Sunday, July 26, 2020

“பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிக இசையமைக்கவில்லை?” என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டபோது,

பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிக இசையமைக்கவில்லை?” என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டபோது, “நான் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் ஒரு கும்பல் எனக்கு எதிராக பாலிவுட்டில் இயங்குகிறது.” என வெளிப்படையாக கூறியிருந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, “வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை.” என டிவிட்டரில் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

“பாலிவுட்டை கையாளக்கூடியதை விட உங்களிடம் அதிக திறமை இருக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது.” என பாலிவுட் கலைஞர் சேகர் கபூர் டிவிட் செய்திருந்தார்.


இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம். ஆனால், நேரத்தை மட்டும் மீட்க முடியாது. செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன. அமைதியாக கடந்து செல்வோம்.” என சேகர் கபூரின் டிவிட்டிற்கு ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.


கவிஞர் வைரமுத்து, “வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை.” என டிவிட்டரில் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

https://www.ndtv.com/…/st-money-comes-back-fame-comes-back-…

No comments: