Monday, July 27, 2020

நினைவில் மலர்ந்தவை!

நினைவில் மலர்ந்தவை!
———————————

இஸ்லாமிய இலக்கியக் கழக ஆளுமைகள்!
———————————————————
1972 ஆம் ஆண்டு தொடக்கம் பெற்ற
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில்
முதல் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் போது 13-05-1973 அன்று
பேராசிரியர் இ. ப. முஹம்மது இஸ்மாயில், பேராசிரியர் பெரும்புலவர் சி. நயினார் முஹம்மது
ஆகியோரை அமைப்பாளர்களாகவும் இறையருட்கவிமணி கா.அப்துல் கபூர், மெளலானா எம். அப்துல் வஹ்ஹாப், எம்.ஏ., பிடி.எச்.,
பன்னூலறிஞர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், செந்தாமரை கே.பி.எஸ். ஹமீது,
கவிக்கோ அப்துல் ரகுமான்,
பேரா. கா.முஹம்மது பாரூக்,
மலேசியா டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபைதுல்லா, இலங்கை அறிஞர் டாக்டர் ம.மு. உவைஸ், அறிஞர் எம்.ஏ. அப்துல் அஜீஸ் ஆகியோரைச் செயற்குழு உறுப்பினர்களாகவும் கொண்டு செயல்படத் தொடங்கியது.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில் அங்கம் கொண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகிற்கு அரும்பெரும் சேவைகள் ஆற்றிய ஆளுமைகளில் இதோ சிலர்:-

பேரா. டாக்டர் பெரும்புலவர் சி. நயினார் முஹம்மது
பேரா. டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான்,
இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்,
பன்னூலறிஞர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்,
மெளலானா எம். அப்துல் வஹ்ஹாப், பிடி.எச்.,
இலங்கை பேரா. டாக்டர் ம.மு. உவைஸ்,
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது,
பன்னூலாசிரியர் ஆர்.பி.எம். கனி,
பதிப்புச் செம்மல் மு. செய்யிது முஹம்மது 'ஹஸன்',
பேரா. டாக்டர் கா. முஹம்மது பாரூக்,
செந்தாமரை கே.பி.எஸ். ஹமீது,
பேரா. டாக்டர் இ.ப. முஹம்மது இஸ்மாயில்,
அல்ஹாஜ் எம்.ஏ. அப்துல் அஜீஸ்,
கவிஞர் சாரண பாஸ்கரனார்,
கவிஞர் சிராஜ் பாகவி,
கவி.கா.மு. ஷெரீப்,
தோப்பில் முஹம்மது மீரான்,
சமுதாயக் கவிஞர் தா. காசிம்,
இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா,
பேரா. டாக்டர் செ. பசுலு முகியித்தீன்,
பேரா. அப்துல் சத்தார்,
பேரா. டாக்டர் மு. அப்துல் கறீம்,
நீதியரசர் மு.மு. இஸ்மாயில்,
அறிவியல் அறிஞர் மணவை முஸ்தபா,
அல்ஹாஜ் எஸ்.எம். சுலைமான்,
அல்ஹாஜ் ஏவி. எம். ஜாபர்தீன்,
அல்ஹாஜ் எம். இத்ரிஸ் மரைக்காயர்,
சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது,
தென்காசி கவிஞர் ஷாஹுல் ஹமீது,
திருச்சி குலாம் ரசூல்,
‘நர்கிஸ்’ முஸ்தபா ஹுஸைன்,
பேராசிரியர்கள்
டாக்டர் தா.பிச்சை முஹம்மது,
டாக்டர் அர.அப்துல் ஜப்பார்,
பேரா. சா.அமீது,
பேரா. முகைதீன் புலவர்,
தூத்துக்குடி டாக்டர் அப்துல் ரசாக்,
டாக்டர் மீ. அ.மு. நாசிர் அலி,
டாக்டர் வா.மு.அ. நூர்மைதீன்,
டாக்டர் செள. மதார் மைதீன்,
டாக்டர் கவிஞர் அலிபூர் ரஹீம்,
டாக்டர் கா.மு. பாதுஷா,
ஹாஜியா கே. கமருன்னிஸா,
சொல்லரசு மு. ஜாபர் முஹ்யித்தீன்,
பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயி,
மெளலானா மௌலவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ,
நீதியரசர் எம்.அப்துல் வஹ்ஹாப்,
நீதியரசர் அ. அப்துல் ஹாதி,
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீது,
மீரா தமிழ் மன்றம் முஹம்மது மூஸா,
தண்ணன் முஹம்மது மூஸா,
மலேசியா புலவர் ப.மு. அன்வர்,
மலேசியா புலவர் சீனி நைனா முஹம்மது,
கயத்தாறு அமீர் பாட்சா,
தக்கலை ஹெச்.ஜி. ரசூல்,
புலவர் அஹமது பஷீர்,
நாஞ்சில் கவிஞர் ஆரிது
புலவர் ஹெச். முஸ்தபா....

(இவர்களில் முதியோர், இளையோர் மூப்பு வரிசை உள்படச் சில மாறியிருக்கக் கூடும். பலர் விடுபட்டிருக்கக்கூடும். நினைவில் தற்சமயம் தோன்றியதைப் பதிவு செய்துள்ளோம். மேலும் மறைந்தவர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். பேராசிரியர் கேப்டன் என்.ஏ. அமீர் அலி அவர்கள் 1973 முதல் இன்றுவரை கழகப் பொறுப்பில் இருந்து வருவது வாழ்நாள் சாதனையாகும்.)

அவரவர் துறையில் தனித்துவம் பெற்ற ஆளுமைகளாக இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில் அங்கம் கொண்டிருந்தோர் பலர். இவர்கள் அனைவரையுமே உள்ளடக்கிய பேரியக்கமே இஸ்லாமிய இலக்கியக் கழகம்.
மறைந்த அந்த ஆளுமைகள் அனைவருக்கும்
வல்ல இறையோன் உயரிய சுவனத்தை அருளிட இறைஞ்சுகிறோம்.
பழம்பெருமை பேச அல்ல...
கடந்த வரலாறு உணர்ந்து
வருங்காலச் சாதனைகளுக்கு
நாம் தயாராகவே இந்தப் பதிவு!

- சேமுமு . முகமதலி

கவிக்கோ இலக்கிய கழகம்
கேள்விகள்

இவ்வளவு ஆளுமைகள் அவர் நடத்திய இஇக. கடந்த பத்தாண்டுகள்ஆண்டுகள் செய்த
சாதனைகள் என்ன ?
வரலாறு என்பது முன்னோர்கள் பெயர்கள் பெயர் கூறி வாழ்வதுதானா ?

நாம் அடுத்த தலைமுறைக்கு
எதை விட்டு சென்றோம் ?

அடுத்த தலைமுறை அதை அடுத்த
கட்டத்திற்கு எடுத்து செல்ல என்ன
செய்தீர்கள் என்னபதே என்கேள்வி

மாநாடு பொன்னாடை கேடயம்
நோம்பு கஞ்சி இதுதான் சாதனையா?
கொஞ்சம் பட்டியல் இட்டால்
நன்றாக இருக்கும்

நான் கேட்ட கேள்விக்கு பதில்
கூறாமல் பழங்கதை கூறுவதுதான்
பதிலா ?

No comments: