இன்றைய தேதியில் யூதர்கள் பெரும்பான்மையாக இங்கே ஆக்கிரமித்து இருந்தாலும் (யூதர்கள் 60%, முஸ்லிம்கள் 33%), ஒரு முக்கிய விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, இன்றைய ஜெருசலம் நகரத்தை எப்படி நாம் புரிந்துக்கொள்கிறோம் என்பதில் தான் விசயம் இருக்கிறது.
இன்றைய ஜெருசலம் என்பது வரலாற்றில் நாம் படித்த / கேட்ட ஜெருசலம் அல்ல. அல் அக்ஸா பள்ளிவாசல் உள்ளிட்ட இஸ்லாமிய, யூத, கிருத்துவ புனிதத்தலங்கள் அடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நகரானது, இன்று, பழைய நகரம் (Old City) என்றழைக்கப்படுகிறது. சுமார் 0.9 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த பழைய நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தான் இன்றைய நவீன ஜெருசலம் உருவாக்கப்பட்டது. ஆக, பழைய நகரம் என இன்று அழைக்கப்படும் பகுதி தான் வரலாற்றில் நாம் படித்த ஒரிஜினல் ஜெருசலம்.
சரி, விசயத்திற்கு வருவோம். இந்த பழைய நகரத்தின் இன்றைய மக்கட்தொகை சுமார் 37,000 ஆகும். இதில் முஸ்லிம்களே பெரும்பான்மை. அதாவது, ஒரிஜினல் ஜெருசலத்தின் இன்றைய மக்கட்தொகையில் 81% மக்கள் முஸ்லிம்களாவர். யூதர்கள் 9% இருக்கின்றனர்.
ஜெருசலத்தை சர்வதேச விதிகளுக்கு மாறாக ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல் ??) நிர்வகித்தாலும், இப்பகுதியில் முஸ்லிம்களை பெரும்பான்மை இழக்க செய்ய வேண்டும் என்ற அவர்களின் முயற்சி இன்று வரை எடுபடவில்லை. முஸ்லிம்களும் கூட மக்கா, மதினாவிற்கு அடுத்து தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்நகரில், எப்படியான தியாகத்தை கொண்டும், தங்கள் இருப்பை உறுதி செய்து விட எண்ணுகின்றனர்.
ஆக, வரலாற்றில் நாம் கண்ட நிலப்பகுதி தான் ஜெருசலம் என்றால், அங்கே, இன்று பெரும்பான்மையாக இருப்பது முஸ்லிம்கள் தானே ஒழிய யூதர்கள் அல்ல. பொதுவாகவே, பாலஸ்தீனியர்கள் நெஞ்சுரம் மிக்கவர்கள், போராட்ட மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களின் கஷ்டங்களை நீக்கி, விரைவில் வெற்றியை இறைவன் தந்தருள்வானாக...
No comments:
Post a Comment