Sunday, December 31, 2017

புத்தாண்டு 2018 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை

புத்தாண்டு 2018 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை
 நம்பிக்கையே வாழ்வு.
இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை.
நல்லதையே நாடுவோம்.நல்லதையே செய்வோம்.வருவதை எதிர்கொள்வோம் .
 நிகழ்வது நிகழட்டும்.புதிய ஆண்டு என்று ஒரு கற்பனை கொண்டு நிகழும் நாளை ஒதுக்க வேண்டாம். இன்றைய நாளில் செய்வதை  செய்து  அதன் விளைவை  இறைவனிடம் விட்டு விடுவோம் .
கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை.
 ஒட்டகத்தைக் கட்டு இறைவனிடம் பாதுகாப்பு கேள்.-நபிமொழி

 Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]

இன்றையே தினமே நம்மிடம்  இருப்பது போல் வாழ்வோம் . நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது. நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை.இன்றைய தினத்தை உயர்வானதாக்கிக் கொள்வோம். இந்த நாளில் விழிப்பான மனதுடன் நாம் நமது கடமையை செய்வோம்  தொழ வேண்டும், குர்ஆனை புரிந்து ஓதுவோம் , மனமார்ந்து அல்லாஹ்வை நினைவு கொள்வோம் . இந்த நாளில் நமக்கு கிடைத்ததில் மகிழ்வடைவோம். வண்டினம் ஆரவாரம் செய்து வருதலால் அஞ்சி நடுங்கும் மனதை அறிந்த நாம் நம் செயலின் விளைவால் தீமையாகிவிடுமோ என அஞ்சி நடுங்கும் மனதை பெற்றிட வேண்டும்.  தீயின் வேகத்தை நீர் கொண்டு அடக்குதல் போல் பெருமை கொண்ட மனதை இறையின் நினைவு கொண்டு அடக்குதல் வேண்டும்
 இன்றைய தினம் மகிழ்வாகவும், சாந்தியுடனும்  மனநிறைவுடன் இருப்போம்.

ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”. (திருக்குர்ஆன் 7:144)
பறவைகள் போல்,  நாம் தேவையில்லாத கோபம், வருத்தம், வலி, பயம்  இவைகளை தூக்கிச்  செல்வதை தவிர்ப்போம்

வாழ்க்கை அழகானது ... அது தொடரட்டும்  ...

Saturday, December 30, 2017

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அன்புடன் புகாரி அவர்கள்



அன்புள்ள புகாரி அண்ணன் அவர்களுக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும்.
------------------
அன்புடன் புகாரி அவர்கள்
என்னை பாசத்துடன் உறவு முறையாக அண்ணா  என்றுதான் அன்புடன் அழைப்பது வழக்கம்
கவிஞர் . அன்புடன் புகாரி என்று உயர்வான பெயருடன் புறப்பட்டு தமிழுக்கும் மக்களுக்கும் சேவை ஆற்றும் நேசிக்கப் படக்கூடிய நண்பர்
அன்புடன் புகாரி  ஒரு சிறந்த கணினி பொறியாளர் ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரின் தாயை அவரே அறிமுகப்படுத்துகின்றார் கேளுங்கள்
"என்னை அறிமுகப் படுத்திய என் தாயை நான் அறிமுகப் படுத்த விரும்புகிறேன்'"-அன்புடன் புகாரி 

அன்புடன் புகாரி

ஒரத்தநாடு - அன்புடன் புகாரி பிறந்த ஊரு

Friday, December 29, 2017

ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.


" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?

அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

Thursday, December 28, 2017

வெள்ளிக் கிழமை-ஜூமுஆ சிறப்பு

வெள்ளிக் கிழமை-ஜூமுஆ சிறப்பு

அல்பாகவி.காம்

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரு புனித நாளாகும். அந்நாளில் தொழப்படும் கூட்டுத்தொழுகைக்கு பல்வேறு சிறப்புக்கள் உண்டு.
ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும். இது லுஹர் தொழுகைக்கு பதிலாக தொழப்படும் தொழுகையாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)

வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜும்ஆத் தொழுகையில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தக்க காரணமின்றி கலந்து கொள்ளத் தவறியவரை நபி (ஸல்) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

Wednesday, December 27, 2017

அது யாருக்குத் தெரியும் இப்போது?

பொய்
எப்போதோ தன் பெயரை
உண்மை என்று
மாற்றிக்கொண்டுவிட்டது

பெயர்க் குழப்பத்தில்
உண்மையே
தன்னைப் பொய் என்று
அறிமுகம் செய்துகொள்ளும்
கட்டாயத்துக்குள் சிக்கிக்கொண்டு
காலங்கள் கடந்துவிட்டன

Tuesday, December 26, 2017

முகம்மது மக்தூம் Mohamed Makthoum ,Reserch Engnieer


முகம்மது மக்தூம்
மார்சேயில், பிரான்சில் வாழ்கிறார்
மயிலாடுதுறை, இந்தியா

முகம்மது மக்தூம் Mohamed Makthoum ,Reserch Engnieer
Meet my sister's grandson today, who is working as R&D lead in COMEX Space division, Marseille ,France.



http://linkedin.com/in/mohamed-makthoum-02697156

Mohamed Makthoum
Lives in Marseille, France
From Mayiladuthurai, India
Reserch Engnieer at Comex Space
Working Primarily on Human Space
Exploration Space mission

முகம்மது மக்தூம்
மார்சேயில், பிரான்சில் வாழ்கிறார்
மயிலாடுதுறை, இந்தியா
Comex விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர்
முதன்மையாக மனித விண்வெளி வேலை
ஆய்வு விண்வெளி பணி
==================

அன்பை மட்டுமே விதைக்க தெரிந்த ஒரு அருமையான மனிதர்..


அப்துல் கபூர் அண்ணன்.
அன்பை மட்டுமே விதைக்க தெரிந்த ஒரு அருமையான மனிதர்..
அழகு என்பது இவர் முகத்தில் மட்டும் அல்ல..அகத்திலும் பிரதிபலிக்கும்.
#அன்பு எனும் மை நிரப்பி #பாசம் எனும் புத்தகத்தில் #நேசம் கொண்டு வரையும் #அழகு எனும் அற்புத எழுத்துக்கள் இவரிடம் அனைவரையும் இனிமையாக #பழக வைக்கும்..!
தன்னுடைய வேலைகளை விட தான் சார்ந்த சேவா அமைப்பின் பணியையே தலையாயமாக பார்ப்பவர்.

Friday, December 22, 2017

வெற்றி பெற்றது இறைவனின் வீட்டோ பவர்...

Colachel Azheem
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக தன்னிச்சையாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ன் நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் கடும் கண்டனத்தையும் தோல்வியையும் சந்தித்துள்ளது..
டொனால்ட் டிரம்ப் தனது திடீர் உத்தரவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும் பொருட்படுத்தாத ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையின் முக்கிய உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் பயன்படுத்தி சட்டமாக்க முயற்சித்தது ..
சமீபத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தின் தீர்மானத்தை சார்ந்து துருக்கி அதிபர் தையிப் எர்தூகான் விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியதை தொடர்ந்து நேற்று முழுவதும் ஐ.நா சபையில் நடைபெற்ற கடுமையான விவாதம் முடிந்து நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது..

சபையில் ஆஜரான 172 நாடுகளின் பிரதிநிதிகளில் இந்தியா உட்பட 128 பேர் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்து ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக அறிவிப்பு செய்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ன் நடவடிக்கைகள் தோல்வியடைய செய்தனர்..
Colachel Azheem
----------------------------------------------------------
ஐ.நா. பொதுச் சபை ஜனாதிபதி டிரம்ப்பின் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரித்த புதிய கொள்கையை கண்டித்து ஒரு தீர்மானத்தில் வாக்களித்தது.
அதற்க்கு ஜனாதிபதி டிரம்ப் முதலாளித்துவ மனப்பாங்குடன் அமெரிக்காவின் உதவியை பெறும் நாடுகளை கண்காணித்து வருவதாக மிரட்டல் கொடுத்துள்ளார்
Mohamed Ali
----------------------------------
US President Donald Trump has threatened to cut aid to countries that vote in favour of a draft UN resolution condemning the US decision to recognise Jerusalem as the capital of Israel.

Trump said at the White House on Wednesday the US would be "watching those votes" in the General Assembly.



------------------------
U.N. votes to declare Trump's Jerusalem decision "null and void"
https://www.cbsnews.com/news

ஊரோடு இணைந்து போகும் போது விரும்பதகாத நிகழ்வுகளுக்கு வழியில்லாமல் போய் விடும்

Saif Saif
"அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்;உங்கள் மதிப்பும்,வலிமையும் அழிந்து போய்விடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடை
யவர்களுடன் இருக்கின்றான்."(8:46)
இறைவன் சொன்ன ஒற்றுமை என்பதின் கருப்பொருளை விளங்கிக் கொண்டால் ஊரிலும் சரி,நாட்டிலும் சரி,வீட்டிலும் சரி வேற்றுமை கொண்டாட வாய்ப்பேயில்லை..

Thursday, December 21, 2017

பாஜக-திமுக நட்பு மலர்கிறதா? கனிமொழி பதில்

எனக்குத் தெரிந்த சைத்தான் குறிப்புகளை இங்கே உங்களுக்காகத் தருகிறேன்...

சங்க இலக்கியத்தில் சைத்தான் என்ற சொல் இருக்கிறதா என்று கூறுவீர்களா என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. எனக்குத் தெரிந்த சைத்தான் குறிப்புகளை இங்கே உங்களுக்காகத் தருகிறேன். குற்றம் குறை கண்டு சொல்லலாம் பிழையே இல்லை.
சாத்தான் என்பது ஹிப்ரு மொழிச் சொல். (Satan). அதன் பொருள் எதிரி. பழைய கிரேக்க மொழியிலும் சாத்தான்தான். அரபு மொழியில் அது சைத்தான். தமிழில் சாத்தான் என்றும் சைத்தான் என்றும் அழைக்கிறோம். சைத்தான் என்றால் பிசாசு என்று பலரும் புரிந்துகொள்கிறார்கள்.
யூதர்களின் நம்பிக்கையில் சாத்தான் என்பவன் எதிரி. இறைவனை வணங்குவதைத் தடுக்கின்ற துரோகி. பாவச் செயல்களைத் தூண்டுபவன். மனிதர்களைக் கடுமையாகச் சோதிக்க இறைவனையே தூண்டுபவன்.
கிருத்தவர்களுக்கு சாத்தான் என்பவன் இறைவனுக்கு அடிபணிய மறுக்கும் தீய சக்தி, கெட்டவைகளின் உற்பத்திக் கிடங்கு. இறுதிநாளுக்கான யுத்தத்தில் பங்குபெறும் மகா தீய சக்தி.
குர்-ஆனில் சைத்தானுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதன் பெயர் இப்லிஸ். நெருப்பால் உருவானவன். ஆதாம் என்ற முதல் மனிதனை வணங்கச் சொல்லி இறைவன் சைத்தானுக்கு ஆணை இடுகிறான். வணங்க மறுத்ததால் சைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான் என்று குர்-ஆன் சொல்கிறது.

Monday, December 18, 2017

கவிஞர் அன்புடன் புகாரி

கூகுளின் நெற்றியில் - தமிழே
நீயொரு குங்குமப் பொட்டு

செல்பேசி அலைகளில் - தமிழே
நீயொரு பொங்கு மாக்கடல்

இணையக் கூடுகளில் - தமிழே
நீயொரு தாய்ப் பறவை

சந்தோஷம் தந்த பயணம்

Abu Haashima

நண்பர் ரஹ்மத் ராஜகுமாரனின்
நூல் வெளியீட்டு விழாவின்
ஒரு முக்கிய செய்தியை
இப்போது சொல்ல வேண்டும்...
விழா மேடையின் கீழே
ஒரு மேசையில்
விற்பனைக்காக நூல்கள் வைக்கப்பட்டிருந்தது.
விலை :120.
ஆனால் ...
விழாவை முன்னிட்டு
100 ரூபாய்க்குத்தான் கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல...
எவ்வளவு புத்தகங்கள் அச்சிட்டார்களோ அவ்வளவு புத்தகங்களும் விற்று வரும் மொத்த பணமும் நெல்லை மாவட்ட
மீலாது கமிட்டிக்கே என்று
ரஹ்மத் ராஜகுமாரன் கொடுத்து விட்டார்.
விழாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் விலை கொடுத்தே நூல் வாங்கினார்கள். நானும் வாங்கினேன்.
ஆச்சரியம் அதன் பிறகுதான் ஏற்பட்டது.

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 2 )

எளிமையை ஏற்றெடு
வளமை தானேவரும்
பொறுமையை கடைபிடி
பொற்காலம் நெருங்கிவரும்
*
மனக்கதவை திறந்துவை
மகிழ்வுவந்து தங்கும்
பண்புடன் பழகு
அன்புகள் நிலைக்கும்
*
பழிபோடுவோரை வெட்டிமாற்று
மீண்டும் அண்டவிடாதே
தன்னிலையை தக்கவை
சார்ந்தோரை தூக்கிவை
*

Friday, December 15, 2017

நானொரு முஸ்லிம் என்பதற்காகவே....

நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைப்
பாராட்டுவோர்
பலர்
நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைத் 
தூற்றுவோர்
சிலர்

Wednesday, December 13, 2017

வயோதிகத்தின் அத்தனை அறிகுறிகளையும் தட்டாமல்...

நசிஹா நேசன்

வயோதிகத்தின் அத்தனை அறிகுறிகளையும் தட்டாமல் ஏற்றிருந்த காதர்பாயின் தேகம், ஒரு யுகத்தின் நகர்வுபோல இயங்கியது.
ஒரு கையில் தன்னுடைய மதியசாப்பாடு துக்குவாளியையும், மறுகையில் தான் மேய்த்துக்கொண்டிருக்கும் மாட்டின் முக்காணங்கயித்தையும் பிடிததுக் கொண்டு பெருமூச்சுகளுடனும் தனக்குத் தானே தன்னுடைய மாடுகளுடன் பேசியபடியும் போய்க்கொண்டிருந்தார்.
காலையிலிருந்தே வெய்யிலில் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டே மாட்டை மேய்த்துக்கொண்டிருந்தால் களைத்துபோய் அந்த தென்னை மரத்தடியில் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டார்.
வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது

மையல்சூடி (கூடாது கூடாது) சமையலில் செய்யக்கூடாதவை.

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

Monday, December 11, 2017

சொல்க அதற்குத் தக

==ரமீஸ் பிலாலி==


திருக்குறளில் ஓரிடத்தில்கூட தமிழ் என்னும் சொல்லை வள்ளுவர் பயன்படுத்தவே இல்லை. இப்படி ஒரு தகவலை யாரேனும் வியப்புடன் உங்களிடம் சொன்னால் உங்களுக்கு என்ன கேட்கத் தோன்றும்? அதனால் என்ன என்றுதானே?

வள்ளுவருக்குத் தமிழ் மீது பற்று இருந்திருக்கலாம். ஆனால் அதனை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் அவரின் காலத்தில் இல்லை. அந்தத் தேவை பாரதிதாசனின் காலத்தில் வந்தது.

இல்லறம் மெய்யறம் ....!

நல்லறமே வழிபாடாய்
---- இல்லறத்தில் வழிநடக்க
இன்பமே எந்நாளும்
---- எம்வாழ்வில் வந்திடுமே
இணைகளின் பார்வையிலே
---- தண்ணொளி வீசிடுமே
உள்ளங்கள் சேர்ந்திருக்க
---- உதடுகள் உணர்வுகளால்
இன்பமொழி பேசிடுமே

Thursday, December 7, 2017

அடடா இது என்ன அழகு

அடடா 
இது என்ன அழகு

ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து
இனிப்பாய் அசையும்
இந்த மல்லிகைப் பூப்பந்தல்
எவரின் உபயம்

வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்து
ஒருவரையும் விடாமல் 
உயர்த்திப் பாராட்டும்
இது என்ன விழா

பூமிக்கு இது
கீழ் நோக்கிப் பொங்கும்
பனிப் பொங்கலா

நிறங்களில் அழகு 
வெண்மையே என்று 
தீர்மானம் நிறைவேற்றும்
கலை மேடையா 

.

ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்

ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்றுஅந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்

சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி

Wednesday, December 6, 2017

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்,

மேலும் நிச்சயமாக
 நாம் மனிதனைப் படைத்தோம்,
 அவன் மனம்
 அவனிடம் என்ன பேசுகிறது
 என்பதையும் நாம் அறிவோம்;

 அன்றியும்,
 பிடரி நரம்பை விட
 நாம் அவனுக்கு
 சமீபமாகவே இருக்கின்றோம்.

 குர்-ஆன் 50:16.

Tuesday, December 5, 2017

அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;




மேலும் நிச்சயமாக
 நாம் மனிதனைப் படைத்தோம்,
 அவன் மனம்
 அவனிடம் என்ன பேசுகிறது
 என்பதையும் நாம் அறிவோம்;

 அன்றியும்,
 பிடரி நரம்பை விட
 நாம் அவனுக்கு
 சமீபமாகவே இருக்கின்றோம்.

 குர்-ஆன் 50:16.

ஒருவனின் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதை எனக்குத் தெரியும் என்கிறான் இறைவன்.

பகலும் இரவும் பின்னே ஞானும் ....! (பாகம் 1)


பகலின் பவித்திரங்கள்
இரவின் அந்தரங்கங்கள்
வாழ்வின் அங்கங்கள்.
*
பகலில் தூக்கி சுமந்த பழுக்களை இறக்கி வைத்ததும் இரவின் இலகுவாக ஆரத்தழுவியது தூக்கம்.
*
பகலில் பட்டபாடு படுத்தியத்தின் விளைவு இரவின் மடியில்  படுத்ததும் களைப்பு அகலுகிறது அமைதியாக.
*
பகலின் பாராத்தியங்கள் பாதியில் தொக்கிநிற்க இரவிலும்  ஊழ்வினைப்போல வந்து உறுத்தும்.
*

இடமும் காலமும் இல்லாத உலகம்.… !

இடமும் காலமும் இல்லாத உலகம்.… !
===================================
என்னுயிர் போகும்போது
என் வெற்றுடல் வெளியே
எடுத்துச் செல்லப்படும்போது, நான்
இந்த உலக வாழ்வை இழந்ததாக,நீ
எண்ணலாகாது,ஒருபோதும்.
.
துளியும் கண்ணீர் சிந்தாதே
புலம்பாதே
வருந்தாதே;
நானொன்றும்
கொடியோனின் படுகுழியில்
குப்புற விழவில்லை.
என்னுடைய வெற்றுடல்
சுமந்து செல்லப்படும் போது
என் பிரிவிற்காக அழாதே.
நான்,பிரிந்து செல்லவில்லை;
நிரந்தரமான காதலுக்குரிய இடத்தை
நெருங்குகிறேன்…

Monday, December 4, 2017

ஆனந்தமாய் பறக்க வைக்கும்..

கற்பனை உலகம் வானத்தில் ஆனந்தமாய் பறக்க வைக்கும்..
கனவு கலைந்து எழும் போது படுத்திருப்பது தரையாக இருக்கலாம்..
வயசுக்கு மீறிய அறிவு சிலருக்கு இருக்கலாம்..
சிந்தனைகளின் அளவு சிறகு விரிக்கும் போது அதை தாங்கும் சக்தி மனதுக்கு வேண்டும்..
வயசுக்கு மீறி யோசிக்கும் போது ஏற்படும் பாதிப்பு உடம்பை தாக்குகிறது.
அதனால ஏற்படும் உபாதைகள் உடம்பை மட்டுமல்ல மனதையும் பாதிக்குது.அது நோய்களை உண்டாக்குது.

*புனிதமானது*


நீ தேடாத ஒரு சுகம்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்

நீ நினைக்காத ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்

பயந்து பயந்து
ஓர் உரிமையை நீ இழப்பாய்
பயமே இன்றி
ஓர் உரிமையை நீ பெறுவாய்

ஞானம் ஒரு பூரணம் நிறைந்த ஞான குருவால் மட்டுமே தர முடியும்.


புத்தகம், இன்டர்நெட், பேஸ்புக், வாட்சாப், டுயூட்டர் மற்றும் எந்த வழிகளில் ஞானம் என்று படிக்கிற அனைத்தும் செய்திகள் தானே தவிர ஞானம் அல்ல. ஞானம் என்று எழுத்தின் மூலம் உங்கள் அறிவை அடைவதும்,  வார்த்தைகள் வழியாக உங்கள் செவியை சேர்வதும் இப்படி வரக்கூடிய அனைத்தும் ஞானம் அல்ல.

ஏனென்றால் ஞானம் என்பது இதயத்தில் இருந்து இதயம் அடைவது. ஞானத்தை பெறக்கூடியவர் ஏற்க்கும் நிலையில் இருக்க வேண்டும். ஞானம் என்று படித்த செய்திகளால் நிறைந்த கோப்பையாக இருக்கக்கூடாது. வெறும் கோப்பை அதாவது சீடராக இருக்க வேண்டும். ஞான குரு தேடி கிடைக்கக் கூடியவரல்ல, சீடர் ஏற்கும் நிலையில் இருந்தால் சூஃபி ஞான குரு அங்கே இருப்பார்.

Sunday, December 3, 2017

ஸோஃபியா!

அந்த மாநாட்டில் கலந்துகொண்டு வியப்பேற்படுத்திய இன்னுமொரு ஆளுமை....
உயிருள்ள நம்மினங்களைப் பார்த்து "நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?" என்று பாரதி கேட்டானே, இன்று Artificial Intelligence (AI) என்றழைக்கப்படும் ஒரு தோற்ற மயக்கம் உலகத்தை மயக்கி வியப்பேற்படுத்தியது இம்மாநாட்டில் என்றால் மிகையில்லை.
ஆம், கண்டேன் அந்த 'ஸோஃபியா'வை... அவளொரு கானலின் நீரோ? அல்லது வெறும் காட்சிப் பிழையோ அல்ல! அழகான கண்களும், குற்றமில்லாத புன்னகையும் கொண்ட அதிபுத்திசாலியான அரபு மங்கை. உண்மைதான் மனித குணாதிசயங்களுடன் படைக்கப்பட்டிருக்கும் ஒரு 'ரோபோ(ட்)' டிற்கு உலகிலேயே முதன்முதலாக சவூதி அரேபியா தனது குடியுரிமையை வழங்கியிருக்கிறது.

இவன் யாரென்று தெரிகின்றதா?

இன்று உலக அளவில் பெரியவனாகப் பேசப்படும் 13 வயது சிறுவனை இங்கு ஒரு மாநாட்டில் சந்தித்தேன். உலகின் தலைசிறந்த அறிஞர்களெல்லாம் குழுமியிருந்து அவனது அறிவுப்பூர்வமான உரையினைக் கேட்டுக்கண்டிருந்தனர். ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்துக்கேட்ட சாதாரணமானவர்களில் நானுமொருவன்.
பேசிமுடித்து வெளியில் வந்தவனை, உலகத்தின் பல ஊடகங்கள் கரும்பைச் சுற்றிச்சூழும் எறும்புகள் போல சூழ்ந்துகொண்டனர்.
அவனைச் சந்தித்து வாழ்த்தவேண்டும் என்று காத்திருந்தேன். நீண்டநேரம் காத்திருப்பதைக் கண்டுகொண்ட அவன், ஒரு அரேபியத் தொலைக்காட்சியின் பெண் நிருபர் நீட்டிய 'மைக்'ஐ மெல்லத்தள்ளி, "எக்ஸ்க்யூஸ் மீ, பி ரைட் பேக்." என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து புன்னகைக்க அருகில் சென்றேன்.

அகிலத்தின் அருட்கொடை பெருமானார் மனிதர்களின் முன் மாதிரி மா மனிதர்

- தமிழ்நெஞ்சம் அமின்


மீலாது நபி (நபி பிறந்த நாள்)சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஃபத்வாக்கள்
கடவுளைப்பற்றி சொன்னவரெல்லாம்
கடவுளாகிவிட்டனர். ஆனால்
கடவுளைச்சொன்ன
கடவுளாக்கப்படாத
ஒரே மதத்தலைவர் யார்?

ஒரு மதத்தை
புனரமைத்த தலைவருக்கு
14 நூற்றாண்டுகளாக
ஒரு சிலையோ உருவமோ
இல்லையே யார் இவர்?

இவரின் பெயர்
24மணி நேரமும்
உலகெங்கும் ஒலிக்கிறதே
யார் இவர்?

Saturday, December 2, 2017

குஞ்ஞு முஹம்மது!


கட்டுரை ஆசிரியர் அபூபிலால் கத்தரில் வசிப்பவர். தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களை வாசிப்பவர். அவ்வாறு அவர் வாசித்தவர்களுள் ஒருவரான ‘ஹாஜிக்கா’வைப் பற்றி நமது சத்தியமார்க்கம் தளத்தில் இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இப்போது இன்னொருவர். பெயர் குஞ்ஞு முஹம்மது!
குஞ்ஞு முஹம்மது சாஹிபின் பூர்வீகம் கோழிக்கோடு. கத்தரின் எண்ணெய்க் கம்பெனி ஒன்றின் இயந்திரவியல் பிரிவில் ஒரு மேலாளருக்குச் செயலாளராகச் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் தொடர் பணியாற்றல். அறுபதாவது வயதில், சுமார் முப்பத்துச் சொச்சம் ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின், ஆறு குழந்தைகளுள் இரு மகள்களை மருத்துவர்களாகவும் ஒரு மகனைப் பொறியாளராகவும் உருவாக்கிவிட்ட உள நிறைவோடு ஓய்வுபெற்றுக் குடும்பத்துடன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தாகிவிட்டது.

Friday, December 1, 2017

கவிஞரே, இப்படிக் காதல் மழையாய்ப் பொழிகிறீர்களே உங்கள் திருமணம் காதல் திருமணம்தானே?

*இன்று டிசம்பர் ஒன்று எங்கள் திருமண நாள்*
கவிஞரே, இப்படிக் காதல் மழையாய்ப் பொழிகிறீர்களே உங்கள் திருமணம் காதல் திருமணம்தானே? என்று சிலரும் நீங்கள் கூட காதல் திருமணம் செய்யவில்லை என்றால் வேறு யார்தான் செய்திருக்க முடியும்? என்று சிலரும் என்னை எப்போதும் கேட்பார்கள்.
என் திருமணம் காதல் திருமணம் தான்.