புலரும் பொழுது
பொன்கதிர் பரப்பும்;
அலரும் மலர்கள்
அழகிய முகமாம்!
வளரும் தளிர்கள்
வனப்புடன் காணும்!
இளமை ராகம்
இதயம் உணரும்!
கொஞ்சும் கிளியும்
குயிலிசைப் பாட்டும்,
மஞ்சள் மைனா
மயக்கும் ஒலியும்,
மிஞ்சிய குருவிகள்
மீட்டும் இசையும்,
மேனியை வருடும்
மென்குளிர் காற்றும்,
விடிந்திடப் பிறந்த
வெள்ளியின் வரவை,
விரும்பிப் பாடும்
விடியலும் நன்றே!
முகவைத் தென்றல்!
No comments:
Post a Comment