Friday, September 29, 2017

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அக்பர் அலி (Nidur AbuAyman)

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அக்பர் அலி (Nidur AbuAyman)


அல்ஹாஜ், அக்பர் அலி (Nidur AbuAyman) அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் அக்பர் அலி (Nidur AbuAyman ) அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)


'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி  கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

அக்பர் அலி (Nidur AbuAyman)அவர்கள் நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அக்பர் அலி (Nidur AbuAyman ) மார்க்க சேவை அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவர்களது காணொளி  பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அவரது ஆக்கங்களை முகநூலில் அவரது பக்கத்தில் பார்க்கலாம் .

 அக்பர் அலி (Nidur AbuAyman ) அவர்களது சொந்த ஊர் நீ டூர் நெய்வாசல்
  தனது ஊரில் இருந்துக் கொண்டு பல சேவைகளை செய்து வருகின்றார் மற்றும் அவரது மார்க்க சேவை பேரிசிலும்(PARIS) தொடர்கின்றது. அவரது குடும்பம் அங்கு இருப்பதால்
அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".

Nidur AbuAyman அவர்களின் சேவையை வாழ்த்தி
நீடூர் நெய்வாசல் பெரியபள்ளிவாசல் துணை இமாம் சாஹ்மதார் மிஸ்பாகி அவர்கள் பேசுகின்றார்

Wednesday, September 27, 2017

சாமத்து ரோசாப்பூவு


பல்லவி

சாமத்து ரோசாப்பூவு
உன்ன யெண்ணி வாடுதய்யா

உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும்
வீதியெல்லாம் தேடுதையா…

கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா…

கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…

      ( சாமத்து ரோசாப்பூவு)

பள்ளிப் படிப்பின்றி அள்ளிக் குவித்த புகழுரைகள் ! -சாதனைப் பெண்மணி மலிக்கா ஃபாரூக்


       கவிதை… நிகழ்வுகளை சுவாரசியமாக ரசிக்கவும், ரசிக்க வைக்கவும் எழுத்துக்களில் வடிக்கத் தெரிந்தவர்களுக்கு வசப்பட்ட எளிதான கலை. ஆனால் பொய்ப் புனைவுகளை விதைக்காமல், மிதமிஞ்சிய கற்பனைகளை புகுத்தாமல், ஆபாசங்களை துளியளவும் திணிக்காமல், கண்ணியம் பேணும் எழுத்துக்கள் மூலம் கவிதை படைத்து சாதிப்பதெல்லாம் எளிதான காரியமில்லை. எழுத்துக்கும் ஓர் எல்லை உருவாக்கி அதில் சாதித்துவரும் பெண் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
·         இதுவரை இரு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார், இரண்டுமே பிரபல பதிப்பகமான  மணிமேகலை பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.
·         அமீரகத்தில்  , இலங்கை காப்பியக்கோ திரு ஜின்னாஹ்  ஷரிபுதீன்  அவர்களால்  தமிழ்தேர்  மாதயிதழ்  விழாவில்  முதல் விருது வழங்கப்பட்டது
·         இவரின் முதல் கவிதை நூல் "உணர்வுகளின் ஓசை" கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையால் 2011ம் ஆண்டின் சிறந்த நூலாய் தேர்வுசெய்யப்பட்டது
·         இரண்டாம் நூலான "பூக்கவா புதையவா" அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகத்தால் சிறந்து நூலென தேர்வுசெய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது.
·         இலங்கை தடாகம் நடத்திய உலகலாவிய கவிதைப்போட்டியில் முதலிடம் வந்து "கவியருவி"யெனும்  பட்டம் வழங்கப்பட்டது.
·         திரு  மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் "கையருகே நிலா” நூல் வெளியீட்டு விழாவினை தொகுத்துவழங்கிய  இவரின் தமிழை ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ‘ அழகிய தமிழ் உச்சரிப்பு’ என  பாராட்டிச் சென்றார்.
·         முத்துப்பேட்டையில் ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடந்த “முதல்  பெண்கள் விழிப்புணர்வு" மாநாட்டை தொகுத்து வழங்கினார்.
இத்தனை சாதனைக்கும் சொந்தக்காரர் ஐந்தாம் வகுப்பையும் தாண்டாதவர் எனில் இன்னும் ஆச்சர்யம் தொற்றிக்கொள்கிறதா? சகோதரி மலிக்கா ஃபாரூக்அவர்கள் தான் இத்தனைக்கும் சொந்தக்காரர். இம்முறை சாதனைப் பெண்மணி பகுதியை அலங்கரிக்கவிருக்கிறார்.


பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன


பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன
அன்று இதை இலங்கைத் தமிழர்களுக்காக எழுதினேன். இன்று வாசித்தேன். மயன்மரில் (பர்மாவில்) நிகழும் இனப்படுகொலையோடு ஒத்துப் போகிறது. உலகம் என்று மாறும் என்றுதான் தெரியவே இல்லை...

குங்குமப்பொட்டிட்டு மல்லிகைப்பூச்சூடி 
பொழுதுக்கும் நர்த்தன மணியவிழும் 
சிந்தாமணிச் சிரிப்புதிர்த்து
பள்ளிவிட்டு வரும்வழியில் பல்லாங்குழியாடி
சாயுங்காலமும் சாயும்பொழுதில் 
தாய்மடி தலைசாய்த்து வளர்பிறைக் கனவுகாணும் 
பத்துவயதுப் பருவமகளைத் 
தூக்கவும் முடியாப் பெருந்துப்பாக்கி ஏந்திப்
போராடக் கொடுத்தவள்
வானுயர்ந்த ரத்த மேடாகக் குவிந்துகிடக்கும் 
பிணங்களடியில் எப்பிணம் 
மகள் பிணமோவென்று 
தேடிச் சாய்கிறாள்

அகல எல்லை நீளங்களையும்....

தமிழ் பிரியன் நசீர்
அகல எல்லை
நீளங்களையும்
அங்குல மங்குலமாய்
உலகை அளவெடுத்து
பகலும் இரவும்
நூல்கோர்த்துப்
பார்த்துப் பரிணாம
ஊசியதால் நெய்து
பல வண்ண ஆடை
அணிகலன்களைப்
பரப்பி மேல் பூமிப் போர்த்தி
நலம் செய்வோன் நாமே என்றான்.!!
புகழையும் பெயரையும்
பிச்சைக் கேட்டு
போதைத் தட்டுக்களைக்
கையிலேந்தி........
நகலையும் மெய்யென்றே
உரைத்தவனும்.........
நாகரீகக் கோமாளிபோல்
வேடமணிந்தான்...!!

Tuesday, September 26, 2017

கொஞ்சும் உன்னையும் பிடிக்கும்.♥♥♥
Saif Saif
ஆறுதல் சொல்லும் 
அன்பு பிடிக்கும்.
அதட்டல் போடும் 
ஆளுமைப் பிடிக்கும்.
காக்க வைக்கும் 
தவிப்பு பிடிக்கும்..
கண்டதும் உள்ள 
பரவசம் பிடிக்கும்.
வாடும் முகத்தை 
பார்க்கப் பிடிக்கும்.

அனுபவிப்போருக்கே தெரிந்த வலியிது

Iskandar Barak
ஏர்போர்டில் சந்தித்தேன்
சார் சென்னைக்கா போறிங்க
ஆமாங்க ..நீங்க?
நானும் தான் சார்
லீவுங்களா
ஆமாங்க ..உங்களுக்கு?
அதை ஏன் சார் கேக்குரிங்க என் நேரமே சரியில்லங்க
என்னங்க சொல்ரிங்க
என் பேரு கணேசன் விழுப்புரம் கூவாகம் பக்கம் கிராம்ம் நான் சார் ஊர்ல கஷ்டம்னு தெரிஞ்ச முஸ்லிம் ஒருத்தரோட உதவியில கத்தர் வந்தேன் வந்து ஏழுமாசமா நல்லா வேல பாத்து மாசம் 25 ஆயிரம் வீட்டுக்கு அனுப்பி பசியார சாப்டு கடனும் கொடுத்துட்டுயிருக்கும் போது இப்ப சவுதியோட சண்டையால கம்பெனியில வேலையில்லனு 90 பெற எடுத்தாங்க அதுல நானும் யுன்னொரு தமிழ் ஆளு மேலூரச்சேர்ந்தவரு பேரு சாகுலு அவரும் பாவம் என்னைமாதிரிதான் நாளைக்கி ப்ளைட்டு அவருக்கு
கெஞ்சி கெதரி பாத்தோம் வேற வழியேயில்லனு கணக்கு முடுச்சு அனுப்பிட்டாங்க விதியேனு போறேன் சார் ..னு அழுதார்
வேதனைதான்

Sunday, September 24, 2017

அன்பின் அழகிய மகள்

==ரமீஸ் பிலாலி==

அன்பின் அழகிய மகள்

தமிழின் அதி சிறந்த அறநூல் திருக்குறள். அதில் தமிழ் என்னும் சொல்லே இல்லை! யாரோ ஒரு புண்ணியவான் எழுத்தெண்ணிப் படித்து இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்.

இரவெல்லாம் அமர்ந்து ஒவ்வொரு குறளாக விடிய விடிய ஆய்ந்து அதில் வெண்பா இலக்கணம் எவ்விடத்தும் பிழைபடவில்லை என்று கண்டறிந்தாராம் வைரமுத்து. ’தேவையா இந்த வேலை?’ என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதனால், வெண்பா எழுதும் திறன் அவருக்குக் கைவந்ததாம்.

Saturday, September 23, 2017

தேடல் ....! (பாகம் - 3 )

எதிர்பார்ப்பின் தேடலில்
என்னையே தொலைத்தேன்
முடிவிலும்  எஞ்சியிருந்தது
நம்பிக்கையென கண்டேன்

சத்தியத்தின் தேடலில்
காலத்தை விரயம்செய்தேன்
உள்ளத்தின் தூய்மையில்
சாத்தியமென கண்டேன்

முகம் மூடி அகம் திறப்பவர்கள்

*
முகமூடிகளாய் வந்து, இணையத்தில் புகுந்து விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன்.

எனக்குள்ளும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த பலரின் முகத்தையும் நான் பொதுவில் காட்டவே விரும்புகிறேன். அதுதானே நான்?

என்னை அன்புடையோனாகப் பார்ப்பவர்கள்
அன்புடன் நிர்வாகியாகப் பார்ப்பவர்கள்
கருணையுடையோனாகப் பார்ப்பவர்கள்
பலவும் எழுதும் கவிஞனாகப் பார்ப்பவர்கள்
காதல் கவிஞனாக பார்ப்பவர்கள்
தமிழ்ப் பற்றாளனாகப் பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வியப்போடு பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வெறுப்போடு பார்ப்பவர்கள்
தனிமனித கீறலை விரும்பாதவனாகப் பார்ப்பவர்கள்
மதங்கள் கடந்த கடவுளையே நேசிப்பவனாகப் பார்ப்பவர்கள்

இப்படியே அடுக்கலாம்.....

வாழ்க்கைத் தரு ...!

விதையின் வீரியம்
எண்ணத்தில் வேண்டும்
விழுந்ததும் முளைத்தெழும்
மனஉறுதி வேண்டும்
வேரின் உறுதி
நிலைப்பாட்டில் வேண்டும்
தண்டின் நிமிர்வு
தன்மானத்தில் வேண்டும்
கிளைகளின் பரப்பு
உறவுகளில் வேண்டும்

Friday, September 22, 2017

அறிந்த நண்பர்களில் சிலர் விடுபட்டவர்கள் பலர்

அகல எல்லை நீளங்களையும் அங்குல மங்குலமாய் உலகை அளவெடுத்து

தமிழ் பிரியன் நசீர்

அகல எல்லை
நீளங்களையும்
அங்குல மங்குலமாய்
உலகை அளவெடுத்து
பகலும் இரவும்
நூல்கோர்த்துப்
பார்த்துப் பரிணாம
ஊசியதால் நெய்து
பல வண்ண ஆடை
அணிகலன்களைப்
பரப்பி மேல் பூமிப் போர்த்தி
நலம் செய்வோன் நாமே என்றான்.!!

Thursday, September 21, 2017

இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறந்த விதம்

தக்கலை கவுஸ் முஹம்மத்புனித மக்காவில் ஓரி​றைக் கொள்​கையை ஏற்​றுக் கொள்​ளாத மக்​க​ளால் எண்​ணற்ற தொல்​லை​க​ளுக்​கும் துய​ரங்​க​ளுக்​கும் ஆளா​னார்கள் அண்​ண​லார் நபி ஸல் அவர்கள் மெக்கா வாழ் மக்​கள் நபிகளாரை கொலை செய்​ய​வும் துணிந்​து​விட்ட நேரத்​தில்,​ மெக்​காவை விட்டு அவர் மதி​னா​வுக்​குச் செல்​லப் புறப்​பட்ட காலத்தி​லி​ருந்து தொடங்​கு​வதே ஹிஜிரி ஆண்டு. இது “ஹிஜ்​ரத்’ ​(புனி​தப் பய​ணம்)​ என்​னும் அர​பிச் சொல்லி​லி​ருந்து பிறந்த வார்த்​தை​யா​கும்.

Wednesday, September 20, 2017

பிறகும் தொடரும் தீவின் மழை

மழை வெளி நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை உலர்த்தும் புற்பாதையில்
மீதமிருக்கும் நம் பாதச்சுவடுகள் இன்னும்
எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது
தீவின் எல்லாத் திசைகளிலும்
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்

Monday, September 18, 2017

மழையில் நனைந்தும்

ராஜா வாவுபிள்ளை

மழையில் நனைந்தும்
ஆசை தீரவில்லை
காக்கை குளியல்!
#கொஞ்சம்_விளக்கம் தருகிறேன்.
பகல்நேர மழையில் நன்றாக நனைந்து விட்டாலும் சாலையில் இருக்கும் சிறு குழிகளில் தேங்கிய நீரில் காக்கை குளியல் போடுவது சிறுவனாக கண்டு ஆச்சர்யமாக பார்த்து மகிழ்ந்த இயற்கை நிகழ்வு, காணக் காண தெவிட்டாத ஒரு காட்சி.

நெல் விளைந்தால்தானே நமக்கு சோறு....!

கடந்த வாரம் மனைவியையும் இரு பிள்ளைகளையும் டூவீலரில் வைத்து அழத்துக்கொண்டு மயிலாடுதுறைக்கு செல்லும் வழியில் நீடூர் இரயில்வே கேட்டை தாண்டி அதன் அருகாமையில் இருந்த வயல் வெளிகள் சிலவற்றில் நெல் நாற்று நடப்பட்டிருந்தது!
அதைப்பார்த்துவிட்டு எனது மூத்தமகள் கேட்டால் அத்தா..! இது என்ன செடி..? என்று.
நான் சொன்னேன் இது நெல் நாற்றுடா செல்லம்..! இதை இங்கே நடவு செய்து பயிர் செய்தால்தான் நெல் விளையும்! அதிலிருந்து நமக்கு அரிசி கிடைக்கும் அதை சமைத்தால்தான் நாம் சாப்பிடும் சோறு என்றேன்!

Saturday, September 16, 2017

இறைவா..

நீயே எங்களை படைத்தாய்..
இன்பத்தை தருகிறாய்..சில
நேரங்களில் துன்பத்தையும் தருகிறாய்.
இன்பம் தரும் போது உன்னை
மறந்து போகலாம்..
துன்பம் வரும் போது உன்னை
தூற்றவும் செய்யலாம்..
அதையெல்லாம் நீ வகை
செய்வதே இல்லை..
செய்த உதவியை ஒரு போதும்

அகக்கண் காட்சி ....!

என்னுள் எல்லாமே
நிறைந்து இருந்தது ஒன்றும் இல்லாமலே
இருந்தது எல்லாமே என்னைத் தேடுகின்றன
ஓய்வும் ஒழிவுமின்றி !
வாழும் வழிகள் அனைத்தும்
எனது இருப்பிடம்
பார்த்து திருப்பி விடப் படுகின்றன
வட்டமிட்டு வானம் தொட்டுவிட !
இமைகள் மூடியபடி
கண்கொள்ளா காட்சிகள் கோர்வையாய்
காலக்கெடுவின்றி தூராதொலைவிற்கு கொண்டு செல்கின்றன!
கண்காணா தூரதேசத்தில் பரிச்சயமான மொழிகளின் சம்பாஷனை தொடர்கிறது
எதுவும் புரிந்தும் புரியாமலும் !

பெண் குழந்தைகள் பெற்ற அப்பாக்கள் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள்!


நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

கருணைதான் மனித குலத்தின் ஒற்றைத் தேவை


கருணைதான்
மனித குலத்தின் 
ஒற்றைத் தேவை

கருணைதான்
மனிதர்களின் 
ஒற்றை அடையாளம்

கருணைதான்
உயிர் காக்கும் 
ஒற்றைக் கவசம்

Friday, September 15, 2017

எமக்கு சுவனத்தை அல்லாஹ்விடம் சண்டை போட்டு வாங்கித் தரவென ....

பெற்றோர்களான எமக்கு சுவனத்தை அல்லாஹ்விடம் சண்டை போட்டு வாங்கித் தரவென என் மகள் முன்னதாக ரப்பிடம் சென்று விட்டாள் போலும்.
உங்களது மனமார்ந்த ப்ரார்த்தனைகள் எங்கள் குடும்பத்திற்கு இப்போது மிக அவசியம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ரப்பனா தகப்பல் மின்னா.
இன்னக அன்தஸ் ஸமீஉல் அளீம்.

Abdul Kader Abukka 
========================================

பேரறிஞரின் நினைவு நாளில் இந்த எளியோனுக்கு அமைந்த ஒன்றை.....

பேரறிஞரின் நினைவு நாளில் இந்த எளியோனுக்கு அமைந்த ஒன்றை சொல்லி வைக்க நினைக்கிறேன். அதாவது அன்றைக்கு 1972 என்று நினைக்கிறேன்,
அப்போது மாலை மணி ஆறு. வேலை முடிந்து நுங்கம்பாக்கம் மெயின் சாலையை கடந்து ஒரு தெருவை தாண்டிச் செல்லும் போது, நண்பனொருவன் சொல்லிவைத்த செய்தி நினைவுக்கு வர, அட ஆமா போய் பார்த்துதான் வருவோமே என்று பக்கத்தில் எந்த வீடு அது என்று கேட்டு, கிட்டத்தட்ட கடைசி வீடு என்று தெரிந்து வீட்டின் முன்னே நின்று பார்த்தால், ஒரு வயதான அம்மா, வீட்டுக் கூரையை தாங்கி நிற்கும் அந்த இரண்டு தூண்களில் ஒன்றை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு சாவாதானமாக மிக எளிமையாக நி்ன்று கொண்டிருந்தார்கள். சிறிது தயக்கத்துடன் அம்மா இது அண்ணாவின் வீடு என்று சொன்னார்கள், ஒன்றுமில்லை, அண்ணி இருந்தால் சும்மா ஒருமுறை பார்த்து நலம் விசாரிக்கத்தான் என்று மிகுந்த தயக்கத்துடன் நான் சொல்ல, அப்படியா தம்பி ரொம்ப சந்தோஷம் நான்தாம்ப்பா நீ பார்க்க வந்த அண்ணி என்று சொன்னதும் அப்படியே நான் திகைத்துப் போய்விட்டேன், காரணம்.....

Wednesday, September 13, 2017

ஒரு அருமையான நிகழ்ச்சி! /ஸ்டெம்_செல் என்பது மருத்துவத்தின் நவீன கண்டு பிடிப்பு

#ஸ்டெம்_செல் என்பது
மருத்துவத்தின் நவீன கண்டு பிடிப்பு.
பிறந்த குழந்தையின்
#தொப்புள்_கொடியை  பாதுகாத்து வைத்து
அதைக் கொண்டு
குழந்தை வளர வளர
எதிர்காலத்தில் அதற்கு ஏற்படக் கூடிய
நோய்களை குணமாக்கக் கூடிய
#அரிய_மருத்துவ_கண்டு_பிடிப்பு.
இன்றைய காலகட்டத்தில் இதன் அவசியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து கொண்டிருக்கிறது.

Monday, September 11, 2017

தேடல் ....! (பாகம் - 2 )

புனிதத்தின் தேடலில்
பூவுலகில் அலைந்தேன்
புண்ணியங்கள் வேறெங்குமில்லை
மனிதத்திலென கண்டேன்

சுகந்திரத்தின் தேடலில்
ஆண்டானை தேடினேன்
அவனும்கூட யாருக்கோ
அடிமையாக  இருக்கக் கண்டேன்

மியான்மரில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டித்தும் ஹாங்காங்கில் வாழும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்

மியான்மரில் அரக்கான் என்னும் பகுதியில் வாழும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அங்கு வாழும் புத்தத் துறவிகளாலும், இராணுவம், காவல்துறை போன்ற அரசுப் படைகளாலும் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து மியான்மர் நாட்டுக்கு ஊடுறுவியர்கள் அல்லர். பல நூறாண்டுகளாய் அந்நாட்டில் வாழும் மண்ணின் மைந்தர்களே.
மியான்மரில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அதை ஐக்கிய நாடுகள் அவை தடுத்து நிறித்தக் கோரியும் ஹாங்காங்கில் வாழும் முஸ்லிம்கள் தமார் பூங்காவில் போராட்டம் நடத்தினர்.

Sunday, September 10, 2017

எம் பெருமானாரின் பெருமைகள்.! / பாட்டு

எம் பெருமானாரின் பெருமைகள்.!

Haja Maideen  இருபது வயதில்..
இயற்றிப் பாடிய  பாடல்களில் ஒன்று இது.!


கம்பாலா என்ற பெயர் உகாண்டாவின் தலைநகருக்கு எப்படி வந்தது?

ராஜா வாவுபிள்ளை
ஆப்ரிக்கா இயற்கையின் இருப்பிடம் என்பது யாவரும் அறிந்தது. வானவிலங்குகளும் ஏராளம் உண்டு. இயற்கை எழிலுக்கு பெயர்போனது உகாண்டா. அதனால்தான் கழிந்த நூற்றாண்டில் உகாண்டா வந்த பிரித்தானிய பிரதமர் சர்ச்சில் இயயற்கை எழிலில் மயங்கி "உகாண்டா ஆப்ரிக்காவின் முத்து" என்று மனமார வாழ்த்தினார்.
அதிலுள்ள தலைநகரம் கம்பாலா அழகான ஏழு மலைகுன்றுகளின் மீது அமையப்பெற்றிருக்கிறது.
இந்த மலைகளின் இயற்கை சூழலில் இயற்கையாகவே இம்பாலா என்று வட்டார லுகாண்டா மொழியில் அழைக்கப்படும் பெரியவகை மான்
இனங்களில் ஓன்று அதிகமாக வசித்து வந்தன.

பிஞ்சும் விதைக்கும்....!

அரபகத்திலிருந்து சமீபத்தில் நான் கொண்டு வந்திருந்த பேரீச்சம்பழங்களில் சிலவற்றை எனது மனைவி என் அருகில் அமர்ந்திருந்த மூன்று வயது மகள் தஸ்னீமிற்கு இன்று காலையில் கொடுத்தார்.
அவைகளை வாங்கி சாப்பிட்ட பின் விதைகளை கையில் எடுத்துக்கொண்டு சென்ற மகளிடம் சொன்னேன்.."அம்மா விதைகளை கொண்டுபோய் குப்பைக்கூடையில் போடுங்கள்; கீழே போட்டுவிடாதீர்கள்" என்று.
அதற்கு மகள் திரும்ப என்னிடம் கேட்ட பதில் கேள்வி "ஏன் அத்தா குப்பைக்கூடையில் போட வேண்டும்...? நம் வீட்டு கொல்லையில் போட்டால் முளைக்குமே...? என்று.

வெள்ளம் வருமுன் அணைகட்டி வளர்ப்போம்.

Iskandar Barak
நற்பண்புகளென்பது தாய் தந்தையின் வளர்ப்பில் தானாய் வருவது ....தான்
காலம் கடந்த பின் வருவதென்பது கற்பித்தலில் உள்ளது ..இது காற்றில் அடித்து சென்றுவிடுமென்பதால் நம்ப முடியாததும் தங்க முடியாததுமாகும்.
ஆகவே ......
தாய் தந்தையர்களே உங்கள் பிள்ளைகளுக்கு இளவயதிலிருந்தே நற்பண்புகளை கற்றுத்தாருங்கள்

Saturday, September 9, 2017

நட்பின் இலக்கணம்

நட்பின் இலக்கணம் இரக்கத்தின் இருப்பிடம் இன்முகத்தின் இனியவர் அன்பான குழந்தைக்குணம் அறிந்ததை பகிரும் பெருந்தன்மை இளையோரை தூக்கிவிடுவார் நல்ல மனதுடன் வாழ்த்திடுவார் நன்மக்கள் நட்பு நன்மைகள் தரும் அத்தனையும் ஒருங்கே கொண்ட சகோதரநட்பு Mohamed Ali நோய்நொடியின்றி இறையருளுடன் மனமகிழ்வுடன் பல்லாண்டு வாழ ஏகன் இறையோனை வேண்டுகிறேன். ஆமீன். நட்பில் தொடர நாளும் மட்டற்ற மகிழ்வுடன் நாடுகிறேன்.
ராஜா வாவுபிள்ளை

போராட்டம் ....!

நாளைக்காக அடுத்த வேளைக்காக உணவைக் கூட சேர்த்து வைக்கும் பழக்கம் இருப்பது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமே.
பறவைகள் அதிகாலையில் இரைதேடி பறந்து செல்கின்றன தானும் உண்டு கூட்டில் குஞ்சுகள் இருந்தால் அவற்றிற்கும் வேண்டிய உணவை மட்டும் அன்றாடம் தேடிக் கொள்கின்றன.
மேலும் பசித்தால் மட்டுமே உண்கின்றன பிற உயிரினங்கள்.
ஒவ்வொரு உயிருக்கும் உணவளிப்பவன் இறைவன் என்பதை மனிதன் மறந்து விடுகிறான்.

ஆங்கிலமும் தமிழும் ஒன்றாகமுடியாது.


ஆங்கிலம் தொடக்கத்திலேயே பிறமொழிகளை இணைத்துக்கொண்டு இந்தியைப் போல உருவான ஒரு வேரற்ற மொழி.

தமிழ் அப்படியல்ல, தானே தோன்றி தானே வளர்ந்து எவரும் அழிக்காமுடியா வண்ணம் தளைத்து வளர்ந்து செழித்த செம்மொழி.

பிறமொழிச் சொற்களை ஏற்பதில் தமிழ் அன்பு மனம் கொண்டதாகவே இருக்கிறது.

MY EMIR SONG BY AFRIN

Indian young girl sing a song and releasing her first video (“MY EMIR") to show her Love and Support for HH The Emir and people of Qatar.
She is expecting the day to meet her hero of Qatar and convey the wishes and thanks on behalf of all other nationalities.
Please support and bless her with your likes, comments and subscribe.

Song Sing by – Afrin Ahamed Faizal

Director of Creativity – Ahamed Faizal

Friday, September 8, 2017

பா. ரஞ்சித் ஆவேச கேள்வி

மாயூரத்திலிருந்து...மயிலாடுதுறை வரை !

முன்னொரு காலத்தில்
இன்றுபோல் இல்லை மயிலாடுதுறை !
வேர் போல இருந்த மத ஒற்றுமை
சேறு போல என்றானது !
பியர்லெஸ் படக்கூட வாசல் தொட்டு
பழங் காவிரி நீர் நிரம்பி ஓடும்
பெருநதி என்று பெருமைகொண்டாடியது
பேருக்கு கூட காணோமின்று!
கடைமுழுக்கு என்ற நாளில்
பொங்கிவழியும் மக்கள் கூட்டமும்
டி ஏ எஸ் பட்டணம்பொடி மெகாபொம்மையும்
மும்மத மக்களையும் கவர்ந்த காலமது !

Thursday, September 7, 2017

இருட்டுகள் அழகானவை / Abu Haashima

இருட்டுகள் அழகானவை
இருட்டுகள் சுத்தமானவை
இருட்டை எதிர்பார்த்திருப்பது
இனிய அவஸ்தை !
கவிழ்ந்து கிடக்கும்
இருட்டுகளில்தான்
சத்தியம்
உயிரோடு இருக்கிறது !
பொய்களைக்
காண முடியாத நிஜம்
இருட்டு !
வேஷங்களைப் பூசி வந்து
ஏமாற்றும் வாய்ப்பை
யாருக்கும்
தருவதேயில்லை
இருட்டு !

Wednesday, September 6, 2017

மீண்டும் பூக்கும்

மீண்டும் பூக்கும்
by கஜினி அய்யூப்
“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.

இதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்” , சல்மாவின் “மூன்றாம் ஜாமங்களின் கதை” நான் வாசித்து முடித்த இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் என்பது நினைவு!?

பொதுவாக புத்தகம் வாசிப்பது என்பது இப்போது மின்மீடியாக்கள் ஆக்ரமிப்பில் எனக்கும் குறைந்தே போயிருக்கிறதென்பேன்…

சரி, எப்படி துவங்குகிறது இந்நாவல் என்று நான் வாசிக்கத்துவங்கிய நிமிடங்களில்தான் உணர்ந்தேன் இதை வாசித்துமுடிக்காமல் மூடி வைக்க முடியாதென்று !

என் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது...../ Haja Maideen

என் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது
வரிகளால், வார்த்தைகளால் மட்டுமல்லாமல்,
கவிதையாய், பாடலாய் வடிப்பதும் என் இளமை காலம் தொட்டு வந்த வழக்கம்.
அதில் ஒன்று இன்றும்..... கேட்டு மகிழ்ந்து
கருத்து கூறுங்கள்.! நன்றி.


Tuesday, September 5, 2017

"நீங்கள் தவறான ஆங்கிலத்தில் பேசினாலும், தைரியமாக பேசுங்கள். அப்போது தான் உங்களால் நன்றாக பேச முடியும்"

பள்ளி படிப்பு முடியும் வரை ஆங்கிலத்தில் பேசுவது என்பது சிரமமான காரியமாக இருந்தது. அதுவும் லஞ்ச் நேரத்தில் நடைபெறும் கிராம்மர் கிளாசை போதுமான அளவு கட் அடித்துவிடு்வோம். கிராமர் என்றாலே வேப்பங்காய் போல கசக்கும். கல்லூரி படிக்கும்போது ஆங்கில வகுப்பெடுக்க கர்நாடகாவிலிருந்து கிரிஷா (ஆண் 😀 ) என்ற ஆசிரியர் வந்தார். அவருக்கு தமிழ் தெரியாது. அதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டியிருந்தது. "நீங்கள் தவறான ஆங்கிலத்தில் பேசினாலும், தைரியமாக பேசுங்கள். அப்போது தான் உங்களால் நன்றாக பேச முடியும்" என்று சொல்லிக் கொடுத்தார்.

Monday, September 4, 2017

எண்ணங்களால் ஒரு உலகம் ....! + இல்லறம் ....!

எண்ணங்களால் ஒரு உலகம் ....!
அத்தனையும்
ஒரு நொடியில் நிகழும் நிதர்சன நிழல்
எல்கைகள்
இல்லாத ஒரு பால்வெளி பாதை
ஏற்றதாழ்வு
இல்லாத ஒரு சமசீர் ஆலயம்
செல்லுமிடத்தில்
சேர்ப்பிக்கும் ஒரு வழிப்பாதை
எண்ணுவதெல்லாம்
கிட்டும் ஒரு அட்சயபாத்திரம்
அளவில்லா
கற்பனையை அள்ளித்தரும் கருவூலம்

புதிய விதி செய்வோம்

Vavar F Habibullah

இளம் தலைமுறையின் நீட் தேர்வு எனும் உடன் கொல்லி மருந்தால் மருத்துவ கனவுகள் சிதைந்து போய் உயிருக்கு போராடும் அவசர நிலையில் தமிழக மாணவர் உலகம் தத்தளிக்கும் வேளையில்......
சில கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ள எனது அருமை நண்பர் டாக்டர் ஜெய்ன் காதிரி என் இல்லம் வந்திருந்தார்.
இவரை நான் சமீபத்தில் என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருந்தேன்.
அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் பிரபல மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் சர்ஜரி துறை பேராசிரியர் இவர்.கடந்த 50 ஆண்டு காலமாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர் ஸ்டெம் செல் மருத்துவ தொழில் நுட்பத்தில் புகழ் பெற்ற நிபுணர்.

Sunday, September 3, 2017

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்

சொற்களில் அந்த மூன்று எழுத்துகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் எல்லோருமே எதிர்பார்க்கும் ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல்லாகும். நன்றியை எதிர்பார்க்காத இதயம் எங்குமே இல்லை எனலாம்.

ஒருவர் பிறரிடம் பெற்றுக் கொண்ட உபகாரங்களுக்காக ‘நீங்கள் செய்த உதவிக்கு மிகுந்த நன்றி’ என்று சொல்லக் கேட்டால், கேட்பவர் மனம் முழுவதுமாகக் குளிர்ந்து போகும்.

அப்படியானால், நாம் நமது இறைவனுக்கு அவன் தந்த அருட்கொடைகளுக்காக அதிகமதிகம் நன்றி செலுத்தினால் அவன் எவ்வளவு தூரம் மகிழ்ச்சி அடைவான்.

கண்திறந்த போதிலும்

கண்திறந்த போதிலும் 
காட்சியற்றுப் போகலாம்
பொன்னிறைத்த வீட்டிலும் 
புன்னகைக்க மறக்கலாம்

விண்ணொளிரும் மீன்களும் 
விழுந்தெரிந்தே போகலாம்
அன்பிருக்கும் வாழ்வுதனில் 
இன்பமின்றிப் போகுமா

கவியுள்ளம் ....!


நீலவானத்து சிறு நட்சத்திரங்களும்
அடர்வனத்து பெரு மரங்களும்
பூங்காவின் மலர் மொட்டுக்களும்
மலர்ந்து இதழ் விரித்த பூக்களும்
அலைகடலின் பாய்  மரக்கலங்களும்
நீள் நதியின் துள்ளும் மீன்களும்
அதிகாலைப் நுனிப்புல் பனித்துளியும்

Saturday, September 2, 2017

கேரள முதல்வரின் கனிவு...

ஒரு முஸ்லிம் மாணவியின் மருத்துவக்கல்வி கனவு நனவாகிட ஒரு மணி நேரத்தில் சட்டத்தில் திருத்தம் செய்து உதவி செய்துள்ள கேரள முதல்வர் பிணராய் விஜயனுக்கு நன்றிகள்..
கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் தொகுதியைச் சேர்ந்த ஏழை மீன்பிடி தொழிலாளி மகள் சுல்பத் பாத்திமா. +2 வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற சுல்பத் க்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் ரூபாய் 11 லட்சம் கட்டணத்தை செலுத்த முடியாமல் மாணவியும் பெற்றோரும் வருந்தும் தகவல்கள் சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது..

ஒரு அரசியல்வாதியாக அந்தக் குழந்தையின் முன் குற்ற உணர்ச்சியோடு தலைகுனிந்து நின்றேன்.

by-Jothimani Sennimalai

இன்று அனிதாவுக்கு இதயம் கனக்க இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன்.ஒரு அரசியல்வாதியாக அந்தக் குழந்தையின் முன் குற்ற உணர்ச்சியோடு தலைகுனிந்து நின்றேன்.
நன்றாகப் படிக்கும் மகளை மருத்துவராக்கத் தந்தைக்கு ஆசை. அவரோ மூட்டை தூக்கும் தொழிலாளி.
"இது பேராசை இல்லையாப்பா" என்று கேட்டிருக்கிறார் மகள். "குறுக்கு வழியில் பணம்சேர்ப்பது தான் பேராசை .நன்கு படித்து மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்வது பேராசையல்ல "என்று சொன்னார் தந்தை.
அனிதா நன்கு படித்தார். ஆனால் மருத்துவர்தான் ஆகமுடியவில்லை!
மூட்டை தூக்குபவரின் மகள், மருத்துவர் ஆக கனவுகாண்பது பேராசைதான் என்று அடித்துச் சொல்லும் மனுநீதி, சமூக நீதியைக் கொன்றுவிட்டது!
நாம் அனைவரும் இன்று அதற்கும் சேர்த்துதான் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம்.

தியாகத் திருநாள் !


     (   எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


                    உயர்வான  ஒற்றுமையை உளம்நிறையத் தியாகமதை
                       உலகினுக்கு உணர்த்திநிற்கும் உண்மைமிகு திருநாளாய்
                   நபிபெருமான் வழிநடப்போர் வாழ்வினிலே கடைப்பிடிக்கும்
                         நல்லஹஜ்ஜுப் பெருநாளை நாடெல்லாம் போற்றிடுமே !

                வாழ்நாளில் நல்லவற்றை வையகத்தில் செய்வார்க்கு
                     வாழ்நாளில் பெருநாளாய் வாய்த்துவிடும் ஹஜ்ஜுவுமே
               வாழ்வினிலே நல்லவற்றை மனமேற்றி நில்லார்க்கு
                      வாழ்வினிலே பெருநாளாய் அமைந்துவிடா ஹஜ்ஜுவுமே !

ஒவ்வொன்றிற்கு பின்னும் ....!

ஒவ்வொரு தெளிவுக்குப் பின்னும்
ஒரு தேடல் இருந்தது
ஒவ்வொரு பகைக்குப் பின்னும்
ஒரு வஞ்சினம் இருந்தது

ஒவ்வொரு நட்புக்குப் பின்னும்
ஒரு புரிதல் இருந்தது
ஒவ்வொரு திறமைக்குப் பின்னும்
ஒரு உந்துதல் இருந்தது

LinkWithin

Related Posts with Thumbnails