Friday, October 30, 2020

SubhanAllah- Kamal Uddin (LYRICS)

Hafiz Ahmadullah Live at Sheffield University | Ya Adheeman

Abu Haashima #பூவுலகின்_புகழ்_வசந்தம்


இருட்டு ...

 

உள்ளமும்

 

உலகமும் !

 

அதோ ...

 

மெல்லிய

 

ஒளிக்கீற்று !

 

அது...

 

ரபிய்யுல் அவ்வல் நிலவின்

 

முதல் புன்னகை !

 

அய்யாமுல் ஜாஹிலிய்யாவின்

 

அடிவயிற்றில்

 

இடி மின்னல் !

 

லேசாக கலைந்தது

 

குஃப்ரியத்தின்

 

கர்ப்பம் !

 

அபு ஜஹலின்

 

கனவில்

 

இஸ்ராயீல் !

 

ஜம்ஜம் தண்ணீரில்

 

புதிதாய்

 

ஒரு தித்திப்பு !

 

கஃபாவின்

 

சிலைகளுக்கு

 

திடீர் ஜன்னி !

 

கண்விழிக்க மறுத்த

 

கர்ப்பத்து பெண் சிசுக்களுக்கு

 

ஆனந்த விழிப்பு !

 

ஹிராக்

 

குகை வயிற்றில்

 

வேத வெளிச்சம் !

 

மக்கத்து

 

மணல் பரப்பில்

 

கஸ்தூரி வாசம் !

 

வான் வெளியெங்கும்

 

வானவர்

 

வாழ்த்தொலி !

 

வானத்து சொர்க்கம்

 

விண்ணுக்கு வரும்

 

விஷேச வரம் !

 

இறைவனின் தூதர்

 

முஹம்மது ரசூலுல்லாஹ்

 

பிறந்த மாதம் !

 

மாநிலமெங்கும்

 

மாநபியின்

 

வாசம் !

 

மண்ணுக்கோ ...

 

புத்தம் புது

 

சுவாசம் !

 

Abu Haashima

 

#மீலாதுன்னபி_வாழ்த்துக்கள்

 


Wednesday, October 28, 2020

பிரான்ஸ் நாட்டுப்பெண்மணி மர்யம் சோஃபியா அந்நாட்டு ஜனாதிபதி மெக்ரோனுக்கு எழுதிய கடிதம்

 


பிரான்ஸ் நாட்டுப்பெண்மணி மர்யம் சோஃபியா


அந்நாட்டு ஜனாதிபதி மெக்ரோனுக்கு எழுதிய கடிதம்


    "நான் ஏன் இஸ்லாமை தழுவினேன்"     


    தமிழ் வடிவம் : முஹம்மத் பகீஹுத்தீன்     


படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது... 


அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி காட்டிவிட்டால் 


அவர்களது உள்ளக்கிடக்கை எவ்வாறு இருக்கும் என்பதற்கு 


இஸ்லாமைத்தழுவிய இச் சகோதரியின் கடிதம் ஒரு சான்று.

இழந்தது எல்லாம் திரும்பத்தா எனக் கேட்டேன்

 



* இழந்தது எல்லாம் திரும்பத்தா எனக் கேட்டேன்*

*இழந்தது எவை என இறைவன் கேட்டான்*

*பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்*

*பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்*

கால மாற்றத்தில் *இளமையை* இழந்தேன்

கோலம் மாறி *அழகையும்* இழந்தேன்

வயதாக ஆக *உடல் நலம்* இழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்

இறைவன் கேட்கையில்

Tuesday, October 27, 2020

முடிந்தவரை அடிக்கடி சிந்தித்து சுயமாக இருக்க…

 முடிந்தவரை அடிக்கடி சிந்தித்து  சுயமாக இருக்க…


சிறந்த எதிர்காலத்தை நோக்கி நம்  பாதையில் தொடர…


அந்தச் செயல்பாட்டில் மற்றவர்களும் இதைச் செய்ய உதவ 


நினைவில் வைத்து கொள்ளுங்கள், நாம்  ஒன்றாக இந்த சவாலில் இருக்கிறோம்.


இந்த காலங்களில் மக்களுக்கு ஒளியின் தீப்பொறி தேவை, நாம்  அந்த ஒளியாக இருக்க முடிவு செய்யலாம்.


குறைந்தபட்சம், வெற்றிகரமான 2021 க்கு நம்மை  அமைத்துக் கொள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.


நாம்  சிறப்பாக இருக்க உதவும் சில புதிய திறன்களைக் கற்றுக்கொள்வோம் 


ஒரு சில திட்டங்களை முடிக்கவும், இதன் மூலம் நாம்  ஒரு உயர்வாக   தொடங்கலாம்.


நம்  முன்னோக்கை மாற்றும் சில வணிக அல்லது சுய மேம்பாட்டு புத்தகங்களைப் படிக்க வேண்டும் .


ஆயினும்கூட, இந்த கடைசி இரண்டு மாதங்களில் கடுமையாகச் உழைக்க வேண்டும் .


நம்மை நாமே  கேட்டுக்கொள்வோம் , ‘நான் உறுதிபூண்டுள்ள நாளை உருவாக்க நான் இன்று எப்படி வாழப் போகிறேன்?’


நமக்கு  இது ஒரு உந்துதல் சக்தி .


உங்கள் வெற்றிக்கு,

Monday, October 26, 2020

ரபீஉல் அவ்வல்!

 ரபீஉல் அவ்வல்!

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து வேறுபாடு உள்ளது.

அடுத்த நாற்பதாண்டுகள் வரை மக்க மாநகரில் முஹம்மது (ஸல்) மற்றவர்களைப் போல சாதாரண ஒருவராகத்தான் இருந்து வந்தார்கள். அவர்களது வாழ்க்கையும் இயல்பான ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று முஹம்மது (ஸல்) அவர்களிடம் இருந்தது. அந்த மக்களிடம் குடிகொண்டிருந்த அனாச்சாரம் மட்டும் அவர்களிடம் இல்லை. அறவே இல்லை. ஒழுக்கச் சீலராக, நம்பிக்கைக்கு உரியவராக, உலக மகா உத்தமராக, அந்த மண்ணில் அம்மனிதர் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தார்.

நாற்பதாவது வயதில்தான் அவருக்கு நபித்துவம் அருளப்பட்டது. குர்ஆன் வசனங்கள் விண்ணிலிருந்து இறங்கத் தொடங்கின. மக்கத்து மக்களுள் ஒருவராக இருந்த சாமானிய அம்மனிதர், மாமனிதர் ஆகிப்போனார். அதற்கடுத்த 23 ஆண்டுகளில் உலகைப் புரட்டிப் போடும் அதிசயம் நிகழ்ந்தது! பாலைவன பூமியின் நடுவில் அமைந்த மக்க நகரில் உள்ள கருங்கல் ஆலயம், உலக மக்களும் முகங்களைத் திருப்பிக்கொள்ளும் மையப்புள்ளி ஆனது. மக்கள் அனைவருக்கும் அந்த இறுதி நபியின் சொல்லும் செயலும் அறிவிப்பும் ஆதர்சமாயின. உலகின் சொச்ச காலத்திற்குமான விதி வரம்புகள் மார்க்கமாயின.

Singapore சிங்கப்பூர்

 

நபிகள் நாயகம், நற்குணக் களஞ்சியம் (S1.E8) - வீரமிக்கவர் #maulid

நபிகள் நாயகம், நற்குணக் களஞ்சியம் (S1.E9) - பொறுமையாளர் #maulid

Dr Mohamed Mashaly ஒரு சம்பவம்; ஒரு சரித்திரம்! ஏழைகளின் மருத்துவர் முகம்மத் மஷாலி

 

கமலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஹாசன்?

 கமலுக்கு பின்னால் 

ஒளிந்திருக்கும் ஹாசன்? 


தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன் அவரின் சகோதரர்கள் சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர் பெயருக்கு பின்னால் இருக்கும் #ஹாசன் ஒரு இஸ்லாமியர்.. 

யாகூப் ஹாசன் சேட் 

நாக்பூரில் பிறந்து சென்னை மாகாணத்தின் அரசியல் பிரபலமாக விளங்கியவர்.. 

முஸ்லீம் லீக் துவங்கிய ஆரம்ப காலத்தில் சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், 1916- 19 வரை சென்னை மாகாண மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.. 

பிற்காலத்தில் காங்கிரசில் இணைந்த யாகூப் ஹாசன்,  ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தின் முதல் முஸ்லீம் அமைச்சர் எனும் அந்தஸ்துடன் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பெருமைக்குரியவர்.. 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய யாகூப் ஹாசன், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற கிலாபத் போராட்டத்தில் கலந்து கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த காரணமாக பிற்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தவர்.. 

திருமணத்தை அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்வதில் முஸ்லிம் சமூகத்தவர்கள் மெத்தனம் காட்டக்கூடாது.

 


திருமணத்தை அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்வதில் முஸ்லிம் சமூகத்தவர்கள் மெத்தனம் காட்டக்கூடாது.

முஹல்லா / ஜமாஅத்களில் திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் பதிவாளர் அலுவலகம் சென்று அரசு ஏட்டிலும் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதி.

3 மாதம் கழித்து சென்றால் உடனடியாக நமது விண்ணப்பத்தை ஏற்க மாட்டார்கள், மாறாக அதை அலுவலக விளம்பரப் பலகையில் ஒரு மாத காலம் பொது மக்கள் பார்வைக்காக இட்டு வைப்பார்கள்.

Saturday, October 24, 2020

Dua has the ability to change one’s destiny

 


AS human beings, our life in this world is characterized by fluctuating conditions making us happy and sad. No one experiences perpetual bliss or misery. Life by its very nature is a test.

Allah says: “He is the One that has created Life and Death in order to test who amongst you is best in conduct.” (Qur’an, 67:2)

Pleasant and favorable conditions demand us to be grateful and humble or adverse conditions require us to be patient and to seek Allah’s help.

As Believers we ought to believe that every condition is a manifestation of the Will of Allah. What has passed us was not meant to befall us and what has befallen us was not meant to pass us. Assistance comes with patience, relief after affliction and ease after difficulty (Tirmidhi). Our faith and belief is tested when we undergo difficulties and afflictions. These difficulties may be physical, emotional, financial and/or psychological. This is borne out by the following verse: “Verily We will test you with some fear, hunger, and loss of wealth, life or the fruits (of your labor.” (Qur’an, 2:155)

These adverse conditions may at times be upon an individual, a family, a community or upon a large section of the Ummah as is the current case of Palestine, Syria, Afghanistan and Myanmar. Muslims believe in Islam and making supplication or dua before Allah Almighty is what they consider as a weapon in their hands to solve their problems. Prayers or dua are panacea for the present problems facing the Ummah today. In Hadith we find that the Noble Messenger of Allah (peace be upon him) came across a community of people going through a tribulation. He advised, “Why don’t they supplicate (make dua) to Allah for assistance?”

Rules of a Masjid

  


1- It is quoted from most Islamic scholars as follows: "they should recite the formula of endowment for a piece of land to make it as masjid, like (I endow it as masjid for the sake of Allah). However, according to the stronger view it suffices to make it a masjid if they build it as a masjid for the sake of Allah and a person say a prayer in it with the permission of the sponser.



2- De facto deed in endowing as a masjid is sufficient provided that his aim in construction is its construction/renovation as a masjid, specialy when one constructs a building on an ownerless piece of land. While if one has a house/shop, intends it to be a masjid and forces people to say their prayer there, it is problematic to suffice like that without reciting the formula of endowment deed. 


3- After being built as a masjid it does not belong to a specific nationality, group, tribe, or individuals, and it is permissible for all Muslims to make use of it.

Friday, October 23, 2020

Bangladeshi Fans of Erdogan நல்லதொரு நேர்காணல்

 

மொழியழகி பர்வீன் சுல்தானா

 

தெரியாத சட்டங்களை தெரிந்து கொள்வோம்

I Remember Your Smile Zain Bhikha

 I Remember Your Smile

Zain Bhikha

Where there is a right there is no wrong,

I always thought we were so strong,

But our time just flew by,

There wasnt a chance to say goodbye.

Am so confused,

I feel all alone

Deep in my heart,

I know Allah has called you home.

But yea your smile still lingers in my mind,

And yea its so hard i just break down and cry.

I remember the time our friendship was strong,

I remember your eyes find a way to melt my heart,

Most of all I remember your smile.

Some times I lie awake at night the pain in my heart,

I just cant find why did you have to go away,

Yet i know none of us can stay you will always be so special to…

.தமிழ் பாடல்கள்


 

Saji Saji shared live audio

https://www.facebook.com

Wednesday, October 21, 2020

சாபி மதமும் அனபி மதமும்

 சாபி மதமும் அனபி மதமும்


இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முஸ்லீம்களின் 1800 முதல் 1950 வரையிலான நில ஆவனங்களில் கிடைத்த தகவல்


1800லிருந்து 1920 வரை ஆவனங்களில் இங்கு வாழ்ந்த ராவுத்தர்கள் தங்களை முகம்மதிய மதம் இஸ்லாமிய மதம் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை

துலுக்கசாதி என்றே பதிவு செய்துள்ளார்கள்

தங்கள் பெயருக்குப் பின்னால் ராவுத்தர் லெப்பை, மரைக்காயர் என்ற பதிவு செய்துள்ளார்

சிலர் பெயருக்கு முன்னால் அம்பலம் இனாம்தார் என்ற பட்டங்களையும் பதிவு செய்துள்ளனர்

Monday, October 19, 2020

Burda sharif tamil_final புர்தா ஷரீஃ

 


Yaa Nabi - Yuvan Shankar Raja ft. Rizwan | U1 Records

புர்தா ஷரீஃ Burdha Shariff Tamil

 

Beautiful Qaseeda_tul Burda in Tamil.flv

Qasida Burda Sharif with translation- Mehmood Ul Hassan Ashrafi

Qasida Burda Sharif, Without Music. Qaseeda Burda Shareef.

உளத்தூய்மை

 அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ்

 

உளத்தூய்மை


قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا  وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا


(உள்ளத்தை) தூய்மைப்படுத்தி கொண்டவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார். ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். (அல் குர்ஆன் 92:9,10)

.

இமாம் கஸ்ஸாலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:


தெளிந்த உள்ளம் கொண்ட மெய்ஞ்ஞானிக்கு எதிரில் அமர்ந்து அவரது சைக்கினையின் படிச் செயலாற்ற வேண்டும். இது ஒரு மனிதனுக்கும் அவன் பின்பற்றி நடக்கும் பெரியாருக்கும் இடையில் நடைபெறும் முறை: ஆசிரியருக்கும் மாணவனுக்கும் நடுவில் உருப்பெறும் முறை!

புர்தா ஷரீஃப் புகலும் புகழுரைகள்

 புர்தா ஷரீஃப் புகலும் புகழுரைகள்

 அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ்

புர்தா ஷரீஃப் புகலும் புகழுரைகள்


(ஆய்வுக் கட்டுரை )


 


பன்னூலாசிரியர், முனைவர் தக்கலை எம்.எஸ். பஷீர்

இயக்குநர்

இஸ்லாமியத் தமிழியல் ஆய்வகம்

நாகர்கோவில் -

எகிப்து நாட்டு மாமேதை இமாம் ஷர்புத்தீன் முஹம்மது அல்பூஸிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கி.பி. 1211-1299, அவர்கள் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது காதல் கவிதைகளால் பாடிய கஸீதத்துல் புர்தா புகழுரைப் பாமாலை.


அற்புத மொழியாம் அரபியில் கஸீதத்துல் புர்தா அமைந்துள்ளது. கஸீதத்துல் புர்தா = புர்உத்தா - பிணி நீங்கல், புர்தா - பரிவட்டம் போர்வை என முறையே பொருட்படும்.


இமாம் பூஸிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் நோயினால் ஆறாத்துயருற்றபோது நபிகள் நாயகத்தின் மீது தாம் கொண்டிருந்த காதலை, பேரன்பினை - பாசத்தினை நேசத்தினை பாமாலையாகச் சூட்டியுள்ளார்கள் . இது 163 அரபு மொழியில் ஈரடிகளால் ஆனது. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், இமாம் பூஸிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் கனவில் தோற்றமாகி, அவர்களின் உடலைத் தம் திருக்கரங்களால் தொட்டுத் தடவினார்கள். இந்த ஆன்மிக உணர்வால்,பாவலர் பூஸிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின்  பிணி பரிபூரண குணமடைந்தது. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் போர்வையை தனக்கு உயர்த்திய காட்சியையும் பூசிரியார் கனவில் கண்டுகளித்து பேருவகை கொண்டார்கள்.

Sunday, October 18, 2020

MILADUN NABI: DAY 1 | 1 Rabiul-awal 1442 ரபீயுல் அவ்வல் 1442 மீலாதுன் நபி மவ்லித்

 

MILADUN NABI: DAY 2 | 2 Rabiul-awal 1442

⭐நபிகள் நாயகம், நற்குணக் களஞ்சியம் ⭐

 📡e-bayaan  | இ-பயான்📲

⭐நபிகள் நாயகம், நற்குணக் களஞ்சியம்  ⭐

Season 1 | Episode 1

📃 தலைப்பு: இரக்க சீலர் 

🗓️ நாள்: 18 Oct 2020 | Saturday 

🎤 உரைவீச்சு: மௌலானா அப்துல் கைய்யூம் பாகவி

🕌 மஸ்ஜித் பென்கூலன்,

சிங்கப்பூர்.

Stay Connected with us:

Follow us on @ Masjid Bencoolen

Subscribe to our channel @ youtube.com/masjidbencoolenTV

Follow us on @ instagram.com/masjid.bencoolen

e-Donations: www.masjidbencoolen.org

1]கருணை நபி(ஸல்) MILADUN NABI: DAY 1 | 1 Rabiul-awal 1442

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்

 திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்

1. ஆதம் அலைஹிஸ் ஸலாம்

2. நூஹ் அலைஹிஸ் ஸலாம்

3. இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம்

4. இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம்

5. இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம்

6. இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம்

7. யஃகூப் அலைஹிஸ் ஸலாம்

8. யூஸுஃப் அலைஹிஸ் ஸலாம்

9. லூத் அலைஹிஸ் ஸலாம்

10. ஹுத் அலைஹிஸ் ஸலாம்

11. ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம்

12. ஷுஐப் அலைஹிஸ் ஸலாம்

13. மூஸா அலைஹிஸ் ஸலாம்

14. ஹாரூன் அலைஹிஸ் ஸலாம்

15. தாவூத் அலைஹிஸ் ஸலாம்

16. ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம்

17. அய்யூப் அலைஹிஸ் ஸலாம்

18. துல்கிஃப்லு அலைஹிஸ் ஸலாம்

19. யூனுஸ் அலைஹிஸ் ஸலாம்

20. இல்யாஸ் அலைஹிஸ் ஸலாம்

21. அல்யஸவு அலைஹிஸ் ஸலாம்

22. ஜகரிய்யா அலைஹிஸ் ஸலாம்

23. யஹ்யா அலைஹிஸ் ஸலாம்

24. ஈஸா அலைஹிஸ் ஸலாம்

25. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம்

மருத்துவ முறையில் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்..

 மருத்துவ முறையில் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்..

ஏன் 3 or 5 நாட்களுக்கு மாத்திரை எடுக்க வேண்டும்?

ஏன் வலி மாத்திரைகள்& மருத்துவர் அறிவுரையின்றி மருந்து கடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்க கூடாது?

விளக்கங்களுக்குடன்

இதுதான் எனது சொத்து

 

கல்வியை தாம் பெற்று மற்றவர்களுக்கும் எத்தி வைப்போம்

 

அறியாமை இருள் சூழ்ந்த அரபகத்து பாலையிலே

 அறியாமை இருள்  சூழ்ந்த அரபகத்து  பாலையிலே

பாடியவர் -  காவியக்குரலோன் தேரிழந்தூர் தாஜுத்தீன் ஃபைஜி


பாடல் வரிகள்

 காயல் யஹ்யா முஹிய்யத்தீன்


இசை - முரளிதரன்

___________


அறியாமை இருள்  சூழ்ந்த அரபகத்து  பாலையிலே

அறிவென்னும் நிலவாக அடிவானில் உதித்தனரே.....

அறிவுக்கண் திறந்தார்....அறியாமை ஒழித்தார்

ஏற்றவர் வென்றார் ...இகழ்ந்தவர் தோற்றார்

மறக்குமோ நெஞ்சம்... எம்மாநபியை.... ஆ...ஆ...ஆ...

Saturday, October 17, 2020

இஸ்லாமிய பாடல்கள் - கலந்துரையாடல்-6.

அபூஹுரைரா

 அபூஹுரைரா

=============

இவர் அறிவித்த நபிமொழிகள் அனேகம்

அபார நினைவாற்றல் இவரது சினேகம்

தந்தை இறந்தபின் வறுமைப்பிணி

புஸ்ரா என்ற பெண்ணிடம் பணி

அவளது ஒட்டகைகளின் பின்னால் 

பாடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் செல்வார்

பின்னாளில் அந்த புஸ்ரா இவரது மனைவியானார்

வறுமையில் எஜமானியாய் இருந்தவர் செழுமையில் துணைவியானார்

கைபரில் பெருமானாரின் கைப்பிடித்த அபூஹுரைரா

இறுதிவரை அக்கையை விடவேயில்லை

ஆரம்பத்தில் அவர் அப்துர் ரஹ்மான் என்றும்

அப்துல்லாஹ் என்றும் அழைக்கப்பட்டார்

Thursday, October 15, 2020

Challenge_எல்லாம்_இல்லை. ஒரு ஆர்வமூட்டல் . / Abu Haashima

 Challenge_எல்லாம்_இல்லை.

ஒரு ஆர்வமூட்டல் . 

அவ்வளவுதான் .

சேலஞ்சுக்கு வாறவங்க வரலாம் !

ஆரோக்ய வாழ்வினை காப்பது லைபாய்

விளம்பர படத்தை தியேட்டர்ல பார்த்திருப்போம் .

அது மாதிரி இதுவும் ஆரோக்கிய வாழ்வுக்குத் தேவையான ஒரு

உடற்பயிற்சி .... !

காலையில் ஒரு மணி நேரம்

மாலையில் ஒரு மணி நேரம்

இதைப் பார்த்து நீங்களும் 

இப்படி விளையாட ஆரம்பிச்சா

அதுதான் எனக்கு சந்தோஷம் !



Abu Haashima

Wednesday, October 14, 2020

#அல்குர்ஆன் உலகமக்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டும் மிஸ்பண்ணாதிங்க மக்களே

 

இது தான் நான்... ��முதன்முறையாக முகம் காட்டி பேசியிருக்கிறேன் ��

பாய் வீட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | World Famous chicken Biryani

பாய் வீட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | World Famous chicken Biryani

பாய் வீட்டு பிரியாணி - Muslims Biriyani - சிக்கன் | மட்டன் - Chicken | M...

பாய் வீட்டு பிரியாணி - Muslims Biriyani - சிக்கன் | மட்டன் - Chicken | M...

பாய் வீட்டு பிரியாணி - Muslims Biriyani - சிக்கன் | மட்டன் - Chicken | M...

பாய் வீட்டு பிரியாணி - Muslims Biriyani - சிக்கன் | மட்டன் - Chicken | M...

இறைவன் இருக்கிறானா இல்லையா?


 

Tuesday, October 13, 2020

12. நான்தான் அது

==============
நாகூர் ரூமி



”நீங்கள் பிறந்த தேதி என்ன?” 
”நான் பிறக்கவே இல்லை!”
”உங்களுக்கு இறப்பைப் பற்றிய பயமில்லையா?”
”நான் ஏற்கனவே இறந்துவிட்டேன்.”
”நான் யார்?”
”நீ எது இல்லை என்று தெரிந்துகொண்டால் போதும். நீ யார் என்று தெரியவேண்டியதில்லை. நீ யார் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது. நான் இதுதான் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. நான் இதுவல்ல, நான் அதுவல்ல என்றுதான் சொல்லமுடியும்”. 
”தூங்கி விழிக்கும்போது இவ்வுலகம் திடீரென்று நமக்குத் தோன்றுகிறது. அது எங்கிருந்து வருகிறது?”
”அது தோன்றுவது இருக்கட்டும். ஆனால் அது யாருக்குத் தோன்றுகிறது? வருவது போவது எல்லாமே எப்போதுமே போகாத ஒரு பின்புலத்தில்தான் நிகழவேண்டும்”. 
”தூங்கும்போது அறியப்படுவது எதுவும் இல்லை, அறிபவனும் இல்லையல்லவா?”

Wednesday, October 7, 2020

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, நாசா நடத்திய சர்வதேச போட்டியில் விருது வென்றுள்ளதாக

 Aashiq Ahamed



அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, நாசா நடத்திய சர்வதேச போட்டியில் விருது வென்றுள்ளதாக அந்த பல்கலைக்கழக இணையதளம் செய்தி  வெளியிட்டுள்ளது. 

"Space Apps Challenge" என்ற பெயரில் நான்கு விண்வெளி மையங்களுடன் இணைந்து வருடா வருடம் இப்போட்டியை நடத்துகிறது நாசா. இவ்வருடம் 150 நாடுகளை சேர்ந்த 26,000+ மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். 

அக்டோபர் 2-டிலிருந்து நான்காம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் ஆயிஷா சம்தானி தலைமையிலான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக குழு (பார்க்க படம்), நடுவர் விருப்பத்தேர்வு விருதை வென்றுள்ளது. 

கங்கை மற்றும் சிந்து நதிகள் பாயும் வட இந்திய பகுதிகளில், கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலக்கட்டங்களில் காற்றின் தரம் குறித்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர் இக்குழுவினர். காற்றின் தரம் உயர்வதால் ஏற்படும் உடல்நல ஆரோக்கியம் குறித்து விரிவாக பேசுகிறது இவர்களின் ஆய்வறிக்கை. 

Tuesday, October 6, 2020

தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் முஸ்லீம்கள் முன்னணியில் இருந்தனர் .

 ஒரு காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் முஸ்லீம்கள் 

முன்னணியில் இருந்தனர் .


காலப்போக்கில் முஸ்லீம் நாடுகளில் உண்மையான ஜனநாயகங்கள் இல்லாமல் போனது 

 மத ஆய்வுகளில் மற்றும் மார்க்க சம்பந்தமான பாடங்களை கற்பிப்பதும் மட்டுமே கவனம் செலுத்தும் மதரஸாக்களுக்கு மதச்சார்பற்ற மற்ற கல்விகளில் முக்கியம் கொடுக்காமல் போனது முஸ்லிமகளை தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டன .

Sunday, October 4, 2020

786 என்றால் என்ன?

 ஆக்கம்: சத்தியமார்க்கம் -



மேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?  இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன?


பதில்:


786  என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை.  “நியூமராலஜி” என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் “நியூமராலஜி” அறிந்த  முஸ்லிம்களில் சிலர் அரபு எழுத்துக்களுக்கும் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அரபு எடுத்துக்களான அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம் மிற்கு 3 தால் லிற்கு 4.

Thursday, October 1, 2020

ஏகன் உண்மை தூதரே/ பாடுபவர் ஹாஜியப்பா

 Saif Saif

நண்பன் ஹாஜியப்பா பள்ளிக்காலங்களிலே மிக அருமையாக பாடல்கள் பாடுபவர்.. இப்போது smule வழியாக பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி...
என்றும் இனிய வாழ்த்துக்கள்..
Saif Saif