அறிஞர் அண்ணாவின் படம் இவர் வீட்டில்
மாயவரம் (மறைந்த late )டாக்டர்.கேப்டன் R .ராஜ்கோபால் அவர்களது சேவை எக்காலமும் நினைவில் நிற்கும்
இவர் எங்களது குடும்ப மருத்துவராக இருந்தார் . இவருக்கு எங்கள் தந்தை ஒவ்வொரு ஆண்டும் அவரது வீட்டுக்கு தேவையான முக்கிய பொருட்களை அனுப்புவதுடன் வைத்தியம் பார்த்ததற்கான தொகையும் கணக்கு பாராமல் அனுப்பி வைப்பார்கள் .அதனால் நாங்கள் அவ்வப்போது பார்க்கும் வைத்தியத்திற்கு பணம் கொடுப்பது அவசியமில்லாமல் இருந்தது .
எங்கள் தந்தைக்கு அவர்தான் தந்தையின் இறுதிவரை வைத்தியம் பார்த்தார் .
எங்கள் தந்தை ஆவி பிரியும் சில வினாடிகளுக்கு முன்கூட தமக்கு வைத்தியம் செய்த மருத்துவருக்கு நன்றி கூறினார்கள்.
இவரது இருப்பிடம் மயிலாடுதுறை மகாதானத் தெருவில் இருந்தது .அவரது மருத்துவம் பார்த்த இடம் பட்டமங்கலத் தெருவில் மணிக்கூண்டு அருகில் இருந்தது
டாக்டர் தேவையில்லாது ஊசி போடுவதை செய்ய மாட்டார் . அவரே மருந்துக் கலவையை எழுதிக் கொடுப்பார் .அதை வைத்து ராஜ் &கோ மருந்தகத்தில் மருந்து தயாரித்து கொடுப்பார்கள்
டாக்டர் எகிப்தில் சில ஆண்டுகள் டாக்டராக பணிச் செய்துள்ளார் .அவர் ஜப்பானுக்குச் சென்று அக்குபஞ்சர் கலையும் படித்து வந்துள்ளார்
அவரது மகள் மருத்துவ படிப்புக்கு தேவையான மதிப்பெண்கள் பெற்றிருந்தும் இடம் கிடைக்கவில்லை .
அவர் பிராமண ஐயர் சமுதாயத்தைச் சார்ந்தவர் . அவர் அறிஞர் அண்ணாவிடம் சென்று முறையிட அண்ணா அவர்கள் அவரது மகளின் மதிப்பெண்களைப் பார்த்து அவர் மகளுக்கு மருத்துவம் படிக்க இடம் வாங்கிக் கொடுத்தார் .அதன் நன்றியாக அண்ணாவின் படத்தை அவரது வீட்டில் வைத்திருந்தார் .டாக்டர்.கேப்டன் R .ராஜ்கோபால் அவர்கள்
இவரது சேவையை மறக்க முடியாது
No comments:
Post a Comment