இம்மை வாழ்க்கையில் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவியளித்தால் மறுமை வாழ்க்கையில் கருணையாளன் அல்லாஹ் நமக்கு சிறப்புகளை உள்ளடக்கிய அழகிய அந்தஸ்த்தை வழங்குவான் என்பதை நாமறிவோம் ....
உகாண்டா தேசத்தின் தலைநகர் கம்பாலாவிலிருந்து தோராயமாக 250 கி.மீ.தூரத்தில் கிழக்கு திசையில் அமைந்திருக்கும் 'பல்லிசா' என்கிற மாவட்டத்தின் ஏழை மக்கள் வசிக்கும் ஊரில் பள்ளிவாசல் கட்டும் நிலத்துக்காக உதவியளிக்க கோரும் விண்ணப்பத்தை அங்குள்ள பொறுப்பாளரான இமாம் வழியாக உகாசேவா தலைமைக்கு மே மாதம் அனுப்பப்பட்டது ....
செயற்குழு வல்லுனர்கள் நேரடியாக சந்தித்து உரையாடி தேவையினை பரிசீலித்து தீர்மானிக்க தற்போதைய கொரோனா சூழல் அனுமதி அளிக்காததால் அந்த வேண்டுகோள் கடிதத்தை செயற்குழுவின் வாட்ஸப் தளத்தில் பதிவு செய்யப்பட்டது ....
குறிப்பிட்ட நிலத்துக்குரிய விளக்கங்களை அறிந்திட பலவிதமான கருத்துரைகள் எழுத்து வடிவத்தில் பரிமாறப்பட்டு சம்மந்தப்பட்டவர் அதற்குரிய விவரங்களோடு உறுதியளித்ததும் செயற்குழுவினர் தத்தமது பங்களிப்பை அறிவிக்க ஆயத்தமாகினர் ....
அன்பர்களே சற்று பொறுங்கள் என்றுரைத்து நானும் எனது மருமகனாரும் நிலத்துக்கு தேவையான பங்களிப்பு நிதியினை முழுமையாக வழங்குகிறோம் என்கிற பலமான கனமான குரல் எமது செவிகளில் ஊடுருவி எமது உதவிக் கரங்களை தடுத்து தமது உதவிக் கரத்தை நீளமாக நீட்டினார் ....
உகாசேவா அமைப்பின் கம்பீரமான பொதுச் செயலாளர் 'எம்மெஸ் சலீம்' மற்றும் அமெரிக்கா தேசத்தில் பணியாற்றும் அவரது மருமகனான 'முஸம்மில் ஜஹபரும்' பள்ளி கட்டும் நிலத்துக்கு தேவைப்படுகிற தொகையான 50,000 ரூபாயை (2.5 மில்லியன் ஸில்லிங்ஸ்) மனமுவந்து அளித்தனர் என்பதை பதிப்பதில் மிகவும் மகிழ்வடைகிறேன் ....
ஜூன் மாதம் வழங்கப்பட்ட நன்கொடை தொகையினை உகாசேவா நிர்வாகம் பொறுப்பாக அனுப்பி உரியவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு பெற்றுக் கொண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டது ....
ஈகை மனசோடு பேருதவியாற்றிய நல்லெண்ண தன்மைகளை தமக்குள் சுமக்கும் மாமாவுக்கும் மருமகனுக்கும் வல்லோன் இறைவன் நன்மைகளை விரிவாக விரிப்பானாக ....
'பல்லிசா' மாவட்ட பள்ளியின் இமாமோடு அலைபேசியில் தெளிவாக பேசி நிலத்துக்கான நிலைகளையும் விவரங்களையும் கேட்டறிந்து முறையான உறுதியான தகவல்களை எமக்கு விளம்பிய உகாசேவாவின் முன்னாள் தலைவரும் சீரிய சிந்தனையாளருமான அன்பிற்குரிய தம்பி அகமது கனிக்கு உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் ....
எனது முகநூல் நட்பாளர்களான
ஆகிய அன்பான இருவருக்கும்
வளங்கள் பெருகட்டுமாக
உறவுகள் மகிழ்வாகட்டுமாக
இறையருள் பொழியட்டுமாக ....
நிலத்துக்கு நிதியளித்தோரின்
நலத்துக்கு பிரார்த்திக்கிறேன்
உளமார்ந்த வாழ்த்துக்கள் ....
அப்துல் கபூர்
No comments:
Post a Comment