Monday, July 13, 2020

எங்கே இறைவன்


எங்கே இறைவன்
(A SUFI VISION)
not meant for all
Vavar F Habibullah
கண்ணில் நீ
கருத்தில் நீ
காதில்
விழும் சொல்லில் நீ
பேச்சில் நீ
என் மூச்சும் நீ.

உள்ளில் நீ
நெஞ்சில் நீ
உணர்வில் நீ
என் உயிரும் நீ


ஆதியும் நீ
அந்தமும் நீ
எல்லாமும் நீ
எங்கும் நிறைந்தவன் நீ

அன்பும் நீ
கனிவும் நீ
என்றே உன்னைத் தேடி
ஊரெல்லாம்
உலகெல்லாம்
அலைந்த என்னில்

உள்ளொளி பெருக்கி
உயிர்ப் பெறச் செய்து
இதயம் திறந்து
ஞானச்சுடர் ஏற்றி
பாதை காட்டிய போது

ஆஹா
என்னவென்பேன்
என்னவென்பேன்!
கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன்!
இறைவா....
உன் இருப்பிடத்தை!!

அறிவீராக...நிச்சயமாக
இறைவன் மனிதனுக்கும்
அவன் இதயத்திற்கும்
இடையே இருக்கிறான்.
அல்குர்ஆன் 8:24
and know that
God stands between
man and his heart.



No comments: