Friday, May 31, 2013

எழுத்து புரம் கட்டுரையில் படித்ததில் பிடித்தது


 என்னுடைய அலுவலகத்தில் ஏசி இருக்கிறது. எனக்கு தனி கேபின் அளித்திருக்கிறார்கள். சன்னலை திறந்தால் மாமரத்தில் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. அணில்கள் ஓடி விளையாடுகின்றன. பேருந்து நிறுத்தத்தில் சுடிதார் அணிந்த பெண்கள் நிற்கிறார்கள். டிராஃபிக்கில் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்கின்றன. பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுகிறார்கள். சினிமா தியேட்டரில் படம் ஓட்டுகிறார்கள். என்னுடைய வாழ்க்கை இன்பங்களால் ஆனது. காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் ‘ஜெலுசில்’ வாங்க மருந்துக்கடைக்கு போகும் வாழ்க்கை அல்ல.

எழுத்தாளன் என்பதால் எனக்கு எல்லோரும் தரும் மரியாதையை மற்ற எழுத்தாளர்களுக்கும் தருகிறார்கள் என்று பொதுமைப்படுத்த விரும்பவில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்ததுமே அங்கிருக்கும் எழுத்தாளர்களை போய் முதலில் சந்தித்தார் சித்தராமையா.

Saturday, May 25, 2013

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-4 >ஜப்பான் )நடந்த நிகழ்வு
நான் ஜப்பான் சென்றிருந்தபோது ஒரு டேக்சியில் டோக்கியோ டவர் பார்க்கச் சென்றேன் . பிரயானதிர்க்கான டேக்சி மீட்டர் தொகையை கொடுத்தேன் .டேக்சி ஓட்டுனர் பாதித் தொகையை திருப்பித் தந்தார் . அவர் தவறுதலாக வழியை மாற்றி வந்து விட்டதால் 'உண்மையாக டோக்கியோ டவர் வர எவ்வளவு ஆகுமோ அது போதும்' என்பதாக சொன்னார்.
இந்த நேர்மை நம் தமிழ்நாட்டிலும் வர வேண்டுமென அப்பொழுதே விரும்பினேன்

 

 படத்தில் ஜப்பானிய பெண் பக்கம் நான் .(ஆடாத ஆட்டமென்ன )இப்படத்தை படத்தில் அமெரிக்கர் படம் எடுத்து அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைத்து என்னையும் அமெரிக்கா வர அழைப்பு கொடுத்தார்பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -3). நான் பல நாடுகள் பார்த்து வர சுற்றுலா சென்றபோது பாரிசிலிருந்து ...

Oct 18, 2012
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-2). ஹாங்காங் விமான ஒடும்பாதும் பாதை மிகவும் குறைவான தூரம். உலகில் ...
Sep 15, 2012
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! சென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது ...

Friday, May 24, 2013

5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!

“மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் தரும் தொழில் எனக் கேள்விப்படுகிறேன். பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கின்றன, தண்ணீர் சேமிப்புதான் நாம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினை. 2025ம் ஆண்டில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பெட்ரோலிய நிறுவனங்களைப் போல (கோடிகளில் புரளும்) ஆகிவிட்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ”

- இளைஞர்களிடம் உரையாற்றும் போது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (ஜூலை 17, 2010)

“வாரத்துக்கு சராசரியாக ஐந்து கேன் வாங்குகிறோம். குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கேன் தண்ணீர்தான்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த குடும்பத்தலைவி தேவிகண்ணன். இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என்று நாலு பேர் கொண்ட குடும்பம். ஒரு கேன் தண்ணீர் இருபத்தி ஐந்து ரூபாயிலிருந்து, முப்பத்தி ஐந்து ரூபாய் வரை சென்னையில் விற்கிறது. எனவே ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பட்ஜெட்டில் வாரத்துக்கு குறைந்தபட்சம் நூற்றி இருபத்தைந்து ரூபாயாவது குடிநீருக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறது. மாதத்துக்கு ஐநூறு ரூபாய். வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய்.

Wednesday, May 22, 2013

கடல் கடந்த கட்டளைகள் !

வெளிநாடு சென்று வருவதற்கு முன் அனுப்பப் பட்ட செய்தி (இப்படியும் நடக்கலாம் )

மின்சாரமில்லை இன்வர்ட்டர் வைக்க வேண்டும்
பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட பீஸ் கட்ட வேண்டும்
எனக்கும் எங்கள் வீட்டுக்கும் கொடுக்க வேண்டியதை தனியே எங்கள் வீட்டுக்கு அனுப்பி விடவும்
உங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதில் எனக்கும் பொருள் சேர்த்துக் கொள்ளவும்
ஊருக்கு வந்து அனுப்பிய பெட்டி பிரிக்கும்போது நானும் இருக்க வேண்டும்
செலவுக்கு தேவையான பணம் கொண்டு வரவும்
வந்த பின் 'அது வாங்க பணமில்லை' என்று சொல்லக் கூடாது
அங்குள்ள நகைகள் நல்ல தங்கத்தில் இருக்கும் அதில் வளையல் ,செயின் வாங்கி தனியே கொண்டு வாருங்கள்
இதற்க்கெல்லாம் பணமில்லையென்றால் கடன் வாங்கி பிள்ளைகள் படிப்புக்கும் , குடும்ப செலவிற்கும் பணம் அனுப்பி வைத்து விட்டு நான் விரும்பியது அனைத்தும் கிடைக்க வழி கிடைக்கும் வரை அங்கேயே இருந்து பணம் சேர்த்த பின் வாருங்கள் .

இரண்டு வருடம் கழித்து அனுப்பிய செய்தி
ஏன் இன்னும் ஊர் வராமல் இருக்கிறீர்கள்
'பிள்ளைகள் அப்பா எப்ப வருவார் வருவார்' என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
ஊருக்கு வந்து சேருங்கள் . ஒரு பொருளும் வேண்டாம் நீங்கள் வந்தால் போதும் .

கணவனின் பதில்
உன் ஆசைப்படி பிள்ளைகளுக்காக ஊர் வர முடிவு செய்து விட்டேன்.அடுத்த வாரம் வந்து விடுவேன்

Friday, May 17, 2013

உலகம்


சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது

அழுங்கள்
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்

பாடுங்கள்
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன

பெருமூச்செறியுங்கள்
அவை
காற்றினில்
காணாமல் போகின்றன

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை

வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்

Tuesday, May 14, 2013

உறவும், பாசமும்,மார்க்கமும்(மதமும்) மனிதநேயத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்

Dr.Suri mama letters.Dr.Suri is a Brahmin how is attached with our family.It is wonderful .

எங்கள் தகப்பனாரும்(S.E..A. Abdul Kader) அவர்களது மூத்த சகோதரர்ரும் (S.E.A.Abdul Rahman) மிகவும் பாசத்தோடு வாழ்ந்தார்கள்.அவர்கள் வாழும்  காலத்தில் மயிலாடுதுறையில் சிறப்பாக வியாபாரம் செய்தார்கள் .அனைத்து மக்களுடனும் நேசமாக இருந்தாகள் . பிராமண குடும்பத்தை சார்ந்த பெரியவர் குடும்ப பாசத்தோடு  இருக்க முதியோராகி உடல்நலம் பாதிக்கப் பட்டு இறக்கும் தருவாயில் தனது சிறு வயது மகளையும் (ராஜம்) மகனையும்  (சூரி) பாதுகாத்து வளர்த்து வரும் பொறுப்பினை S.E.A.Abdul Rahman அவர்களிடம் விட்டு இறைவனடி சேர்ந்தார். .அவர்கள் வசதி குறைவானவர்கள் அல்ல.
அவர்களை பிராமண முறைப்படி  வளர்த்து வந்தார்கள். எங்களுக்கு அவர்கள் உடன்பிறவா சகோதரி,சகோதரர்ராக வளர்ந்தாகள்.
ராஜம் அக்காவுக்கு கேப்டன் Dr . அண்ணாசாமி அவர்களுக்கு திருமணம்  செய்து வைத்தார்கள் , Dr. அண்ணாசாமி சென்னை T .நகரில் புகழ்பெற்ற கண் மருத்துவராக பணி  செய்தார்.
அண்ணன் Dr  சூரி அவர்கள் லாயட்ஸ் சாலையில் மருத்துவ தொழிலும் மற்றும் மருந்தகம் வைத்திருந்தார் .அந்த கடையின் பெயரின் முதல் மூன்று எழுத்துகள் எங்கள் குடும்பத்தைக் குறிக்கும் (SEA )சொல்லாக இருக்கும் கடையின் பெயர் SEAMARS CORPARATION .   SEA - எங்கள் குடும்பத்தைக் குறிக்கும், R -ராஜம்,S- சூரி அவர்களது குழந்தைகள் சிறப்பாக படித்து உயர்ந்த பதவியில் அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் வாழ்கிறார்கள்.
Dr  சூரி அவர்கள் வாழும் காலம் வரை எங்களது பெரியப்பா படத்தினை கடவுள் படத்திற்கு பக்கத்தில் வைத்து மரியாதை தருவார் .
அவர்கள்  இஸ்லாமிய முறைப்படியே எங்களை முறையிட்டு அழைபார்கள்.
(பெரிய சரித்திரம். சுருக்கமாக தந்துள்ளேன்) நான் சென்னையில் படித்ததால் தொடர்ந்து அவர்களை பார்த்து வருவது வழக்கம்
அவர் எழுதிய மடல்களை அவசியம் பாருங்கள்.
ஆரம்பம் 1 ல் 786 வைத்து தொடங்கும்.
( கடிதத்தை கிளிக் செய்து பெரிது படுத்தி படியுங்கள் )

" பெட்டகம் " அபூஹாஷிமா வாவர்

" பெட்டகம் " பாகம் ஒன்று 2001 ல் வெளியிட்டேன். A 4 சைசில் 356 பக்கங்கள் கொண்டது. இதில் குமரி மாவட்ட வரலாறு மட்டுமல்ல... தமிழக முஸ்லிம்களின் வரலாறும் இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்த வரலாறும் இருக்கிறது. இப்படிப்பட்ட வரலாற்று நூல்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு புதுசு என்பதால் அப்போது இதற்கு

மக்களிடம் அத்தனை வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. ( 2001ல் இதன் விலை வெறும் 100 ரூபாய். அதுவே மிகவும் குறைவு. ஆனால் மக்களுக்கு அது அதிகம் )இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Thursday, May 9, 2013

பின் தங்கிய சிறுமியிடமிருந்து .....

மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்

தெளிதல்

ஏமாற்றத்தின் சலனங்களோடு
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை

Tuesday, May 7, 2013

சொர்க்கமென்று தெரியாதவன் ...

சொர்க்கமென்று தெரியாதவன் ...

*****

அல்லாஹ் எனக்குத் தந்த

பேரருளே

என் உம்மாதான்!(அம்மா)

(உம்மா என்றால் கர்ப்பம் தரித்து பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்து தாய்ப்பால் தந்து வளர்த்த தாய் )

***

உம்மா முகத்தில்தான்

எத்தனை அமைதி...

எத்தனை சாந்தம்!

***

முக்காடு நீங்காதா உம்மா

வீட்டு மேகத்துக்குள்

மூடிக் கிடந்த

முழு நிலா!

***

முஹம்மதரின்

உம்மத்தாயிருந்ததில்

அர்த்தமுள்ள ஆச்சரியம் என் உம்மா!

***

Saturday, May 4, 2013

சொல்மந்திரம் - புதுசுரபி


சொல் - இது உள்ளத்தில் பிறக்கும் உணர்வின் ஒலி வடிவம்.


’ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’.


இது தமிழகத்தில் அதிகமாய் அறியப்படும் ஒரு சொல்லாடல்.


வள்ளுவர்கூட,


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.


ஒரு சொல்லினால் பிறர்க்குத் துன்பம் தருவதிலிருந்து நீங்கி இனிய சொல்லாக, இன்பம் தரும் சொல்லாக, மனதிற்கு தெம்பூட்டும் சொல்லாக மாறும் போது அச்சொல் வழங்குவோனுக்கும், வழங்கப்பெறுவோனுக்கும் இக்காலத்திற்கும் மறுமைக்கும் இன்பம் தரும் என்கிறார்.


’சரி.. சரி.. சொல்ல வந்ததை சொல்ல வேண்டியதுதானே...’ ங்றது கேட்குது...


1994ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் பனிச்சறுக்கல் போட்டியில் அதிவேக பனிச்சறுக்கு வீரர் டான் ஜான்ஸேன் தங்கம் வென்றார். இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது எது தெரியுமா?

ஒரு ’சொல்’ அந்த ஒரு ’சொல்’ தாங்க...


டான் 12 வயது சிறுவனாய் இருந்த போது ஒரு நகரில் நடந்த சறுக்குப் போட்டியில் கலந்து கொண்டார். அவருக்கு முதலிடம் எட்டாக்கனியானது.

போட்டி முடிந்து கவலைதோய்ந்த முகத்துடன் தந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.


அப்போது அவர் மனதை, ’தம்மை தந்தை என்ன ‘சொல்’லப் போகிறாரோ??’ என்ற கவலை மட்டுமே ஆட்கொண்டிருந்தது.

தந்தையோ ஒன்றுமே ‘சொல்’லாமல் வீடு வந்து சேர்ந்தார்.


படுக்கையில் உறக்கமில்லாமல் தவித்த டானுக்கு அப்பா வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

நியாயம் வழங்குவதில் இனவாதம் மறுக்கப்படவேண்டும்


பாலைவனத்தில் முகம்மது நபி (ஸ.அ) அவர்களோடு நபித் தொழர்ளும் பிரயாணம் செய்துக் கொடிருந்தார்கள்.பாலைவனத்தின் வெயிலின் கொடுமை அவர்களுக்கு தாகத்தை அதிகமாக்கியது.வைத்திருந்த குடி நீர் பற்றாக்குறை. போகும் வழியில் நீர் தேக்கத்தினை கண்ட தோழர்கள் வேகமாக அந்நீரை நோக்கி ஓடினார்கள்.போகும் வேகத்தில் மக்காவாசித்(முஹாஜிரின்) தோழரின் காலை மதீனாவாசி (அன்சாரி)தவறுதலாக மிதித்து விட்டார் .அதில் கோபமடைந்த மக்காவாசி(முஹாஜிரின்)மதீனாவாசியை  (அன்சாரி) அடித்துவிட்டார். உடனே அந்த அன்சாரித் தோழர் கோபமாக அடைக்கலமாக வந்த உங்களுக்கு 'நாங்கள் வீடும் உணவும் கொடுத்து உபசரித்தோம் அதனைக் கூட நினைத்துப் பார்க்காமல் அடித்து விட்டாயே' என்று சொல்லியதோடு மக்காவாசி(முஹாஜிரின்) அடித்து விட்டார் வாருங்கள் மதீனாவாசிகளே  (அன்சாரி)வந்து பாதுகாப்பு கொடுங்கள் என கூவி தங்களைச் சேர்ந்தவர்களை அழைக்க அந்த இடத்திற்கு மதீனாவாசிகள்  (அன்சாரிகள்)ஓடி வர இதைக் கண்டு பயந்த மக்காவாசி(முஹாஜிரின்) தங்களது மக்காவாசி(முஹாஜிரின்) மக்களை அழைத்தார் . பெரிய கூட்டமாக இருவருக்கும் ஆதரவாக கூட்டம் கூடி ஒரு பெரிய கலவரம் நடக்கும் அளவுக்கு போய் விட்டது. இது முகம்மது நபி (ஸ.அ) அவர்கள் அறிய வர அவர்கள் அவர்களிடம் மிகவும் கோபமாக சொன்னார்கள் . தவறு செய்திருந்தால் தவறின் அடிப்படையில் தண்டனை கொடுங்கள் அதைவிடுத்து இன மற்ற இடத்தினைச் சார்ந்தவர் என்பதனை வைத்து குறுகிய நோக்கம் கொண்டு செயல்படாதீர்கள் என்று எச்சரித்தார்கள்.
 --------

'கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவனல்ல.அரபியனைவிட அரபியரல்லாதவனோ, அரபியரல்லாதவனைவிட அரபியனோ சிறந்தவனல்ல.உங்களில் இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் மேன்மையானவர்கள்'.-நபிமொழி

-------------------

LinkWithin

Related Posts with Thumbnails