்..
கடந்த காலங்களில் பெரிய தலைவர்கள் யாரும் முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகளில் எனக்குப் பொன்னாடைகள் போர்த்தியதில்லை... அதை எண்ணிப் பார்த்ததும் இல்லை..
ஆனால் அடுத்தக் கட்டத் தலைவர்களும் பிற இயக்கத் தலைவர்களும் நிறையப்பேர் எனக்கு பொன்னாடைகள் போர்த்தி மகிழ்வித்துள்ளார்கள்...
மற்றவர்கள் பலருக்கு சீராடைகள் அணிவித்து நானும் அழகு பார்த்துள்ளேன்.ஆனால் தலைவர்கள் கையால் ஆடைகள் கிடைக்கப்பெறவில்லை..
என் திருமண நாளில் சிராஜூல்மில்லத் சென்னையில் இருந்து கொண்டு வந்த பச்சை நிற சால்வையை எனக்கு அணிவித்து ஆரத்தழுவி வாழ்த்தியுள்ளார்.
தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் அவர்களின் அப்பழுக்கற்ற கரங்களால்..இருமுறை பொன்னாடைகள் பெரும் வாய்ப்பினைப் பெற்றேன்...
அதனை சாதாரண ஆடையாக நான் கருதவில்லை...
பெருமைக்குரிய ஆடைகளாகவே கருதுகிறேன்...
தஞ்சை மாவட்ம் வழுத்தூரில் அண்ணன் பஷீர் அவர்கள் தலைமையில் நடந்த மீலாது மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் தந்த சிராஜூல் மில்லத் விருதும் பொன்னாடையும்.
கடந்த 35 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தில்,கல்விப்பணி,சமயநல்லிணக்கம் ,பொதுத்தொண்டுகள் தொடர்பான பணிகள் செய்து வருகிறேன்.
கண்ணியமிக்க காயிதே மில்லத்தை எங்கள் மாமா வீட்டில் பார்த்தது கனவு போல் உள்ளது...
சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப்,ஷம்ஷீரே மில்லத் அப்துல் லத்தீப் சாகிப்,முதலான தலைவர்களைத் தொடர்ந்து
பல்லாயிரம்.... பலநூறு பேர்களை பட்டதாரிகளாக்கி,....அவர்களில் பலரை கோடீஸவர தொழில் கோமான்களாகவும் சீமான்களாகவும் ஆவதற்கு துணை நின்ற பேராசிரியர் முனீரூல் மில்லத் கே.எம்.காதர் முகைதீன் அவர்களின் தூய தலைமையின் கீழ் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன்...
கடந்த காலங்களில் தலைவர்கள் என் பொதுப்பணிகளுக்காக யாரும் எனக்குப் பொன்னாடைகள் போர்த்தியதில்லை...அதை எண்ணிப் ப்பார்த்ததும் இல்லை..
ஆனால் பேராசிரியர் காதர்முகைதீன் அவர்களின் அப்பழுக்கற்ற கரங்களால்..இருமுறை பொன்னாடைகள் பெரும் வாய்ப்பினைப் பெற்றேன்...
அதனை சாதாரண ஆடையாக நான் கருதவில்லை...
பெருமைக்குரிய ஆடையாகக் கருதுகிறேன்...
என்னை...
வாப்பா என்று அழைக்கின்றான்
என்னை...
அத்தா, அப்பா என்று அழைக்கின்றான்....
மாமா என்று நூற்றுக்கணக்கில்
அழைக்கின்றனர்.....
அண்ணன் ...காக்கா.. என்றும்...
தாத்தா...சின்னையா...
சாச்சா...ஐயா
என்றும் அழைப்பு.
அதற்கு நான் என்ன செய்துவிட்டேன்.?
கொஞ்சம் அன்பாக...
சிலருக்கு ஏணியாக.... இருந்துவிட்டேன்.
அது தவறா?
நானே....
என் அன்பில் நிறைந்தவர்களை..
வாப்பா என்று அழைத்தே மரியாதை செய்கிறேன்.
எங்க வாப்பும்மா சொல்வாள்
வாய பொத்துனா சலாமத்து...
வாய தொறந்தா....அலாமத்து தான்.
துபாய் நாட்டில் மேலப்பாளையத்தின் அன்புச்செல்வங்கள்
துபாய் நாட்டில் மேலப்பாளையத்தின் அன்புச்செல்வங்கள் எங்களுக்குத் தந்த இப்தார் நிகழ்வில்.
சின்ன இடத்தில் ஒன்று சேர்ந்து வாழ்ந்து ,பணிக்குச் சென்று ,வீட்டை ,ஊரை ,நாட்டை வாழ வைக்க பெரும் தியாகம் செய்யும் இளைஞர் கூட்டங்களில் இவர்களும் இருக்கிறார்கள்.
என்னை[பார்த்ததும் எவ்வளவு அன்பும் மகிழ்வும் இவர்கள் கொண்டார்கள் என்பதை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன்.
அவர்கள் சார்பில் அன்பு இப்ராகிம்,அப்துல் ரகுமான் என்னை அழைத்தார்கள் அங்கு சென்றேன்..அனைவரும் எங்கள் குடும்ப நண்பர்கள்.
ஒவ்வொருவரும் நோன்பு திறப்பு நிகழ்வுக்காக குறிப்பிட்ட பணிகளை செய்கிறார்கள்.
அவர்களின் அன்பு மகத்தானது.
சரணாலயத்துக்கு ஒரு பதினைந்து முறையாவது போய் வந்திருப்பேன்..
திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இப்படி ஒரு காடு, அடர்ந்த வனம் இருப்பதை திருநெல்வேலி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் அறிந்திருக்க மாட்டார்கள்.
இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாமல் அந்த கானகத்து இருளை,"ச்சில்" என்று எழும் வண்டுகளின் விதவிதமான ஓசைகளை அனுபவிப்பது, ஒரு வகை ரசனை என்று சொல்லுவேன்...
அங்கே மரங்களுக்கும்,செடி கொடிகளுக்கும்,வேர்களுக்கும் வாசம் உண்டு,என்பதை காலை,மாலை,இரவு,வேளைகளில் விதவிதமாக மூச்சுக்காற்றில் நுகர்ந்து மகிழலாம்.
எங்கு பார்த்தாலும் மலையும்,அழகும்தான்.
ஊட்டி,கொடைக்கானல்,குற்றாலம்,மூனாறு இவைகளோடு இந்தப் பகுதியை ஒப்பிடவே முடியாது.
ஏதோ அரசு வைத்துள்ள கெடுபிடியினால் இந்த வனம் பாதுகாக்கப் பட்டுள்ளது என்பது உண்மைதான்.
மூன்று குடியிருப்புகளைத்தவிர தங்குவதற்கு வேறு கட்டிடங்கள் எதுவும் அங்கே இல்லை...
இங்கிலீஷ் காரன் கட்டிவைத்த நூற்றாண்டு பழமையான கட்டிடங்கள் அதன் வலிமையை இன்றைக்கும் சொல்லிக் காட்டுகிறது..
.
அருமையான அருவிகள் காட்டாறுகள்,சிற்றோடைகள், என்னவெல்லாமோ பேசவைக்கும்.
பலமுறை யானைகள்,எருமைகள்,மான்கள்,
கூட்டங்களைப் பார்த்துள்ளேன்.
ஒரு முறை மரத்தின் கிளைகளில் தூங்கி ஓய்வெடுத்த சிறுத்தை ஒன்றை பார்த்தேன்..அப்புறம் புலியின் உருமலை காதுகொடுத்துக் கேட்டுள்ளேன்..
கொஞ்ச தூரத்தில், தன்னந்தனிக் கரடி,அதுவும் கொழுத்து பெருத்தக் கரடியை பார்த்து வந்துள்ளேன்.
அதெல்லாம் நம் கண்முன்னே காட்டில் வரும்போது பயம் வருமா? என்றால் கண்டிப்பா வரத்தான் செய்யும்...
நான் தைரிய சாலி என்று கதை சொல்லுபவர்கள் மூஞ்சியை கேமராவில் அந்த சூழ் நிலையில் படம் எடுத்தால் தெளிவாகவே பார்க்கலாம்.அவர் எப்படிப்பட்ட வீரர் என்று....
சொல்லிக்காட்ட செங்கல்தேறிக் கதைகள் நிறைய இருக்கு...பேசுவோம். Kalakkad Sengalteri Tiger Forest (Project)
— at Sengalteri.
என் பிரியத்திற்குரிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் இளம் தளபதி அபூபக்கர் அவர்கள் என்னிடம் "மாதத்தில் பாதி நாட்கள் வெளியூர்களில் சுற்றுவீர்களா?" என்று கேட்டார்.
"ஏன்"
"முகநூலில் விதவிதமாக படங்கள் போடுகிறீர்களே...அது தான் கேட்டேன் " என்றார்.
"மாதத்தில் மூன்று நாட்கள் வெளியூர் வாசம் இருக்கும்..அதுவும் பணியின் காரணமாகவே செல்வேன் .அப்போது உடன் வரும் நண்பர்கள் மூலம் படங்கள் எடுப்பேன்....அதை அவ்வப்போது பதிவிடுவேன்"என்றேன்.
இருவரும் சிரித்துக் கொண்டோம்.
நேற்று குற்றாலம் பள்ளிவாசல் இமாம் அவர்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க அழைக்கச்சென்று..... அவர்கள் வருகைக்காகக்காததிருந்த போது
திருநெல்வேலி மாவட்ட அளவில் நடந்த பூப்பந்தாட்டம் மற்றும் கேரம் போட்டிகளில் முதலிடம் பெற்ற எங்கள் மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி மாணவர்களுடன் பள்ளித்தாளாளர் சேர்மன் எம். ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப்,பொருளாளர் டி.எஸ். எம்.ஓ.அப்துல் மஜீத்,துணைத்தலைவர் எல்.கே.எஸ். மீரான்,மற்றும் தலைமை ஆசிரியர் சேக் முகம்மது...விளையாட்டு ஆசிரியர் சாகுல் ஹமீது மற்றும் மாணவர்கள்.
அன்பு அண்ணன்...
LKS. அப்துல்லா லெப்பை...
சின்னச்சின்ன கேலிகளோடும்
எண்ண முடியா அரவணைப்புக்களோடும்...
எங்க குடும்பத்தின் மென்மையானன்
மேன்மையானவன்.
எனக்கும்
பக்கபலம்....உதவி என்றாலே
அவன் தான்.....
எங்களால் பெற முடியாதவற்றை
அவன் மூலமாக எங்கள்
வாப்பாமார்களிடம் பெற்றுவிடுவோம்.
அவனும் நானும்
கடைசியாக இருந்த
பெரியப்பா வீட்டு
திண்ணையைப்
பார்க்கும் போதெல்லாம்
அவன் நினைவே இன்னும்.
என்னோடு.....
பேசிக்கொண்டு இருந்தான்.
அப்படியே....சாய்ந்தான்.
கண் மூடி விட்டான்.
அந்த அதிர்ச்சி
இன்னும் போகவில்லை.
மைத்துனர்கள் Er.செய்யது முகம்மது,Er.ஷப்பீர் அபதுல் காதர்....
இளம்வயது முதலே கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் வளர்ந்து வருபவர்கள்.....அவர்களின் தந்தையைப்போல...
என்னைப்பார்க்க அவர்களின் தாய் வீடாம் எங்கள் இல்லம் வந்த போது. — with Lks Peer Mohamed.
விவசாயம் என்றால் இப்படித்தான்..எல்லாம் இருக்கும்...
சில நேரம் மூடைகள் தூக்கணும்...
மாடுகளும் ஆடுகளும் மேய்க்கணும்...
நிறைய கவலைகள் அடிக்கடி வந்து போகும்....
" நாம சொல்றதை ...
மண்ணும் கேட்காது......
மனுஷனும் கேட்க மாட்டான்"...னு,
எங்க தந்தையார் சொல்லுவார்கள்...
---------------------------------------------------------------------------------\
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் Lks Meeran Mohideen அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
மார்க்கப்பற்றும்,சமூகப் பற்றும் பெற்று சிறந்த ,மனிதநேயமும் சேவை செய்யும் மனமும் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் Lks Meeran Mohideen அவர்கள் உயர்வடைகின்றார்
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
இவரை வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .
இறைவன் அருளால் தொடரட்டும் இவரது சேவைகள் .
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
அன்புடன் ,
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
No comments:
Post a Comment