Sunday, July 26, 2020

யாரை எங்கே வைப்பது!


முதல் வருட எம்பிபிஎஸ்
மதுரை மருத்துவக்கல்லூரியில்
சேர்ந்த நேரம்.ஒரு நாள், ஊர்
பிரமுகர் அதுவும் ஒரு டாக்டர்
என்னை பார்க்க ஹாஸ்டல்
பக்கம் வந்தார்.

அவரை வரவேற்று உபசரித்து
மாலை நேரம் மதுரை பிரபல
தாஜ் ஹோட்டலுக்கு அழைத்து
சென்று விருந்து பரிமாறி வழி
அனுப்பி வைத்தேன்.மிகவும்
சந்தோசத்துடன் சென்றார்.

அடுத்த வாரம் லீவில் நான்
ஊர் வந்தேன்.அடுத்த நாள்
என்னிடம் பேசிக் கொண்டி
ருந்த தந்தை கேட்டார்...

என்னப்பா, நம்ம ஊர்
டாக்டரை பயங்கரமா கவனிச்சு
அனுப்பினியாமே. தாஜ் ஹோட்டல்ல
சிலோன் எக் ஸ்பெசல் பரோட்டா
எல்லாம் தடபுடலாக இருந்ததாமே!
Vavar F Habibullah
அவர் உங்க சொந்தக்காரர்
அதுவும் டாக்டர் வேறு..
முதல் முதலாக என்னை வந்து
பார்த்திருக்காரு..சரியா கவனிக்
காம அனுப்பினா ஏதாவது தப்பா
நினச்சுடுவாறோன்னு......தான்..

சும்மா நிறுத்துப்பா...!
நீ செய்தது கரெக்ட் தான்.
அந்த ஆளு என்ன சொன்னார்
தெரியுமா...உங்க பையனை
கொஞ்சம் கண்டித்து வைங்க
பணத்தை அள்ளி வீசுறான்
என்னால் கூட உங்க பையன்
அளவுக்கு ஊதாரித்தனமா
செலவு செய்ய முடியாது.
பாக்கட் மணியை கட்
பண்ணுங்க, எல்லாம்
சரியாயிடும் அப்படின்னு
சொல்றாரு..உள்ளபடியே
அடுத்த மாதம் பாக்கட்
மணி கட்டாகி விட்டது.

சிலரை திருப்தி படுத்த
முனையும் போது
அவர்களின்...
அதிருப்தியையும்
சேர்த்தே விலை பேச
வேண்டியிருக்கிறது.

இப்போதெல்லாம்
வாருங்கள்...வாருங்கள்!
என்று நண்பர்கள் அழைத்து
உபசரிக்கும் போது...
காலை வாருங்கள்!
காலை வாருங்கள்!!
என்றே காதில் விழுகிறது.

No comments: