Saturday, July 18, 2020

200 கோடி மக்களின் தன்னிகரற்ற, உயிரிலும் மேலான தலைவர்.

200 கோடி மக்களின் தன்னிகரற்ற, உயிரிலும் மேலான தலைவர்.

அவரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் நடைமுறையையும் இனம், மொழி, கலாச்சாரம், தேசம், பிரதேசம், அரசாங்கம், கட்சி, இயக்கம் என்ற அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி அவரை பின்பற்றும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்து குறைவாகவோ அதிகமாகவோ ஏற்று கொள்ளப்பட்ட உலகின் ஒரே தலைவர்.

# அவரின் வாழ்க்கையில் #

பொய், புரட்டு, பித்தலாட்டம், கோள் சொல்லி, ஏமாற்றியது இல்லை.

மதத்தின் பெயரை சொல்லி உழைக்காமல் வயிற்றை நிறப்பியது இல்லை.

அடுத்தவரின் நிலத்தையோ, உரிமையை பறித்தது இல்லை.

மூன்று நாட்கள் தொடர்ந்து வீட்டில் உணவிற்காக அடுப்பு எரிந்ததும் இல்லை.

எண்ணையல் பொறிக்க பட்ட உணவை வாழ்வில் ஒரு முறை கூட உண்டதில்லை.

அரசாங்க கருவூலத்தில் இருந்து சல்லிகாசு சொந்த தேவைக்கு எடுத்ததில்லை.

மது அருந்தியதில்லை, வட்டி வாங்கியதில்லை, விபச்சாரம் செய்ததில்லை.

அவரின் சொந்த விஷயங்களில் துரோகம் இழைத்தோரை பழி வாங்கியதில்லை.

தான் வரும்போது சபையில் யாரும் எழுந்து நின்று மரியாதை செய்ய கூடாது என்றார்.

பொதுவெளியில் எதிரியை கூட அவமரியாதையாக நடத்த கூடாதென்றார்.

அடிமையாக உள்ளவர்களை விடுதலை செய்தால் நன்மை என்றார்.

பிறப்பின் அடிப்படையில் மனிதனுக்கு உயர்வு தாழ்வு இல்லை என்றார்.

வட்டி மூலம் வரும் செல்வம் சகோதரனின் மாமிசத்தை திண்பதற்கு ஒப்பானது என்றார்.

அடக்குமுறையை எதிர்த்தார், சமநீதி, சமாதானம் சமதர்மத்தை நடைமுறை படுத்தினார்.

மொழியாலும், இனத்தாலும், தேசத்தாலும் எல்லையாலும் எந்த சிறப்பும் இல்லை என்றார்.

உயர்ந்தவர் என்பவர் இறை கட்டளைகளை உறுதியாக பின்பற்றுபவர் தான் என்றார்.

ஏழைகளையும், வசதி உள்ளவர்களையும் சமமாகவும், சமதளத்திலும் பாவித்தார்.

கருப்பினத்தவருக்கு உயர் பதவி கொடுத்து நிற வெறியை சமூகத்தில் உடைத்தார்.

போரில் கூடபெண்களையும்,சிறுவர்களையும். முதியவர்களையும் தாக்க கூடாதென்றார்.

அநீதிக்கு எதிரான போரில் ஒருகாலும் புறமுதுகிடாமல் நின்று காட்டினார்.

சண்டையை விட இரு தரப்பும் ஒப்புகொண்டு சமாதானம் செய்வது சிறந்ததென்றார்.

தன் கொள்கைகளை அடுத்தவர் மீது ஒரு காலும் திணிக்க கூடாதென்றார்.

தனக்கு சிலைகளையோ, உருவ படங்களையோ வைக்க கூடாதென்றார்.

தான் மரணித்து புதைக்கபடும் இடத்தில் எந்த அலங்காரமும், முக்கியதுவமும் கூடாதென்றார்.

மனிதன் ஒருகாலும் தெய்வசக்திக்கு ஈடாக முடியாதென்று உரக்க சொன்னார்.

பென்னுக்கு குடும்ப சொத்தில் பங்கு உண்டு என்று உறுதியாக சொன்னார்.

அடுத்தவர்கள் வணங்கும் தெய்வத்தை கொச்சைபடுத்த கூடாது என்று கட்டளையிட்டார்.

அடுத்த மதங்களின் வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்தவோ அழிக்கவோ கூடாதென்றார்.

விதவைத் திருமணத்தை ஊக்குவித்தார் அதை செய்தும் காட்டினார்.

தன் மனைவிமார்களால் எந்த காலத்திலும் குறை சொல்லப்படாமல் இருந்தார்.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் செய்துகொள்ளும் உடன்படிக்கை என்றார்.

நிர்பந்த வாழ்க்கையிலிருந்து பெண்கள் விளகிக்கொள்ள "குலா" அனுமதி அளித்தார்.

விதவை பெண்களும் அனைத்து விதமான நல்ல காரியங்களிலும் பங்குகொள்ள ஊக்குவித்தார்.

பெண் குழந்தை பிறந்தால் அதை நற்செய்தி என்று பிரகடனப்படுத்தினார்.

பெண் குழந்தையை கொலை செய்பவருக்கு நரக நெருப்பே இருப்பிடம் என்றார்.

வறுமையிலும் தானம் செய்வதை ஊக்குவித்தார், செய்தும் காட்டினார்.

செய்யும் தான தர்மங்களுக்கு 700 மடங்கு இறைவனிடத்தில் கூலி உண்டு என்றார்.

எளிய மக்களும் அணுகுவதற்கும், முறையிடுவதற்கும் வாய்பு அளித்தார்.

அவர் தூங்கி எழும் போது உடலில் படுத்த பேரித்தம் பாயின் அச்சுகோடுகள் தெரியும்.

பட்டாடைகள் உடுத்தியதில்லை, பவள கிரீடமும் அணிந்ததில்லை.

தனக்கென நாற்காலிகள் போட்டுக் கொண்டதில்லை, ஞயாயத்தை தவறவில்லை.

தனக்குப் பிறகு தன் குடும்பத்தாரை ஆட்சியில் அமரவைக்க வாய்பை ஏற்படுத்தவில்லை.

தங்கச் சங்கிலி அணிந்ததில்லை, வைர மாலைகளை விரும்பியதும் இல்லை.

ஒரே ஒரு மாற்று ஆடையைத் தவிர வேற எந்த ஆடையும் அணிய வசதி இல்லை.

தன் எதிரிகளால் கூட தனிப்பட்ட வாழ்க்கையில் விமர்சனம் செய்யப்படதில்லை.

ஒரே கடவுள் தான் என்ற கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தார்.

தான் இறைத்தூதரே தவிர கடவுள் இல்லை என்பதை பிரகடனப்படுத்தினார்.

காட்டுமிராண்டி அரேபிய கூட்டத்தை உலகத்தில் குறைந்த குற்றமே நிகழும் சமூகமாக்கினார்.

கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் உள்ள புரோகித கலாச்சாரத்தை அழித்தொளித்தார்.

பில்லி, சூனியம், குறி கேட்டல், போன்றவை அனைத்தும் பொய்யென்று முழக்கமிட்டார்.

உண்ண உணவு கிடைக்காமல் வயிற்றின் மேல் கல்லைக் கட்டிக் கொண்டவர்.

பசியின் காரணத்தால் தூக்கம் வராமல் தொடர்ந்து பல நாட்கள் தெருவில் சுற்றியவர்.

மூன்று நாட்கள் தொடர்ந்து வயிறார உணவு உண்ணாதவர்.

தன் செலவுகளுக்கு சிறிய ஆடுமந்தையை வைத்து அதன் மூலம் பூர்திசெய்து கொண்டவர்.

வறுமையிலும் வறுமை துரத்திய போதும் அடுத்தவரிடத்தில் யாசகம் கேட்காதவர்.

ஏழைகளே முதலாவதாக சொர்க்கம் செல்பவர்கள் என்று பிரகடனம் செய்தவர்.

சொர்க்கத்தில் ஏழைகளும் நானும் ஒன்றாக இருப்போம் என்று முன்னறிவுப்பு செய்தவர்.

மனிதனை மனிதன் வணங்கக்கூடாது என்ற சுயமரியாதையை முன்னெடுத்தவர்.

வறுமையினால் உணவிற்காக கேடயத்தை அடகு வைத்து அதை மீட்கமலே மரணித்தவர்.

மரணிப்பதற்கு முன், அவர் ஒட்டுமொத்த அரபுப் பிரதேசத்தின் தன்னிகரற்ற தலைவர்.

அவரேமன்னர்
அவரே ஜனாதிபதி
அவரே நீதிபதி
அவரே போர்படை தளபதி
அவரே மதத்தலைவர்
அவரே இறைத்தூதர்

இவ்வளவு பொறுப்புகளையும் ஒரு சேரக் கொண்டிருந்தாலும் தலைக்கனம் இல்லாத சர்வாதிகாரம் இல்லாத அனைத்து முடிவுகளையும் தனது தோழர்களிடத்திலும் அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்தவர்.

எதிர் கருத்து சொல்பவர்களை புரிய வைத்து அரவணைத்து சென்றவர்.

போர்க்களத்திலும் பின் வரிசையில் பாதுகாப்பாய் இயக்கும் தளபதியாய் இல்லாமல் முன்வரிசையில் இருந்து செயல்படும் சக சாமானிய வீரனாக இருந்தார்.

தன் தாய் நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு பின்பு கத்தியின்றி ரத்தமின்றி அந்த நாடே தன் வசம் வந்த தருணத்தில் கூட விரட்டியடித்த எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் மரண தண்டனை வழங்குவதற்கு அனைத்து விதமான அதிகாரங்கள் இருந்தும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.

கிபி 630 களில் சிறு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருக்கும் போதே உலகின் இரு பெரும் வல்லரசுகளான ரோமப் பேரரசு மற்றும் பாரசீகப் பேரரசின் அரசர்களுக்கு ஓரிறைக் கொள்கையை விளக்கி அதன்பால் அழைப்பு கடிதம் எழுதியவர்.

(இதை இந்த காலத்தோடு ஒப்பிடுவதாயின், கிரீன்லாந்தில் வசிக்கும் எஸ்கிமோக்கள் தற்கால அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் உண்மையை எடுத்துரைப்பது)

மனிதர்கள் அனைவரும் ஒரே ஆதி மனிதனிலிருந்து படைக்கப்பட்டான் என்று கூறி சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர், இதன் மூலம் அனைத்து விதமான மனிதனின் தற்பெருமை மற்றும் ஜாதியப் பெருமையின் வாசலை நிரந்தரமாக அடைத்தார்.

அவரின் வீடு நூறு சதுர அடி களை விட குறைவாகவே கொண்டது, வீட்டிற்கு மேலே வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தளம் கிடையாது, குறைந்துபட்சம் பேரீத்த இலைகளைக் கொண்டு மறைப்பதற்கு செலவு செய்ய இயலாத நிலை.

வீட்டின் உள் எழுந்து நின்றல் தலை வெளியிலிருந்து பார்ப்பவருக்கு தெரியும் அளவுக்கு தான் உயரம், அதை உயர்த்துவதற்கு கூட வசதி கிடையாது.

அவர் மரணத்துக்குப் பின் விட்டுச்சென்ற இதர சொத்துக்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு, தன் வாரிசுகளுக்கு கூட அந்த சொதத்திலும் எந்தவிதப் பங்கும் இல்லை என்று பிரகடனப்படுத்தியவர்.

தனது மரணத்தருவாயிலும் தனக்குப் பிறகு இந்தியாவைப் போன்ற நிலப்பரப்பைக் கொண்ட தனது ஆட்சியில் அவரது வாரிசுகளுக்கு எந்த வகையிலும் வாய்பு ஏற்படுத்தி கொடுக்காதவர்.

மரணித்த பிறகு தன்னை எல்லை மீறி புகழ கூடாது கடவுளுடைய ஸ்தானத்திற்கு தன்னை ஒரு போதும் உயர்த்த கூடாது என்று உறுதியாகவும் இறுதியாகவும் முழங்கியவர்.

ஆம் அவர்தான் எங்கள் உயிரினும் மேலான இறுதி இறை தூதர்

" #முகமது நபி# " (ஸல்) அவர்கள்.

இதையெல்லாம் அறிந்துதான்

மைக்கேல் ஹார்ட் (Michael Hart) என்னும் கிறிஸ்தவ பாதிரியார் "நூறு நபர்கள்"(The 100) உலகில் வாழ்ந்த சிறந்த 100 பேர் பட்டியலை தயார் செய்து, அதில் அவர்கள்

எதிர்ப்புக்கு மத்தியில் ஏற்படுத்திய துணிவு,
கொண்ட கொள்கையில் பிடித்த உறுதி,
எடுத்த காரியத்தை முடித்த விதம்,
அது கொள்கையாக ஏற்படுத்திய தாக்கம்,
அது உலக வரலாற்றில் ஏற்படுத்திய திருப்பம்,
அது இப்போது வரை மனித வாழ்க்கையில் ஏற்படுத்தி கொண்டிருக்கும் தாக்கம்.

என அனைத்து முடிவையும் ஆராய்ந்து முகமது நபி அவர்களை முதலாவதாக இடத்தில் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் முழுமையாக பின்பற்றுபவர்கள் இல்லை என்றாலும், சதவீதத்தின் அடிப்படையில்

# மது அருந்துவதில் குறைவாகவும் ,
# வட்டியை வாங்குவதில் குறைவாகவும்,
# விபச்சாரம் செய்வதில் குறைவாகவும்,
# தற்கொலை செய்வதில் குறைவாகவும்,
# கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் குறைவாகும்,
# தீவிரவாத சம்பவங்களில் குறைவாகவும்,
# பிறப்பின் அடிப்படையில் மனிதனை ஏற்றத்தாழ்வு காண்பதில் குறைவாகவும்
# மூடநம்பிக்கைகளை பின்பற்றுவதில் குறைவாகவும்,
# பிறரது உரிமைகளைப் பறிப்பதில் குறைவாகவும்,
# கொலை கொள்ளை போன்ற சம்பவங்களில் குறைவாகவும்,
# கடவுளின் பெயரைச் சொல்லி வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்களின் குறைவாகவும்,
# மாந்திரீகம் தாந்திரீகம் என்ற ஏமாற்று வேலை செய்து செய்வதில் குறைவாகவும்,

# அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் தான தர்மங்களில் அதிகமாக இருப்பதற்கும்.

இந்த மாமனிதர் " முஹம்மது நபியின் " போதனைகள் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது, அதுதான் உண்மை.

இது தற்பெருமை பேசும் பதிவும் இல்லை, எவரது மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அல்ல மாறாக முகமது நபியின் சொல் செயல் நடத்தை அவரை உலகில் இன்று பின்பற்றும் 200 கோடி இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்வியலை எவ்வாறு நல் வழியை நோக்கி மாற்றியது என்பதற்கான பதிவு.

ஆக்கம்
- அபூ அஹ்யான் B.Sc, B.Tech, V.A

No comments: