Wednesday, September 30, 2020

அதென்ன துபாஷ் அக்ரஹாரம்?

 Senthilkumar Deenadhayalan

மயிலாடுதுறையில் துபாஷ் அக்ரஹாரம் என்றொரு தெரு காவிரியின் வட கரையில் இருக்கிறது

அதென்ன துபாஷ் அக்ரஹாரம்?  சுபாஷ் போல துபாஷும் ஒரு பெயரா?  இல்லை!  அது ஒரு தொழில்!

ஒரு காலத்தில் அது வளங் கொழிக்கும் தொழிலாகவும் இருந்திருக்கிறது!  அதைச் செய்தவர்கள் பெருஞ் செல்வம் சேர்த்து அந்நாளிலேயே கோடீஸ்வரர்களாக இருந்திருக்கின்றனர்! 

அப்படி என்ன தான் தொழில் அது? 

மொழி பெயர்ப்பு தான்! 

துபாஷ் என்றால் மொழி பெயர்ப்பாளர் என்று அர்த்தம்!  அது ஒரு காரணப் பெயர்! 

இவர்கள் இன்றைய மொழி பெயர்ப்பாளர்களைப் போல் புத்தகங்களை மொழி பெயர்க்கவில்லை!  வணிகர்களுக்கான வியாபார மொழி பெயர்ப்பாளர்களாக இருந்திருக்கின்றனர்! 

Tuesday, September 29, 2020

பெண்ணின் பெருமை கணவனின் அருமை

 


பெண்ணின் பெருமை

ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல. 

பெண்கள் நமக்கு  பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் 

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும்.

மனைவி கணவனுக்குக் பிறந்த நாள் பரிசு கொடுக்கிறாள் அதற்கு கணவன் பாராட்டாமல் கணவரின் எதிர்வினை மிகவும் வருத்தமாக இருக்கிறது

நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.


கணவனுக்கு அவள் தேவையற்ற செலவு செய்கிறாள் என்பதாக கோபப்படுகின்றான் 

தான் மிகவும் சிரமப்பட்டு பொருள் ஈட்டி வருவதை மனைவி வீண் செலவுகளில் பணத்தினை செலவு செய்வதாக கண்டிக்கின்றான் .தனது சேவைதைத்தான் உயர்வானது மனைவி ஒன்றும் செய்ய வில்லை என்கின்றான் 

மனைவி தனது கடமையை தான் செய்த சேவையை அவனுக்கு அறிய வைக்கின்றாள் 

சமைக்க பொருட்கள் வாங்கி வந்தீர் ஆனால் அதனை நான் சமைத்து தரவில்லையா !

நீங்கள் உடல் நலம் குன்றியபோது உங்களை கவனித்துக்  கொள்ளவில்லையா ! இதற்கு நான்  ஆதாயமாக எத்தனையாவது எதிர்பார்த்து செய்தேனா ! 

என்று இப்படியாக தொடர்கின்றது இந்த அருமையாக தொடர்கின்றது இந்த காணொளியை  தொடர்ந்து பாருங்கள் 


- ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தான் செய்தவர்களை பெருமையடிக்காதீர்கள் .

கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.


Monday, September 28, 2020

கற்பாறைகளுக்குள் ஒளிந்திருக்கும் இரும்புத் துகள்களை கூர்வாளாக ஒளிரவைக்கும் கனவுகளின் சூத்திரம்..! #நிஷாமன்சூர்



 "பொறிபுல னடங்கிய காலே பரி

பூரணப் பொருள்வந்து வாய்க்குமப் பாலே"

-குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா ரலியல்லாஹு அன்ஹு

நவீன யுகத்தின் சகல ஆடம்பரங்களையும் படோடோபமாக வெளிப்படுத்தும் துபாய் நகரின்  நுகர்வு கலாச்சாரத்தில்  ஆண்டைகளும் அடிமைகளும் ஏவல் பணியாளர்களும் ஒரே புள்ளியில் இயங்கும் கார்ப்பரேட் பின்புலத்தில்  ஒரு அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொருளாதார சிக்கல்கள், அவற்றினூடாக ஏற்படும் வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், அவற்றிற்கான ஆன்மீக தெளிவு அனைத்தும் கலந்த ஒரு கலவையாக உருவாகிப் பரந்து விரிகிறது கனவுக்குள் கனவு நாவல்.சூஃபி ஞான ஆத்மீக அனுபவங்கள் உள்ளீடாகக் கொண்டு நகரும் இந்த நாவலில் சில வரிகள் சில சித்தரிப்புகள் சில குறிப்புகள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன 

Sunday, September 27, 2020

உலகிலேயே அழகிய பெணகள்

 

Super singer Priyanka on SPB எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவை தன்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறும் பாடகி பிரியங்கா,

 Super singer Priyanka on SPB

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவை தன்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறும் பாடகி பிரியங்கா, அவருடனான இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார்.

Friday, September 25, 2020

SPB யின் குரலில் இஸ்லாமிய உருக்கமான மலையாள பாடல் Emotional song

பாடும் நிலா பாலுவிற்கு கண்ணீர் அஞ்சலி

பாலு சார்

 A Buhari



பாலு சார்

செவிகளை மட்டும் 

திறந்துகொண்டு

செவ்வாய்க் கோளுக்கும் 

சென்றுவிடலாமே 

பாலு சார்

உங்கள் 

குரலேற்றிச் செல்லாத

பொன்வானம் ஏது

பாலு சார்

கோவிட் என்ற கொடியவனின் கோரப்பசிக்கு இசைப்பறவை

 Mohamed Ansari




கோவிட் என்ற கொடியவனின்

கோரப்பசிக்கு  இசைப்பறவை

யும் இரையாகி இருக்கிறது

இசைப்பிரியர்களது நெஞ்சில்

 நீங்கா இடம் பிடித்திருந்த

அந்த இனிய மனித நேயப்பண்

பாளர் இம்மண்ணை விட்டு மறைந்

தாலும் அவர்குரல் தலைமுறையை 

தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கும்



Mohamed Ansari

S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள் || ISLAMIC SONGS | SPB

Thursday, September 24, 2020

Yaa Nabi - Yuvan Shankar Raja ft. Rizwan | U1 Records

Salim | Prayer Song (Salim's Prologue)

Salim | Prayer Song (Salim's Prologue)

Em Hanifa Islamic songs - Thendral Kattray Songs (Vol -5 ) - Tamil Islam...

#தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_16 அபு ஹாஷிமா

 #தொட்டால்_தொடரும்

               #குறுந்தொடர்_16

                   அபு ஹாஷிமா










இதுதான் வேலை என்று முடிவான பிறகு மனதில் இருந்த தயக்கமும்  மயக்கமும் விலகி விட்டன .பேக்டரி ஹவுஸ் கீப்பர் வேலையை பொறுப்புடன் செய்ய ஆரம்பித்தேன்.முதல் இரண்டு வாரங்கள் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது. சீனியர் ஆப்பரேட்டர்களின் அலம்பலும் தொல்லையும் கொஞ்சம் டென்சனையும் கோபத்தையும் தந்தாலும் அவற்றை சமாளிப்பதற்கான வழிகளையும் கண்டு கொண்டேன் .

பாக்டரி மனேஜரும் ஜெனரல் மேனேஜரும் வரும்போது

பாக்டரி சுத்தமாக இருக்க வேண்டும். இல்லைஎன்றால் அவர்கள் சூப்பர்வைசரிடம் கடுப்படிப்பார்கள். சூபர்வைசர் என்னிடம் சூடாவான்.

காலையில் ஒரு மணி நேரம் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட்டால்

எந்த பிரச்சினையும் இல்லை. அதன்பிறகு கட்டிங் மெஷினில் வரும் பிளாஸ்டிக் வேஸ்டுகளை ரீசைக்ளிங் செக்‌ஷனில் கொண்டு சேர்க்க வேண்டும் .பிளாஸ்டிக் ரோல்களைச் சுற்றி வரும் பேப்பர்களை பேப்பர் வேஸ்ட் மெஷினில் கொண்டு போட வேண்டும். அவற்றை பண்டல்களாக்கி வெளியே தள்ள அங்கே ஒரு ஆப்பரேட்டரும் ஒரு ஹெல்ப்பரும் உண்டு.

கொசுறு ...

டாக்டர். மான்சப் முஹம்மத் சலோவி (Moncef Mohamed Slaoui) - கொரானா வைரஸ்சிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க...

கட்டுரை எழுதியவர் Aashiq Ahamed




 டாக்டர். மான்சப் முஹம்மத் சலோவி (Moncef Mohamed Slaoui) - கொரானா வைரஸ்சிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்க அரசு நியமித்த குழுவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்ட போது பல ஊடகங்களும் ஆச்சர்யம் தெரிவித்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-பின் இஸ்லாமோபோபியா பேச்சுக்கள் எல்லாரும் நன்கு அறிந்த ஒன்று தான். அப்படியான ஒருவர் ஒரு முஸ்லிம் அமெரிக்க விஞ்ஞானியை நியமித்ததற்கு காரணம் என்னவென்று விவாதத்தை முன்வைத்தன அமெரிக்க ஊடகங்கள். 

ஏன் முஹம்மத் இந்த பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கு, அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அஜார் கூறிய விளக்கம் போதுமானது. "இன்றைய தேதியில், இத்துறையில் அதிக அனுபவமும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் வெற்றியாளராகவும் வலம் வருபவர் என்பதாலேயே இப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்" என்று முஹம்மத்தை புகழ்ந்தார் அலெக்ஸ். 

நாகூர் ரூமி அவர்களுடன்

 அஸ்ஸலாமு அலைக்கும்

பல ஆண்டுகளாக பார்க்க விரும்பிய உயர்திரு பேராசிரியர் முகநூல் நண்பர் அண்ணன் @நாகூர் ரூமி அவர்கள் தங்கள் குடும்பத்துடன் எங்கள் இல்லம் நாடி வந்து எங்கள் அனைவரையும் மகிழ்வித்தார்கள்

இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

முகம்மது அலி 

≠≠_

நாகூர் ரூமி


இயற்பெயர் முஹம்மது ரபி. புனைபெயர்: நாகூர் ரூமி. கல்வித் தகுதி: எம்.ஏ., பிஎச்.டி., கம்பன் - மில்டன் காவியங்களில் ஒப்பாய்வுக்காக, சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், சுயமுன்னேற்றம், மதம், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, தமிழாக்கம் என நிறைய நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்’ நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும், ஹோமரின் ‘இலியட்’ காவிய மொழிபெயர்ப்புக்கு 2009-ம் ஆண்டுக்கான நல்லி திசையெட்டும் மொழியாக்க விருதும் கிடைத்தது. கணையாழி தொடங்கி கல்கி, விகடன், குமுதம் என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். இணையத்திலும் எழுதுகிறார். www.nagorerumi.com என்ற இவரது வலைத்தளத்திலும் இவரது ஆக்கங்களைப் படிக்கலாம். ஆம்பூர், மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், சென்னையில் பல ஆண்டுகளாக ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறியுள்ளார்.

Tuesday, September 22, 2020

என் வாழ்வின் உச்சமும், பாதாளமும் பட்டென்றே மாறி மாறி நிகழும் அதிசயக் காலம்!



 ( 1978---ஆம் ஆண்டாக இருக்கலாம்!

மாதம்,தேதி கேட்கக் கூடாது! நினைவில்லை!

என் வாழ்வின் உச்சமும், பாதாளமும் பட்டென்றே மாறி மாறி நிகழும் அதிசயக் காலம்!

"மணி விளக்கு " மாதயிதழின் துணையாசிரியர்கள் ,நானும்,மச்சான் கவிஞன் இஜட்.ஜபருல்லாஹ்வும்!

சென்னை மரைக்காயர் லெப்பைத் தெரு, 

முஸ்லிம் லீக் அலுவலக மூன்றாம் மாடியில் எங்கள் குடியிருப்பு!

எனக்கு மணமாகவில்லை! 

நாலரைக் கழுதை வயதுதான்!

நாகூர்க் கவிஞன் குடும்பி!

லீக் ஆபீஸும் எங்கள்  கண்காணிப்பு! 

மூன்று மாடிக் கட்டிடத்தின் ஏகபோக ராஜாக்கள் நாங்கள்!

பசி,பட்டினி எங்கள் சகவாசிகள்!

கவிஞனுக்கு ஊரிலிருந்து அழைப்பு .அவசரம் . உடனே புறப்பட்டான்.

கையிலிருந்தது,கண்ணில் பட்டது,அத்தனைக் காசுகளையும் பிராண்டி எடுத்து ரயில் ஏற்றி விட்டேன்!

முதல்நாள் பட்டினி!

அடுத்த நாளும் அது தொடர்ந்தது!

மூன்றாம் நாளும் உணவுக்கு உத்தரவாதமில்லை!

இது மாதிரி காலங்களில் எங்கள் ஆபத்துப்பாந்தவர்கள்,ஆப்பனூர் 

காசிம் அண்ணன்,அவர் மாப்பிள்ளை பீரண்ணன்

இருவரும் சிங்கப்பூர்ப் போய்விட்டார்கள்!

யா அல்லாஹ்.! எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்


யா அல்லாஹ்.!

எல்லோரும் 

எல்லாமும்

பெற வேண்டும்

எல்லா புகழும் 

உனக்கே

உரித்தாக்க 

வேண்டும்

அமைதி 

எங்கும் நிலவ 

வேண்டும்

எங்கள் 

பாவங்களை

நீ மன்னிக்க

வேண்டும்

Islam respects one and all/.Giving A Faith-Based Response


 

அசத்தலான முல்லை கோதண்டனின் வழக்கறிஞர் அலுவலகத்தில் நடக்கும் தில்லுமுல்லு நாடகம்

 

Sunday, September 20, 2020

Being Muslim in Japan

தமிழ் முஸ்லிம்களின் அழகிய வரலாறு பாகம் -01..

ஜப்பானிய முஸ்லிம்கள்...

 Aashiq Ahamed

சாமுராய் குடும்பத்தில் பிறந்த ரயோசி மிடா (படம் 2), 1920-களில் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பயணமாகிறார். அங்கு சீன முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களை கண்டு இஸ்லாம் மீது ஈர்ப்பு கொள்கிறார். ஜப்பான் திரும்பும் மிடா, இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொண்டு, தன் வாழ்வியல் நெறியாக இம்மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். 

ஜப்பானிய மொழியில் குர்ஆனின் நேரடி மொழிபெயர்ப்பு இல்லையே என்ற வேதனை நீண்ட காலமாக மிடாவிற்கு இருந்தது. அப்போதிருந்த ஜப்பானிய குர்ஆன் பொழிபெயர்ப்புகள், மூல அரபியில் இருந்து மொழிபெயர்க்கப்படாமல், ஆங்கிலம்  மற்றும் வேறு மொழிகளில் இருந்த குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் இருந்து ஜப்பானிய மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. ஆகையால், இயல்பாகவே அந்த ஜப்பானிய குர்ஆன்கள் திருப்திகரமான ஒன்றாக இல்லை. 

கப்பலுக்கு போன மச்சான் - Kappalukku Pona Machan | Tajmeel Sherif | Rahem...

இறைவன் மிகப்பெரியவன் - எல்லா புகழும் இறைவனுக்கே !

Shaikh Sadaqathullah

 எனது மகன் ஜனாப். ஷேக் சம்சுத்தீன் மக்கி (வயது 23) அவர்கள் இன்ஷா அல்லாஹ் வரும் புதன்கிழமை M.A. அரபிக் முதுநிலை பட்டபடிப்புக்கான இறுதித் தேர்வு எழுதிட உள்ளார். இளநிலை மற்றும்  முதுநிலை பட்டப் படிப்புகளை ( The New College - Chennai ) சென்னை புதுக்கல்லூரியில் பயின்றார். அவர் சிறப்பான முறையில் தேர்வெழுதி வெற்றி பெற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்தனை செய்திடுமாறு யாவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு  முடிந்த பிறகு எமது தொழிலில்  ( பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எமது தகப்பனார்  காலம்சென்ற  ஹாஜி ஷேக் சம்சுத்தீன் மக்கி அவர்கள் 1964 ம் ஆண்டு அவர்தம் கடின உழைப்பாலும், நேரிய நெறிகளாலும் உருவாக்கித்தந்த கட்டிட வாடகை வசூல் மற்றும் பராமரிப்பு சேவை – RENT COLLECTION & BUILDING MANAGEMENT SERVICE )  இன்ஷா அல்லாஹ் எம்முடன் ஈடுபட உள்ளார்.  

Your Mother Nasheed | Rashid Bhikha | From I Look I See Album

நானும் இந்தியும்...

 வாழ்க்கையில் பெரும்பகுதி காலம் வெளிநாடுகளில் கழித்தும் அதுவும் பெரும்பாலும் வடமாநிலத்தார், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என இந்தி பேசுவார் மத்தியில் கழித்தும் இந்தி கற்றுக் கொள்ளவில்லை... அதனால் எனக்கு எந்த இழப்பும் ஏற்படவுமில்லை...

அதை ஒரு பிளஸ் ஆகக் கருதுவார் உண்டு. எனக்கு அது பிளஸ் ஆகவும் இல்லை, மைனஸ் ஆகவும் இல்லை... ஆனால் என்னோடு பயணித்த பலர் இந்தியில் பொளந்து கட்டுவார்கள்...

எனக்குத் தமிழ் நாட்டு நண்பர்கள் போல ஏராளமான வட மாநில நண்பர்கள் உண்டு. மற்ற நாட்டு நண்பர்களும் உண்டு... அப்போது அவர்களிடம் உரையாட அண்ணா சொன்னது போல ஆங்கிலம் கைகொடுத்தது..

அழகுக் குறிப்புகள் !

 Sabeer Ahmed



அழகு

ஓர் அழைப்பிதழ்...

முத்திரையிடு... முகவரியிடு!

அன்றேல் அதுவே

பொது அறிவெப்பென

கவனம் ஈர்க்கும்;

யாவரும் காண்பர்

கண்டவர் கிறங்குவர்!

அழகு

உள்நாட்டுக் கடிதமெனில்

அஞ்சலட்டை

அதன் நிர்வாண வடிவம்!

Wednesday, September 16, 2020

குர்ஆன் என்ன சொல்கிறது?"

 Aashiq Ahamed



"குர்ஆன் என்ன சொல்கிறது?" என்ற தலைப்பில், புலிட்சர் விருது பெற்றவரும், பெரிதும் மதிக்கப்படும் வரலாற்று ஆசிரியருமான கேரி வில்ஸ், சிகாகோவில் ஆற்றிய ஒரு உரையை காண முடிந்தது. இந்நிகழ்ச்சியில், குர்ஆன் குறித்து கேரி வில்ஸ் கூறும் கருத்துக்களுடன் முழுமையாக உடன்பட முடியவில்லை என்றாலும், கவனிக்கத்தக்க காணொளி என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்தில்லை. 

மிக பொறுமையாக, எளிதாக புரியும் ஆங்கிலத்தில் இவர் பேசியது என்னை ரொம்பவே கவர்ந்தது. பார்வையாளர் கேள்வி ஒன்றிற்கு கேரி பதிலளிக்கும்போது பின்வரும் சம்பவம் நடக்கிறது.

"9/11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு நடந்த ஒரு கூட்டத்தில், துறைச்சார் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், இப்படியான நிகழ்வுக்கு பின்னணியில் இஸ்லாம் இருக்கிறதா என உரையாடல் சென்ற நிலையில், ஒரு நண்பர் கேட்டார், 

'இங்கே யாராவது குர்ஆனை படித்திருக்கிறீர்களா?'

அற்புதங்கள் நம்பிக்கையின் ஆணிவேர்.



நம்பிக்கை கொள்ள அற்புதங்களை எதிர்பார்த்திராத மார்க்கத்தை பின்பற்றுகிற போதிலும்... என்னை பொறுத்தவரையில் அற்புதங்கள் நம்பிக்கையின் ஆணிவேர். 
அற்புதம் என்றால் என்னவென்று வரையறுப்பதில் தான் வேறுபடுகின்றன நமது கண்ணோட்டங்கள். ஜீஸஸ் அலைஹிவஸ்ஸலாத்தின் பிறப்பு ஒரு அற்புதம், ஃபிர்அவ்னின் படைகள் துரத்திய போது கடல் இரண்டாக பிளந்தது ஒரு அற்புதம், மோஸஸ் நபியின் கைத்தடி பாம்பாக உருவெடுத்ததும் அற்புதம், அதே போலவே தான் எனக்கு என் வாழ்க்கையும் ஓர் அற்புதம்.

A Tribute to Mr.Bean

 

ஆசிரியரின்_பாசப்பிணைப்பு …

 Jagur Hussain


ஆசிரியரின்_பாசப்பிணைப்பு

*******************************

பின்னணி இசையில்லாமல் உயிர் உருக்கும் கள்ளப்பள்ளி “பெரியசாமி” அய்யா அவர்களின் #அற்புதமான_குரல்.


பிடித்தால் பகிருங்கள்!

************************

இசையமைப்பாளர்களிடம் போய்சேரட்டும் இக்குரல்!

“ஆசிரியர் - மாணவர்"

அன்பு மழைப் பொழிந்த பாசம்.👌👌👌

அவசியம் ஒரு முறை இக்காணொளியைப் பார்த்தும், பகிர்ந்தும் உங்கள் எண்ண பிரதிபலிப்பைத் தெரிவிக்கவும்.☘️☘️☘️

ஓவியச்செம்மலும், கரூர் மாவட்டத்திலுள்ள #குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றிய பாடகர் திரு கள்ளப்பள்ளி '#பெரியசாமி'அவர்கள் பாடும் "கந்தன் திரு நீறணிந்தால் கண்டப்பிணி ஓடி விடும்" இப்பாடலை செவிமடுத்துக் கேளுங்கள். 😀😀😀

#78வயதிலும் இளைஞர் போல சுறுசுறுப்பாக உள்ளம் தளராமல் தன்முனைப்போடு ஆழ்மனத்திலிருந்து பாடுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது.💐💐💐

கணீர் குரலில்

இனிய ஓசைநயம், உச்சரிப்பு, சரளம், சந்தம் உள்ளிட்டவைகள் அனைத்துமே

ஆஹா! அற்புதம்!!

☘️☘️☘️

நண்பர்களே!

பகிருங்கள்!!

Feeding & Cleaning VLOG - மொட்டை மாடி கோழி வளர்ப்பு அப்டேட்

MUSLIM Wedding in China!

 

Dr. Ayoob memorial song by Kiyas

மயிலாடுதுறையில் Vairamuthu speech

Tuesday, September 15, 2020

Agni Paritchai: மொழி அரசியல்தான் செய்கிறோம் - துரைமுருகன் | 12/09/2020 |...

Motivation

 

#ஞானத்தின்_உலகில்_எது_கெடும்...???

 #ஞானத்தின்_உலகில்_எது_கெடும்...???

01) பாராத பயிரும் கெடும்.

02) பாசத்தினால் பிள்ளை கெடும்.

03) கேளாத கடனும் கெடும்.

04) கேட்கும்போது உறவு கெடும்.

05) தேடாத செல்வம் கெடும்.

06) தெகிட்டினால் விருந்து கெடும்.

07) ஓதாத கல்வி கெடும்.

08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

"நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீத்

பாமணக்கும் நல்ல பதியாம் மயூரநகர்

தாமதிக்க   வாழும் தயாநிதியே  - நாமதிக்கும்



நண்பர் சயீத்தென்னும்   நாவலா தீன் நெறிப்

பண்பாளா நன்மை செய்யும்  பாங்களா - எண்ணலிலும்

நல்லதையே நாவுடையோய் - வல்ல

அறிவுடையோய் அன்புடையோய் யார்க்கும் உதவும்

நெறியுடையோய்  நீள்புகழோய் நெஞ்சம் - அறிந்தவர்கள் 

என்றும் மறவா இயல்புடையோய்  இன் தமிழால்

நன்று இந்த நாடறிந்த நற்கவிஜன்  - பொன்றாத

சீறாய்ப் புகழ் பாடும் சீர்சால் ஷரீபுகவி 

மாறாத அன்புடனே வாழ்திமிக நேரார்ந்த

ஆதரவுடனே அரிய சலாமுசைத்து

�� News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Coron...

Kalaignar News LIVE | கலைஞர் செய்திகள் | Latest Tamil News | DMK முப்பெர...

Sunday, September 13, 2020

Keep hope/ நம்பிக்கை/ ALIBABA

 

புதிய கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த இறைவனிடம் இறைஞ்சுங்கள்


 புதிய கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த இறைவனிடம் இறைஞ்சுங்கள் 

சர்வவல்லமையுள்ள இறைவனே , எல்லாம் உமது இறையாண்மையின் கட்டுப்பாட்டில் இருப்பதை நாங்கள் அறிவோம். 

இந்த புதிய கொரோனா வைரஸை தொடர்ந்து பரவாமல் இருக்குமாறு உன்னிடமே நாங்கள் வேண்டுகின்றோம். . பிற நாடுகளிலிருந்து வரும் மக்களை பாதுகாப்பாக கையாளும் திறனை அரசாங்க அதிகாரிகளுக்கு கொடுங்கள். 

தேவையில்லாமல் பயணம் செய்வதற்கோ அல்லது வெளியே செல்வதற்கோ பதிலாக வீட்டிலேயே இருக்க முடிவு செய்ய மக்களுக்கு உதவுங்கள். 


 கைகளை ஒழுங்காக கழுவ நினைவூட்டுங்கள். வயதானவர்களிடமிருந்தோ அல்லது அதிக ஆபத்துள்ள பிற குடும்ப உறுப்பினர்களிடமிருந்தோ தங்கள் தூரத்தை வைத்திருக்க முடிவு செய்தால், அது மனதைக் கவரும் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.


இறைவன்தான் நமக்கு  அடைக்கலமும் பலமும் தருபவன் , 

அவன்தான் நமக்கு  எப்போதும்  உதவி. செய்பவன் அதனால் ,  நாம் பயப்பட மாட்டோம்

சர்வவல்லமையுள்ள இறைவனே , எல்லாம் உமது இறையாண்மையின் கட்டுப்பாட்டில் இருப்பதை நாங்கள் அறிவோம். இறைவா எங்களுக்கு நீ பாதுகாப்பு தந்தருள்வாய் .நீயே எங்களுக்கு பாதுகாவலன் 

வாழக்கற்போம் வாங்க உறவுகளே...


 

ஒன்றை பெற ஒன்றை இழப்பது காலத்தின் கட்டாயம்


 

சூர்யா



 

கல்வி ரத்னா விருது பெற்றார் கலீல் பாகவீ

 கல்வி ரத்னா விருது பெற்றார் கலீல் பாகவீ




சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. 

Friday, September 11, 2020

மழை இரவு !

 மழை இரவு !

தூறலும் சாரலுமாக

முனகிக்கொண்டிருந்த தூவானம்...

ஓர்

உச்சகட்ட பிரசவ ஒலியோடு

அடைமழை யொன்றைப்

பிரசவித்து ஓய்ந்தது !

செவிக் கெட்டிய தொலைவில்

இடி இசைப்பதற்கு முன்னரே

மின்னலின் வெளிச்ச கீற்றொன்று

சாளர வெளியில்

மெர்க்குரி தெளித்தது!

#தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_15 அபு ஹாஷிமா

    #வாப்பா_காட்டிய_வழி



1980 ம் ஆண்டின் மே மாத சனிக்கிழமை என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான நாளாக விடிந்தது.

என்னோடு வேலைக்கு வந்தவர்களெல்லாம் அவரவர்களுக்கு 

ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டிருக்க நான் மட்டும் 

எனக்கு ஒதுக்கப்பட்ட ஹவ்ஸ்கீப்பர் 

வேலையைச் செய்யாமல் நின்று கொண்டிருந்தேன்.

மெஷின்களில் வேலை செய்து கொண்டிருந்த சில ஆப்பரேட்டர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்.

என்னிடம் பேசவே அவர்கள் அச்சப்பட்டார்கள்.

என்னுடைய பேட்சில் புதிதாக வேலைக்கு வந்தவர்களிடமாவது 

பேசலாம் என்றால் அவர்கள் என்னைத் திரும்பிப் பார்க்கக் கூட தயாராக இல்லை.

இவனிடம் பேசினால் இவனுக்குப் பதிலாக நாம் அந்த வேலையை செய்ய வேண்டி வந்து விடுமோ என்று பயந்தார்கள்.

அப்போதுதான் ..

#தொட்டால்_தொடரும் .... #குறுந்தொடர்_14 அபு ஹாஷிமா





 வீட்டிலிருந்து புறப்பட்டு

பாம்பேயில் இன்னல்பட்டு

ஒருவழியாக சவுதி அரேபியாவின் 

தம்மாமுக்குப் போய் வேலையில் சேர்ந்து 

ஒருமாதம் முடிந்து விட்டது.

தங்குமிடத்திலும் பணிபுரியும் இடத்திலும் ஏகதேசம் எல்லோருடனும் 

ஓர் அறிமுகம் ஏற்பட்டு யார் யார் என்னென்ன குணநலன் உடையவர்கள் 

என்பதையும் ஓரளவு தெரிந்து கொண்டேன்.

நானும் நண்பர்கள் மீரானும் அன்வரும் 

தனியே சமையல் செய்து சாப்பிட்டோம்.

அவர்கள் இருவரும் பிளாஸ்டிக் எக்ஸ்டுரூடரில் வேலை செய்தார்கள்.

நான் பிளாஸ்டிக் கட்டிங் மெஷினில் 

வேலை செய்தேன்.

நான் வேலை செய்த செக்‌ஷனில் விதவிதமாக ஏராளமான மெஷின்கள் 

இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பிளாஸ்டிக் பைகளை தயார் செய்யக்கூடியவை.

ஷாப்பிங் மால் பைகள் முதல் 

கிச்சன் ட்ராஷ் பேக் வரை எல்லாவிதமான பயன்பாட்டுக்கும் 

அங்கே பைகள் தயாராகிக் கொண்டிருந்தன.

#தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_13 அபு ஹாஷிமா

 வளைகுடா நாடுகளின் 






வாழ்க்கைமுறை விசித்திர அனுபவங்களை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

உணவு , உடை , கலாச்சார மாற்றங்கள் 

நம்மிடம் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் 

இந்தத் தொடரில் தொட்டுக் காட்டலாம்.

இப்போது நான் வேலைசெய்த பேக்டரிக்குப் போவோம்.

அங்கே கொஞ்சம் வேலை இருக்கு.

அதை முடித்து விட்டு மற்ற விஷயங்களைத் தொடரலாம்.

எங்கள் பிளாஸ்டிக் செக்‌ஷனுக்கு இரண்டு சூப்பர்வைசர்கள்.

இருவருமே லெபனானிகள்.

எக்ஸ்டுரூடர் செக்‌ஷனுக்கு ஏழடி உயரத்தில் வாட்டசாட்டமான ஒருவர்.

வயது நாற்பதுக்கு மேல் இருக்கும்.

பெயர் அனீஸ்.

அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

காரணம் என் மகன் பெயர் அனஸ்.

அவரும் என்னிடம் அன்பாக நடந்து கொள்வார்.

மற்றொருவர் இளைஞர் .

பிளாஸ்டிக் கட்டிங் செக்‌ஷன் சூப்பர்வைசர்.

பெயர் ...

நம்ம அபிமான கிரிக்கெட் கேப்டனின் பெயர்தான். டோனி.

இருவர் இருந்தாலும் அனீஸ்க்குத்தான் 

நிறைய அதிகாரம்.

ஒரு மெஷின் ஹெல்ப்பராக வேலை செய்து கொண்டிருந்த என்னை ஒருநாள் 

அனீஸ் அழைத்தார்.

போனேன்.

Thursday, September 10, 2020

தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_12 அபு ஹாஷிமா

 லெபனான் ...

நான் பார்க்க ஆசைப்பட்ட நாடுகளில் ஒன்று லெபனான்.

கழிந்த அத்தியாயத்தில் நான் சவுதியில் வேலை பார்த்த கம்பனியைப் பற்றி சொல்லி இருந்தேன்.

அதன் உரிமையாளர் அரபி என்றாலும் பெயரளவுக்குத்தான் அவர் கபில்.

கம்பெனியின் ஏராளமான பங்குகளும் முழு அதிகாரமும் நிர்வாகப் பொறுப்பும் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்களின்

கைவசமே இருந்தது .

#ஜார்ஜ்பிரேம்

#ஷஃபி_பிரேம்

#ரஃபி_பிரேம்

என்ற மூன்று லெபனான் சகோதரரர்கள்தான் சகலமும்.

இதில் ஜார்ஜ் பிரேம் லெபனான் நாட்டு மந்திரியாகவும் இருந்தார்.

அங்கேயும் அவர்களுக்கு பல தொழிற்சாலைகள் இருந்தன.

சனிதா Sanitha என்ற பெயரில் அந்தத் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.

லெபனானைப் பற்றி இப்போது சொல்ல என்ன காரணம் ?

சமீபத்தில் லெபனானில் நிகழ்ந்த எரிபொருள் வெடிப்பு சம்பவம் நமக்கெல்லாம் தெரியும்.

A Woman in God's Service

 

Count Your Blessings

Amazing! Top 10 Muslim inventions.

 

Monday, September 7, 2020

Taste of life ( its me malli )

உடல் சோர்வை நீக்க இது உதவும்

எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத பதிவு. நாகூர் E,M.ஹனிபா


 (2015-ல் நண்பர் சாரு நிவேதிதா எழுதிய சிறப்பான பதிவு இது. எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத பதிவு. நாகூர் E,M.ஹனிபா அவர்களுடைய பெயரை பலரும் ஈ.எம்.ஹனீபா என்று தவறாக எழுதுகிறார்கள். அவர்களுடைய தந்தையார் பெயருடன் இணைத்து முழுப்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனீஃபா. ஆகவே இ.எம்.ஹனீஃபா என்பதே சரி.) 



இசை அதிசயம் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா

=================================

சாரு நிவேதிதா

சில தினங்களுக்கு முன்னால் புதிய தலைமுறையில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா பற்றிய கட்டுரை அது.  இந்தக் குறிப்பிட்ட கட்டுரை புதிய தலைமுறை இதழில் வெளிவந்த பதினெட்டாவது கட்டுரை.  இந்த வாரத்தோடு அந்த இதழில் 20 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

***

இனிய 41 வது திருமண நாள் வாழ்த்துக்கள்!

 Happy 41st Wedding Anniversary to Yusuf and Fawziah!


Team Yusuf / Cat Stevens


Friday, September 4, 2020

பள்ளிவாசலில் சென்று ஜூம்மா தொழ வாய்ப்பு கிடைத்தது.

 Mohamed Ashik


அஸ்ஸலாமு அலைக்கும்.

மார்ச் 20க்கு பிறகு இன்றுதான் எங்கள் ஊர் பள்ளிவாசலில் சென்று ஜூம்மா தொழ வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

முதல் ஜூம்மா பாங்கு சொல்லிக்கொண்டு இருக்கையில்... பள்ளிக்கு சென்றால்...

மாஸ்க் உள்ளே நுழையும் முன்பு அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவும்... 

நுழைவுவாயிலில் இருந்த ஹேண்ட் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தவும்...

ஒரு நபர் அமர வேண்டிய அளவுக்கு இடைவெளி விட்டு குத்பாவில் அமரவும்...

ஒரு ஸ்டூல் போடக்கூடிய அளவு இடைவெளி விட்டு ஒரு ஸ்டூல் போடப்பட்டுள்ளபடியே உட்கார்ந்து தொழவந்த வயதானோர் அமரவும்...

நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

Thursday, September 3, 2020

Dr Kafeel Khan Meet their family| Dr kafeel Khan Released from Mathura J...

Sound Advice for Retirees

 Sound Advice for  Retirees



🚩Between 60 and death. It’s time to use the money you saved up. Use it and enjoy it.  Don’t just keep it for those who may have no notion of the sacrifices you made to get it. Remember there is nothing more dangerous than a son or daughter-in-law with big ideas for your hard-earned capital.


🚩Warning: This is also a bad time for investments, even if it seems wonderful or fool-proof. They only bring problems and worries. This is a time for you to enjoy some peace and quiet.


🚩Keep a healthy life, without great physical effort. Do moderate exercise (like walking every day), eat well and get your sleep. It’s easy to become sick, and it gets harder to remain healthy. That is why you need to keep yourself in good shape and be aware of your medical and physical needs. Keep in touch with your doctor, do tests even when you’re feeling well. Stay informed.