இறைவா...
என் பிழைகளைப்
பொறுத்தருள்வாய்!
என் பாதையை
ஒளியாக்குவாய்!
என் சிந்தனையை
அழகாக்குவாய்!
உன் அருட் கொடைகளை
அள்ளித் தந்திடுவாய்!
முட்களிலேயே
வாசம் செய்கின்ற என்னை
மலர்களோடும்
வகையின்றி
வஞ்சனை செய்வோர்
பிணக்கையும்
எதிர்கொள்ள
ஆற்றல் தரும்
தலைவனே...
உன் உதவி என்ற
ஈமானின் வெளிச்சத்தில்
உயிர் வாழும்
என் கூட்டுப் பறவைகள்
காயப்பட்டுப் போகாமல்
காப்பாற்று!
நோய்களின் கரங்களில் இருந்தும்
வேதனை வலிகளில் இருந்தும்
ஈடேற்றம் கொடு
உயிரையே வருத்தும்
வைரஸின் பிடியிலிருந்து
உலகுக்கே
விடுதலைக் கொடு !
உதிரங்களில்
உவப்புக் கொள்ளும்
குரோதங்களை
மடியச் செய்!
அங்கெல்லாம்
அன்பு எனும் தர்மத்தை
தழைக்கச் செய்!
அண்ணல் முஹம்மதின் மீதான
நேசத்தை
வளரச் செய்!
மனித குலம்
ஒன்றே என்றுரைத்த
நபிகளின் தத்துவத்தை
உணரச் செய்!
கண்ணியமிக்கவனே!
உன்னையே புகழ்கின்றேன்!
உன்னையே
பணிகின்றேன்!
உனக்கே எல்லாப் புகழும்!
#அருள்வாய்_யா_அல்லாஹ் ...
இறைவா...
என் பிழைகளைப்
பொறுத்தருள்வாய்!
என் பாதையை
ஒளியாக்குவாய்!
என் சிந்தனையை
அழகாக்குவாய்!
உன் அருட் கொடைகளை
அள்ளித் தந்திடுவாய்!
முட்களிலேயே
வாசம் செய்கின்ற என்னை
மலர்களோடும்
வாழச் செய்வாய்!
வகையின்றி
வஞ்சனை செய்வோர்
பிணக்கையும்
எதிர்கொள்ள
ஆற்றல் தரும்
தலைவனே...
உன் உதவி என்ற
ஈமானின் வெளிச்சத்தில்
உயிர் வாழும்
என் கூட்டுப் பறவைகள்
காயப்பட்டுப் போகாமல்
காப்பாற்று!
நோய்களின் கரங்களில் இருந்தும்
வேதனை வலிகளில் இருந்தும்
ஈடேற்றம் கொடு
உயிரையே வருத்தும்
வைரஸின் பிடியிலிருந்து
உலகுக்கே
விடுதலைக் கொடு !
உதிரங்களில்
உவப்புக் கொள்ளும்
குரோதங்களை
மடியச் செய்!
அங்கெல்லாம்
அன்பு எனும் தர்மத்தை
தழைக்கச் செய்!
அண்ணல் முஹம்மதின் மீதான
நேசத்தை
வளரச் செய்!
மனித குலம்
ஒன்றே என்றுரைத்த
நபிகளின் தத்துவத்தை
உணரச் செய்!
கண்ணியமிக்கவனே!
உன்னையே புகழ்கின்றேன்!
உன்னையே
பணிகின்றேன்!
உனக்கே எல்லாப் புகழும்!
அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment