Saturday, July 18, 2020

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு! / Vavar F Habibullah


கொரோனாவை யாரால்
கட்டுப்படுத்த முடியும் என்று
கேட்டால் அது டாக்டர்களால்
மட்டுமே முடியும் என்று பச்சை
குழந்தைகளும் சொல்லும்.

Medical Doctors
ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு
நூற்றுக்கும் மேல் உயிரழப்பு
என்றாலும் கொரோனா நேரம்
தொய்வின்றி கடும் உழைப்பு.
நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம்
சுழலும் மருத்துவப்பணி.
சரியாக உணவில்லை
நிம்மதியாக உறக்கம் இல்லை
குடும்பத்தை பிரிந்து
இல்லறம் துறந்து சன்யாச
துறவு போல் வாழும் ஒரு
அசாதாரண கர்ம யோகம்.

அரசு மருத்துவமனைகளில்
இளம் டாக்டர்கள் படும்பாடு
இங்கு சொல்லி மாளாது.
டாக்டருக்கான முகக்கவசம்
கூட ஒன்றே வழங்கப்படும்
அவல நிலை.தினமும் கைப்
பணம் நூறு ரூபாய் செலவில்
வெளியில் கவசம் வாங்கும் நிலை.
ஐம்பது கொரோனா நோயாளிகளை
ஒரு ஷிப்டில் ஒரே டாக்டரே
கவனித்து சிகிச்சை அளிக்க
நெஞ்சில் உரம் வேண்டும்.
கொரோனா தன்னையும்
தாக்கும் என்பது தெரிந்தும்
அச்சம் இல்லை
அச்சம் இல்லை
அச்சம் என்பது இல்லையே
என்ற உண்மையை உரக்கச்
சொல்லிக் கொண்டே
வார்டுகளில் நடை பயின்று
என் கடன் பணி செய்து
கிடப்பதே என்ற நீதிக்கு
தலைவணங்கி அறவழியில்
நடந்து கொரோனா காலத்தில்
நோயாளிகள் உயிர் பிழைக்க
உதவும், எனது இளம் தம்பிகள்
மருத்துவ சகாக்களின் தூய
தொண்டுள்ளம் கண்டு நெஞ்சம்
உவப்பதை அல்லால் வேறொன்று
அறியேன் பராபரமே!

அந்த இளம் மருத்துவர்கள்
நண்பர்கள் அனுதினமும்
மருத்துவ பணிக் காலத்தில்
படும் பணித்துயரங்களை
சீனியர் என்ற முறையில்
என்னிடம் பகிரும் போது
அவையடக்கம் கருதி...
எதுவும் விமர்சனம்
செய்யாமல் சற்று
விலகிச் செல்கிறேன்.

நாங்கள் மருத்துவம் படிக்கும்
அந்த நாட்களில் மருத்துவத்
துறையை நோபிள் புரபசன்
என்று பெருமையாக சொல்வர்.
ஹிரோசிமா நாகாசாகி
அணுகுண்டு பேரழிவிற்கு
பின்னர் விஞ்ஞானி ஆல்பர்ட்
ஐன்ஸ்டைனிடம் பத்திரிகை
யாளர்கள் கேட்டார்கள்.

சார் மறுபிறப்பு என்று ஒன்று
இருந்தால் நீங்கள் யாராக
இருக்க விரும்புவீர்கள்.
ஐன்ஸ்டைன் மிகவும் கூலாக
சொன்னார்..
ஐ ஜஸ்ட் வாண்ட்
டு பிகம் எ பிளம்பர்!
நோ மோர்
எ சயிண்டிஸ்ட்.

இப்போது என் போன்ற
மூத்த மருத்துவர்களுக்கும்
அப்படித்தான் சொல்லத்
தோன்றுகிறது.
Medical Profession is
No more a Noble Profession
DR HABIBULLAH
Former Honorary Secretary
Indian Medical Association
Kanyakumari District Branch


No comments: