தலைவா வாழ்க!--எங்கள்
தலைவா நீ வாழ்க!
ஓசை தொண்டையைக் கிழிக்கும்--எதிர்
ஓசை வானையும் பிளக்கும்!
( தலைவா...)
ஆளுயர மாலை அக்குளிலே சரவெடி
அள்ளிச் சுமந்து பற்றவைப்பான்!
தோளிலே துண்டு பக்கெட்டு பசைமாவு
போஸ்டர் ஒட்டிச் சுற்றித்திரிவான்!
( தலைவா...)
மத்தியானம் பசிதான் மாலையிலே டீ பீடி
தலைவர் வாழ உயிர்கொடுப்பான்!
சத்தியமா குடும்பம் கஞ்சியின்றி வீட்டில்
நொந்து வீழத் தண்ணியடிப்பான்!
( தலைவா...)
ரோட்டிலே படுக்கை கொசுக்கடி வேறே
கட்சி வாழ கொடிபிடிப்பான்!
பாட்டோடு டான்ஸு ஆடித்தான் தெருவில்
டப்பாங் கூத்தைப் பாடிக்களிப்பான்!
கள்ளஓட்டு சேர்ப்பான் கட்சிசின்னம்
காப்பான்!
வெட்டுக் குத்தும் அவன்செய்வான்!
பிள்ளைகுட்டி நாசம்! வீட்டுப்பெண்
மேனி
பேரம் பேசி மானங்காப்பாள்!
( தலைவா...)
பழத்தோட்டம் நடுவில் தலைவருக்குப்
பங்களா
குளிக்கக் கழிக்கத் தனியறைகள்!
தலைசாய்க்க ஒருஅறை தாளிக்க
அடுக்களை!
தின்று களிக்கத் தீனியறை!
( தலைவா...)
எட்டடியில் குடிசை எழுந்துநின்றால்
தலையைத்
தட்டும் கூரை உச்சுமுட்டும்!
கட்டிபிடித்து அணைத்தே ஓரத்தில்
கொஞ்சும்
தொண்டன் குடிசைக் கதைவெட்கம்!
( தலைவா...)
மண்சட்டிக் கஞ்சி வெங்காயம் கடிச்சு
வயிறு நிறைக்கும் தொண்டனில்லம்!
கண்பட்டால் கூசும் வெள்ளித்தட்டு
அன்னம்
உண்ணும் வீடு தலைவரில்லம்!
( தலைவா...)
ஆடி என்னும் காரு தலைவருக்குத் தேரு
ஏசி குளிரு சொர்க்கம்தான்!
தலைச்சுற்று மயக்கம் உடலெங்கும்
நடுக்கம்
தொண்டன் பக்கம் துக்கம்தான்!
( தலைவா...)
No comments:
Post a Comment