Tuesday, July 31, 2018

Zumba Fitness Let's Do It Again | J boog | Choreo by ZIN Shilpa Jadhav

கலைஞர் தமிழர் சமூக புரட்சி நாயகர்


dr.. Vavar F Habibullah
கலைஞர் 
தமிழர் சமூக புரட்சி நாயகர்

நண்பர் தாமஸ் திமுக தலைவரைப்
பற்றியே இன்று புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய கருத்தாக்கங்
களில் இவர் அதிகம் நாட்டம் கொண்டவர்.

தனி மனித வெற்றி ஒரு சமுதாய
வெற்றியாக மாற்றம் கொள்வது எப்படி ?
கலைஞர் சிறு வயது முதலே தமிழ் மொழியின் மீது தூய காதல் கொண்டவர். தமிழ்... இயல், இசை நாடகம் என முத்தமிழ் கலையிலும் வல்லவர்.அவர் முத்தமிழ் அறிஞர் என்பதை பிறர் அறியும் முன்பே தானறிந்தவர்.தன்னை பற்றிய திறமையை தெளிவாக அறிந்தவர்.
தனது தமிழ் ஆற்றலை எழுத்திலும் பேச்சிலும்
முறையாக கையாண்டு
அபார வெற்றிகளை குவித்தவர்.

Friday, July 27, 2018

கணவன் எப்படி மனைவியின் பேச்சிற்கு கட்டுபடுகிறான்..!?


திருமணத்திற்கு முன்பு வரை அம்மா பேச்சை கேட்டு வளர்ந்தவர்கள் திருமணம் ஆனதும் பெண்டாட்டி பேச்சை கேட்டு நடப்பது ஏன்..!?

பெண்டாட்டி சொன்னதெற்கேல்லாம் தலையாட்டி விடக் கூடாது என்ற எண்ணத்தில் திருமணத்திற்கு முன்பு தீர்மானமாக இருக்கும் ஆண் மகன் திருமணம் முடிந்ததும் தன் பிடிவாதத்தைத் தளர்ந்தி விடுகிறான்.

இதற்கு காரணம் சில நேரங்களில் பெற்றவர்களிடம் கிடைக்காத அன்பு மற்றும் பல..

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் ABU HASHIMA அபு ஆஷிமா


ABU HASHIMA

அன்று அவரது இயற்பெயர்
வாவர் எப் கரீமுல்லா
1980-களில் நாகர்கோவில் நகரில்
ஒரு பிரபல ‘பிஸினஸ் மேனாக’
இவர் திகழ்ந்தார்.
வாவர் பர்னிஷிங் ஹவுஸ்
வாவர் ஏஜன்ஸீஸ்
வாவர் விடியோஸ்
வாவர் மேன்பவர் & டிராவல்ஸ்
எல்லாம் இவரது நிறுவனங்கள் தான்
அந்த நாட்களில், தந்தை வாவர் ஹாஜியார் தலைமையில் மாவட்ட கலெக்டர் தான் இவரது பெரும்பாலான நிறுவனங்களை மிகவும் விமரிசையாக திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள்.
நவீன வீடுகள் கட்டும் திட்டத்தையும்
அந்நாட்களில் இவர் துவங்கினார்.
money making மட்டுமே அவரது
ஒரே குறிக்கோளாக இருந்தது.

Monday, July 16, 2018

Who spoils the children

Vavar F Habibullah
உன்னை அறிந்தால்...நான் ஒரு டாக்டர் ஆக வேண்டும்!
ஒரு தலை சிறந்த ஹீமடாலஜிஸ்ட்
ஆக வேண்டும்.ஹீமோபிலியா என்ற
கொடிய இரத்த ஒழுக்கு நோய்க்கு
புதிய மருந்தை
கண்டு பிடிக்க
வேண்டும்.இந்த நோயின் பிடியில்
இருந்து இளம் உயிர்களை காப்பாற்ற
வேண்டும்.அதற்காகவே நான் உயிர்
வாழ வேண்டும் டாக்டர் !

இன்று, என்னை மருத்துவமனையில்
சந்தித்த இந்த சிறுவனின் மன உறுதி சாதாரணமான ஒரு விசயமல்ல.தன்னால்
நிச்சயம் முடியும் என்ற தன்னம்பிக்கை அவன் கண்களில் பளிச்சிட்டது.

Tuesday, July 10, 2018

முக நூலும் பத்திரிகை மீடியாவும்

முக நூலும் பத்திரிகை மீடியாவும்

1980 களில் எல்லாம் பத்திரிகை
களில் எழுதினால் மட்டுமே வாசகர்
மத்தியில் பிரபலமாக முடியும் என்ற
நம்பிக்கை, எழுத்தாளர் மத்தியில்
நிலவியது. பத்திரிகைகளில் போட்டோ
சகிதம் செய்தி வந்து விட்டால்
கேட்கவே வேண்டாம்.

அப்போது எல்லாம்
நாகர்கோவில் நகரில்,
ஹிந்து ஆங்கில நாளிதழ் யார் யார்
வாங்குவார்கள் என்ற விவரம்
நியூஸ் ஏஜண்டுக்கு நன்கு தெரியும்.
வாங்கும் சிலர் கூட, அதை படித்து
பார்ப்பது இல்லை.கையில் வைத்து
இருப்பதையே ஒரு ஸ்டைலாக
கருதிய காலம் அது.

சம்சாரி ....!

சம்சாரி ....!

எண்ணங்களின் ஆர்ப்பரிப்பு
மனதில் ஒன்றவிடாமல் சிந்தனையை அலைக்கழித்தன

வார்த்தைகளின் அழுத்தங்கள்
செவிப்பறையை கிழித்து மதியை எட்டவிடவில்லை

நிகழ்ந்தவைகளின் கோர்வைகள்  நினைவில்வந்து எதிகாலத்தை  நிர்மூலமாக்க எத்தனிக்கின்றன

Saturday, July 7, 2018

குடும்பமும் குழந்தையும்

14 வயது இளம் பருவ மாணவன் ஒருவனை,
இரண்டு நாட்கள் முன்பு எங்களது மருத்துவமனைக்கு ஒரு மருத்துவ செக்கப்புக்காக, அவனது தாய் - அழைத்து வந்தார்.

மெயின் பிரச்சினைகளை, தாய் விவரித்தார்....
படிப்பில் கவனமில்லை
சரியான தூக்கம் இல்லை
எப்போதும் எரிந்து விழுகிறான்
சரியாக பேசுவதில்லை
எவரோடும் அதிகம் பழகுவதில்லை
அதிக சோர்வாக இருக்கிறான்
அதிகம் உணவு அருந்துவதில்லை

உண்மையைச் சொன்னால், அதிகம் மனச் சோர்வுற்று இருப்பது போல் தெரிகிறது.
பல மருத்துவர்களைப் பார்த்தாகி விட்டது.
உங்களை பற்றி சொன்னார்கள், அதனால் அழைத்து வந்தேன். ஒரே பையன் டாக்டர்....

Sunday, July 1, 2018

வசந்தம் வருகிறது

 "சுறுசுறுப்பாக இருங்கள் என்று அறிவுரை சொல்லிச் சொல்லி இன்று அது ஒரு நோயாகவே ஆகிவிட்டது.ஓர் அவசரகதி கவிந்து வாழ்க்கையின் இயல்பான அழகையே கெடுத்துவைத்துள்ளது.“உலகம் எங்கோ போய்க்கொண்டுள்ளது. எனவே நாம் ஒரு கணமும் தாமதிக்க முடியாது.” என்று எல்லோரும் ஓடுகிறார்கள்.உலகம் எங்கே செல்கிறது என்று யோசிக்க ஒருவரும் தயாராக இல்லை.

கொடுத்து வைத்தவர் ....


🏆
அதிகாலையில் எழுபவன்

🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்
                     
🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்   

🏆 மண்பானைச் சமையலை உண்பவன்

🏆 உணவை நன்கு மென்று உண்பவன்!

🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்

🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்

🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்

ஆணவம் எப்படி பிறந்தது.....??? அமைதி எப்போது பிறக்கும்.....???

❓கேள்வி.....

ஆணவம் எப்படி பிறந்தது.....???

அமைதி எப்போது பிறக்கும்.....???

❗ஓஷோ பதில் :

மனம் என்பது என்ன.....???
சேகரிப்பு தான் மனம்
மனம் என்றால் நினைவு
தன்னுணா்வு உள்ளே இருக்கிறது
நீ உள்ளே இருக்கிறாய்
நான் என்பது இல்லாமல் இருக்கிறாய்
உள்ளே நான் என்பது கிடையாது
பிறகு......
எப்படி நான், ஆணவம், என்பது உருவானது.....???
வெளி வட்டத்தில் ஒவ்வொரு கணமும்
தகவலறிவு, அனுபவம், நினைவுகள், ஆகியவை சேகரிக்கப்படுகிறது

இது தான் மனம்

ஒரு தந்தையாக இப்படித்தான் இருக்க வேண்டும்

எங்கள் வாப்பா...!

ஏ.கே.ரிபாய் சாஹிப் எங்கள் தந்தையார்.

ஒரு தந்தையாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு வாப்பாவிடம் ஏராளமான
முன்மாதிரிகள் இருக்கின்றன.

ஒரு தந்தையாக இப்படி இருக்கக் கூடாதோ...? என்பதற்கும் எக்கச் சக்கத் தகவல்கள் பொதிந்திருக்கின்றன.

நாங்கள் சகோதரர்கள் ஐவர்.
முந்திய நல்வரும் சுமார் இரண்டாண்டு இடை வெளியில் பிறந்தவர்கள். கடைக் குட்டி எனக்கே பத்து வயது இளையவன்.

எங்கள் தாய் தந்தையருக்குப் பிள்ளையாகப் பிறக்கத் துவங்கிய முதல் பிள்ளை
பெண் பிள்ளை.
இரண்டாண்டுகள் வாழ்க்கைதான் அவருக்கு இறைவன் வழங்கியயருள்.

அடுத்து நான்கு ஆண்கள். அவரில் நான்காவது நான்.

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்


*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚

LinkWithin

Related Posts with Thumbnails