Monday, April 30, 2018

பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாகச் சந்திக்கும் பிரச்சனைகள்

: பெண்கள் ஆணுக்கு நிகராக வேலைக்குச் செல்வது சகஜமாகிவிட்ட இன்றைய சூழலில் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாகச் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
அவற்றில் முதன்மையான பிரச்சனை மாதவிடாய் கோளாறுகள். மாதவிலக்கு சரியான முறையில் சரியான சுழற்சியில் வந்தால் மட்டுமே ஒரு பெண் ஆரோக்கியமானவளாக கருதப்படுவாள். ஆனால், தற்போது உள்ள காலச் சூழ்நிலையில் 90% பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகள் உள்ளது என்பது ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

மாதவிலக்கின் போது வெளியேறுகிற ரத்தம் அசுத்தமானது என்றும் அது எத்தனை அதிகமாக வெளியேறுகிறதோ அத்தனை நல்லது என்றும் பலருக்கு  தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. ஆனால் அதிக ரத்தப்போக்கு ஆரோக்கியமானதில்லை ஆபத்தானது.

25 முதல் 30 நாட்களுக்குள் மாதவிலக்கு வர்றதும் 5 நாட்கள் நீடிக்கிறதும் தான் இயல்பானது. அந்த 5 நாட்கள்ல 25 முதல் 80மி.லி ரத்தம்  வெளியேறலாம். 80 மி.லிக்கு கூடுதலாகவோ, 5 நாட்களைத் தாண்டியோ, ரத்தபோக்கு இருந்தா அது அசாதாரணமானது சந்தேகப்படணும்.

பேருண்மை கண்ட சூஃபி ஞானிகளான இறைநேசர்கள்

பொதுவாக நீங்கள் ஏதோவொரு பொருளை ஒருவருக்கு கொடுத்து பாருங்கள் அதை உடனே அதைப் பிரயோகித்து பார்த்து விடுவார். அதனால்தான் இயற்கையின் அளவற்ற ஆற்றல் எதுவும் பொது மனிதர்களிடம் கொடுப்பதில்லை.

பேருண்மை கண்ட சூஃபி ஞானிகளான இறைநேசர்கள் தம்மிடம் கொடுக்கப்பட்ட ( கராமத்) அத்தகு ஆற்றல் அதாவது இறைவனிடமிருந்தும், தங்கள் தவ வலிமையால் பிரபஞ்சத்திடமிருந்தும் பெற்ற ஆற்றல்களை பிறரிடம் அவர்கள் கூறுவதில்லை. தாங்களே கூட நினைத்துப் பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒருவர் தம்மிடம் ஒரு பொருளைக் கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்; அவர் அனுமதியின்றி அதனை நாம் உபயோக்ககூடாது. அவர் வந்தபின் அவரிடம் திரும்ப அதை ஒப்படைத்து விட வேண்டும். அல்லது அவர் அனுமதியுடன் அவர் சொன்ன வழியில் அப்பொருளை உபயோக்க வேண்டும் என்பதுதான்.

Sunday, April 29, 2018

Jaffarullah Jafar வாங்க பேசலாம்:


நிகழ்சிக்கு பார்வையாளராகத்தான் சென்றிருந்தேன். நண்பர் Abcayoob Khan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் சூழல் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை.

பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையேயான.
நீயா? நானா?


Jaffarullah Jafar
https://www.facebook.com/jaffarullah.jafar/videos/1651262918321517/

Friday, April 27, 2018

இஸ்லாமியத் தமிழ் இதழ்கள்

அன்புள்ள ஐயா,

‘இஸ்லாமியத் தமிழ் இதழ்கள்’ எனும் கட்டுரை கண்டேன். கட்டுரையாளரின் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஓர் அங்கத்திடம் அவசியம் இருக்க வேண்டியவையே.

அதே வேளையில், முஸ்லிம் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எதார்த்த நிலை என்ன என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. நான் ஒரு வாசகன் என்ற அடிப்படையில் (இங்கு ‘நான்’ என்பது, ‘தன்மை ஒருமை’ அன்று; பலருக்கான ஒரு குறியீடு!) உலக நடப்புகள், நாட்டு அரசியல், மக்கள் நிலை, தட்பவெப்பம் ஆகிய பொதுஅறிவுக்காக, தினமணி, தி இந்து போன்ற நாளிதழ் படித்தாக வேண்டும்.

Thursday, April 26, 2018

டாக்டர் ஆத்மராமும் இஸ்லாமும்


உணர்வு: உங்களைக் குறித்து சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்!

ஆத்மராம்: நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிராமண வைசிய குலத்தில் பிறந்து, மிகச்சிறு வயதிலேயே சென்னை வந்து கோபாலபுரத்தில் வளர்ந்தவன். எனது பள்ளிப் படிப்பு கல்லூரிப் படிப்பு எல்லாம் சென்னையில் தான். லயோலா கல்லூரியில் படித்த நான் 'ஸ்டேட் பர்ஸ்ட் அவுட் கோர்ஸ்' மாணவனாக தேர்வு பெற்றேன். அடுத்து ஐ.ஐ.டி.யில் படித்து பி.டெக் பட்டம் பெற்றேன். ஐ.ஐ.டி.யில் எனது படிப்பு முடிந்ததுமே அமெரிக்காவில் உயர்கல்வி யும், வேலை வாய்ப்பும் பெறுவதற்கான 'விசா' எனக்குக் கிடைத்தது. 19 வயதிலேயே 1965ல் அமெரிக்காவுக்கு முதன்முதலில் சென்ற நான் இன்று அமெரிக்க குடியுரிமை பெற்றவனாக உள்ளேன்.

அழகு தமிழுக்கு ஓரு அப்துல் கபூர்

Vavar F Habibullah

தித்திக்கும் தீந்தமிழ் சாறெடுத்து
அதில் இறைமறை தேன் கலந்து
தமிழ் உலகுக்கு, தான் வாழ்ந்த
காலம் வரை,அயராது அருசுவை
தமிழ் விருந்து படைத்து மகிழ்ந்த பெருந்தகை,பேராசிரியர் அப்துல்
கபூர் அவர்கள்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்...
நான் நல்ல தமிழில் எழுதவும்
பேசவும் இவரே முழுக்க காரணம்.
தக்கலையில் நான் வாழ்ந்த காலம்
மறக்க முடியாதது.

எழுத்து பிழை

Vavar F Habibullah




கதை,கவிதை,கட்டுரை
எழுதுவது பிழைப்புக்கு
வழி சொல்லுமா!
கவிதை எழுதுவது எமக்கு
தொழில் என்று சொன்ன
பாரதி கூட அவன்
வாழ்ந்த காலத்தில் கவிதை
ஒன்றைஎழுதி தமிழ் கவிதை
பரிசு போட்டிக்கு அனுப்பியும்
அது சுத்தமாக கண்டு கொள்ள
படவில்லை.

“செந்தமிழ் நாடென்னும்
போதினிலே இன்பத்தேன்
வந்து பாயுது காதினிலே...”
அந்த கவிதையே, பின்னாளில்
புகழ்பெற்ற பாரதியின் கவிதை
எனும்போது சற்று வியப்பாகவே
இருக்கிறது.

தேடல் ....! (பாகம் - 7)

விசுவாசத்தின் தேடலில்
வித்தியாசமானவற்றை நாடினேன்
அன்பைக்கொடுத்து பெறுவதில்
இருக்கக் கண்டேன்
*
நிரந்திரத்தின் தேடலில்
நிம்மதியை தொலைத்தேன்
மாற்றமொன்றே மாறாமல்
நிலைக்குமென கண்டேன்
*
யதார்த்தத்தின் தேடலில்
யவ்வனங்களில் திளைத்தேன்
மாற்றங்கள் மாறிமாறிவர
நிதர்சனத்தில் கண்டேன்

Monday, April 23, 2018

கொஞ்சுமுகப் பிஞ்சுப் பெண்ணே


அந்நியனோ
அடிக்கடி வீடுவரும்
அங்கிளோ

தொடுதல்
காமத் தொடர்தலுக்கானத்
தூண்டில்கள்

தொடும் விரல்களின்
வேர்களில்
தீவிர காமத் தாகம்
தகித்துக்கொண்டிருக்கலாம்

சொல்லித்
தருவதில்லையா
உன் அம்மா

தேடல் ....! (பாகம் - 7)

விசுவாசத்தின் தேடலில்
வித்தியாசமானவற்றை நாடினேன்
அன்பைக்கொடுத்து பெறுவதில்
இருக்கக் கண்டேன்
*
நிரந்திரத்தின் தேடலில்
நிம்மதியை தொலைத்தேன்
மாற்றமொன்றே மாறாமல்
நிலைக்குமென கண்டேன்
*
யதார்த்தத்தின் தேடலில்
யவ்வனங்களில் திளைத்தேன்
மாற்றங்கள் மாறிமாறிவர
நிதர்சனத்தில் கண்டேன்

*

அறிவு

அறிவின் கனம் இருப்பதாலேயே
தலை கர்வம் கொள்வதை மற்றவர்
களால் ஜீரணிக்க இயலவில்லை.
தலைக் கனத்தை குறைக்க அவை
ஒன்று கூடி ஆலோசித்தன.
எல்லாம் இணைந்து மலக்குடலை
தூண்டி விட்டன.

Sunday, April 22, 2018

ராஜினாமா கடிதம் என் சட்டைப் பையிலேயே...

அவர் என் மாணவப் பருவத் தோழர். மார்க்க பக்தி மிக்கவர். பலமுறை உம்ராவும் ஹஜ்ஜும் செய்தவர்.பல மொழி அறிந்தவர். பல நாடு கண்டவர்.

மூன்று தலைமுறையாக சமுதாய சேவை செய்யும் கண்ணியமான, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பிறர் நலம் நாடும் பிறவிப் பண்பாளர். வளைகுடா நாடுகளில் பணியாற்றிய காலத்தில் எந்த வேறுபாடும் பாராமல் சிறியதோ பெரியதோ பலருக்கும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்த புண்ணியவான்.

பணிக்காலம் முடிந்து ஊர்திரும்பிய சிறிது காலத்தில் மக்கள் பள்ளிவாசல் தலைவர் பொறுப்பை ஏற்கக் கோருவதாகச் சொன்னார். அல்ஹம்துலில்லாஹ் ஏற்றுக் கொண்டு மேலும் நல்லது செய்யுங்கள் என்றேன்.அவ்வப்போது எங்கள் பள்ளிவாசல் நடப்புகளைக் கேட்பார்.சிலவற்றை நடைமுறைப் படுத்திவிட்டுச் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

அமுதூரும் சொல்லழகு அகிலம் போற்றும் மொழியழகு வான்தோறும் புகழ்மணக்கும் வள்ளுவம் பாடிய தமிழழகு..

Vithyasagar Vidhyasagar

அத்தகு தேனூரும் தமிழுக்கு வணக்கம்!!

வயிற்றுவலி வந்தவருக்குதான் பிறருடைய வலி தெரியும் என்பார்கள், அது புத்தகம் எழுதி வெளியிடுவோருக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. புத்தகம் வெளியிடுவது என்பது ஒரு மனக்குழந்தையை சிந்தனையின் அழகோடு பிரசவிப்பதற்கு சமம். அதிலும் இது மதம் பற்றிய புத்தகம். தொட்டால் அல்ல, வாயால் சொன்னாலே உயிர்சுடும் மதங்களின் தன்மையினை, அதன் கூறுகளை, சாராம்சத்தை சொல்லி நாமெல்லோரும் ஒன்றெனக் கைகூப்பும், மனதை மனதால் நெய்யும் படைப்பிது.

இந்த “சமய நல்லிணக்கம்” எனும் நூல் இஸ்லாத்தை நன்றாக பிறமதத்தினரும் அறிவதற்கேற்ற ஒரு பொக்கிஷமாகும். இது வெறும் தனித்த ஒருவரின் சிந்தனையோ வெறும் கருத்தோ அல்ல இப்படைப்பு, இது ஒரு அகம் பண்பட்டதன் வெளிப்பாடு. ஒரு காய் கனிந்து ஞானம் வெளிப்பட்டதன் கூப்பாடு. பலாப்பழம் பழுத்தால் அதன் வாசனையை யாரால் மறைக்க இயலும் ? முடியாதில்லையா ? அப்படித்தான் இப்புத்தகத்தின் ஆசிரியர் ஐயா தஜம்முல் முகம்மது அவர்களும் தனது மனதால்’ கண்ணியத்தால்’ கணிந்துபோனதன் பலனை இப்படைப்பின் வாயிலாக பொதுவெளிக்கு எடுத்துவைத்திருக்கிறாரென்பது மதிக்கத்தக்க செயல்.

எனக்கொரு ஆசையுண்டு, இஸ்லாத்தை முழுதாக படித்துவிட வேண்டுமென்று, காரணம் நமக்குள்ளிருந்து முரண்கள் அகற்றப்படவேண்டும். இஸ்லாத்தின் முழுமையான சகதரத்துவமும், கண்ணியமும், உயிர்நேயமும் காக்கப்படவேண்டும். எங்கள் தெரு மத்தியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய பாயினுடைய வெள்ளைத்தாடியும் அவருடைய வெள்ளை மனசும் போல எனக்கு எல்லோரையும் காண ஆசை.

இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்! ஆய்வுரை: தோழர் கவிஞர் வித்யாசாகர்

*“கடைசி இலை’ (Last leaf ) என்பது ஓர் ஆங்கில கதையின் தலைப்பு*


இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.

அவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.

அவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.

அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.

பொறுமை இல்லாததால்...

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

*அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.*

புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பின் உங்கள் ஓய்வு நேரத்தில் அனுபவித்துக்கொள்ளு ங்கள்

நண்பர்களே யாரேனும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பின் உங்கள் ஓய்வு நேரத்தில் அனுபவித்துக்கொள்ளு ங்கள்.

வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:

கார்ல் மார்க்ஸ்
https://t.co/BbQwjgJFcq
சேகுவேரா
https://t.co/JI9eSrEDUE
தாமஸ் ஆல்வா எடிசன்
https://t.co/a6InSC0Da1
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
https://t.co/IWWUTSWna5
மேதகு வே.பிரபாகரன்
https://t.co/Zg5mtFiFE8
மாவீரன் அலெக்சாண்டர்
மருதநாயகம்
https://t.co/gpeSWfN4R6

Wednesday, April 18, 2018

நெல்லை கல்வியாளருடன் ஒரு சந்திப்பு



சந்திப்பு : முதுவை ஹிதாயத்------

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் எம். கலீல் முஹம்மது இஸ்மாயில் ஆவார்.

இவர் M.Sc, M.Phil, B.Ed,D.P.M., D.B.A. ஆகிய படிப்புகளை படித்தவர்.

இவரது பெற்றோர் முஹம்மது கனி – மரியம் பீவி ஆவர். இவரது தந்தை மூன்று வயதிலேயே காலமாகி விட்டார்.

இவருக்கு மூன்று சகோதரிகள் ஆவர். இவர்களில் இருவர் காலமாகி விட்டனர்.

மனைவி பெயர் A. ஷாஹிரா பீவி. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் ஆவர்.  ஒருவர் பி.இ. படித்து பொறியாளராகவும், மற்றொருவர் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு துபாயில் மருத்துவ நிலையத்தையும் நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

சமீபத்தில் துபாய் அல் கூஸ் பகுதியில் காலிதா மெடிக்கல் செண்டர் என்ற மருத்துவ நிலையம் நடத்தி வரும் டாக்டர் கலிதா பார்க்க விசிட் விசாவில் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

டாக்டர் காலிதா கடந்த 15 வருடங்களாக துபாயில் மருத்துவ சேவை செய்து வருகிறார். தமிழ், ஆங்கிலாம், ஹிந்தி, உர்தூ, மலையாளம், அரபி உள்ளிட்ட மொழிகளை தெரிந்தவர். பள்ளிப்படிப்பில் சிறந்த முறையில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். பிளஸ் டூ படிப்பில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தவர்.

அப்போதைய தமிழக கவர்னர் பி.சி. அலெக்சாண்டர் இடம் பரிசை பெற்றார். பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரியில் படித்தார். அதில் இருந்து 7 பேர் இலண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டனர். அங்கு மருத்துவ உயர்கல்வியை வேலை செய்து கொண்டே படித்தார்.

அவருடன் சந்தித்து பேசியதிலிருந்து :

இவர் தனது பள்ளிக்கூட படிப்பை மாநகராட்சி பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், காமராஜ் உயர் நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் படித்தார்.

அதன் பின்னர் பி.எஸ்.ஸி படிப்பை மதுரை திரவியம் தாய்மானவர் இந்துக் கல்லூரியில் படித்தார். இந்த கல்லூரி பாரதியார் படித்த கல்லூரி என்ற பெருமைக்குரியது ஆகும்.

ஒருபுறமும் மறுபுறமும் ....!


✓வேலை ஒருபுறம்
விருப்பு மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
வாழ்வின் ஓட்டம் ...!

✓தேவை ஒருபுறம்
ஆசை மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
அல்லாடும் மனிதன் ...!

✓பாவம் ஒருபுறம்
பழி மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
உண்மையின் திண்டாட்டம் ...!

Tuesday, April 17, 2018

உறவுகள்தான் வாழ்வின் படிப்பினை..

கோடை_விடுமுறை :

என்ன சார்.?. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.?. கேட்டபடியே வந்தார் அவர்.

இல்லைங்க. பசங்களுக்கு லீவு விட்டாச்சு. கொண்டுபோய் ஒரு மாசம் எங்க அப்பா, அம்மாகிட்டே விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். அப்படியே நானும் பத்துநாள் தங்கிட்டு வரலாம்னு. ஊருக்குப் போய் நாளாச்சே.?.. பதிலளித்தார் இவர்.

அட என்ன சார் நீங்க.? உங்க ஊரே ஒரு கிராமம். வசதிகள் குறைவு. சிட்டி லைப்லேயே வாழ்ந்த பசங்க உங்களுக்கு. அவங்களுக்கு அங்க செட்டாகுமா.? போரடிக்காதா.? அப்பா, அம்மாவை இங்க வரவச்சிட்டு, ஜாலியா இருக்கறதை விட்டுட்டு.. என்றார் அவர்.

வசதியெல்லாம் மனசைப் பொறுத்ததுதாங்க. மனசு சந்தோஸமா இருந்தா போதுங்க. அதுவுமில்லாம, ஊர்ல சொந்தக்காரங்க எல்லோருக்கும் நம்ம பசங்களையும், நம்ம பசங்களுக்கு அவங்களையும் முழுசா தெரிய வேணாமா.? எல்லாரையுமா இங்க வரவழைக்க முடியும்.?.. கேட்டார் இவர்.

ஒவ்வொருவரின் மொத்த வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது


ஒவ்வொருவரின் மொத்த வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது அவர்களின் குழந்தை மற்றும் விடலைப் பருவம். நீங்கள் சிலரைப் பாருங்கள் அவர்கள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை அதாவது மனைவி, மக்கள், தனக்கு கீழ் வேலை செய்யக்கூடியவர்கள், மாணவர்கள் இப்படி பல... கடும் சொல்லால் திட்டுவது துன்புறுத்துவது, அடிப்பது, இன்னும் சிலர் குழந்தைகளை கொஞ்சும் போது கூட அடித்து அடித்து கொஞ்சுவார்கள் இதுவெல்லாம் சாதாரணமாக தெரியும் ஆனால் இப்படி ஒவ்வொருவரும் நடந்துக் கொள்ள காரணம் அவர்களின் குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் நடந்த பார்க்காத காட்சி ,சம்பவம் மற்றும் தவறான பழக்கவழக்கங்கள், தவறான நன்பர்கள், நபர்கள் இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் விளைவுகள் தனக்குள் சாடிஸ்ட்டு அதாவது கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்யும் மனோ நிலை உருவாகி சரியான நிலை நேரத்தை எதிர் நோக்கியே இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒவ்வொருவரும் மேலே சொன்னது போல நடந்து கொள்வார்கள்.

Monday, April 16, 2018

அழகிற்கு அரணாக நின்று அரவனைத்து வாழ்பவனே ஆண்

இந்த உலகில் பெண்களே அழகு,
தாயாக, தங்கையாக,
மங்கையாக, மனைவியாக, மகளாக,
மறுபடியும் தொடர்ந்து மருமகளாக, பேத்தியாக பெண்கள் தான் பேரழகு..!

அடுப்பூதினாலும்,அதிகாரத்தில்
அமர்ந்தாலும்,அநீதிக்கு அடங்காத
அடக்கமான பெண்கள் அனைவருமே அழகு..!

*பக்குவம்* என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!!


கவியரசு கண்ணதாசன்

🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை
இருப்பது அவனுக்குப் புரிகிறது.

🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

🌼இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

நிலையற்ற வாழிவின் நிறைவு ....!


காலையில் கண்விழித்தால்
மட்டுமே தெரியும்
உடலின் உயிர் பிடிப்பு

✓முழுப்பகலும் உழைத்தால்
மட்டுமே தெரியும்
முன்னேற்றத்தின் முதல் படி

✓சம்பாத்தியத்தில் சேமித்தால்
மட்டுமே தெரியும்
எதிர்காலத்தின் பிரகாச ஒளி

✓முழுமனதுடன் தர்மம்செய்தால்
மட்டுமே தெரியும்
செல்வச் செழிப்பின் அருமை

Sunday, April 15, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் சமூக சேவகர் ஹிலால் முஸ்தபா

 சமூக சேவகர் அண்ணன் ஹிலால் முஸ்தபா அவர்கள் தன்னார்வப் பணியில்   பணம்,பொருள் என எவ்விதக் கைம்மாறும் எதிர்பாராமல் நல்ல நோக்கத்திற்காக மற்றும்  கொள்கைக்காக தமது உழைப்பினை வழங்குவது இவரது  சமூக சேவையாக தொடர்கின்றது .

திருநெல்வேலி பேட்டை எம்.முகம்மது இஸ்மாயில் சுதந்திர இந்தியாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராகவும், காயிதே மில்லத் என்ற தகுதி பெற்றும் இருந்த தலைவர் ஹிலால் முஸ்தபா அவர்களுக்கு  தாதா முறை வேண்டும்.

முகம்மது அலி ஜின்னா அவர்களுக்கு முன்னர் அலி சகோதரர்கள் என வரலாறு சிறப்பித்துக் குறிப்பிடும் மௌலானா சௌகத்தலி, மௌலானா முகம்மதலி, இவர்களும் இவர்களின் தாயார் பீயம்மா அவர்களும் சுதந்திரப் போராட்டப் பிரச்சாரத்திற்குச் சென்னை வந்த காலத்தில் பெரம்பூரில் உள்ள  ஹிலால் முஸ்தபா அவர்கள்  பாட்டனார் ஆடுதுறை ஜமால் முகம்மது சாஹிபின் பங்களாவில் தங்கி இருந்தார்கள்.
திருநெல்வேலி முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு வந்த போது பீயம்மா அவர்களுக்கும் மௌலானா முகம்மதலி அவர்களுக்கும் தென்காசி  ஹிலால் முஸ்தபா அவர்கள்  பாட்டனார் இல்லத்தில் விருந்தளித்த பாக்கியம் கிடைத்தது.

Saturday, April 14, 2018

ஆண்டவனே அழுது தொழுது அரற்றுகிறேன்;

காதருகில் வீழ்ந்திழையும்
கார்குழலை காற்றசைத்து
கன்னத்தில் கிசுகிசுக்க,
மாக்களுடன் வயல்வெளியில்
காற்றாக ஓடுகிறேன்;
கண்மூடி மூச்சிறைக்கும்
கணநேர இடைபோதில்
அருகில்வந்து அழைத்த
அன்பான அண்ணாக்கள்!

மெலிதான முறுவலுடன்
மென்மைக் கதைபேசி
எங்கேயோ அழைத்தார்கள்!
தீண்டல்கள் திடுமென்று,
தீயாய்ச் சுடுகையிலே,
கத்துகிறேன்; எனைவிடுங்கள்!
கதறுகிறேன்; எனைவிடுங்கள்!
ஏனங்கே தொடுகின்றாய்;
வலிக்கிறதே! அண்ணா!

வலிக்கிறதே! முடியாமல்
மயக்கத்தில் புலம்புகிறேன்!
அம்மா அப்பா ஆண்டவனே
அழுது தொழுது அரற்றுகிறேன்;
ஓலங்கூட உள்ளேயே
ஒய்ந்தொடிந்து மடிகிறது!
எல்லாமே மறைகிறது!

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1



1. வெற்றியின் முன்னறிமுகம்

வெள்ளிக்கிழமை. செப்டெம்பர் 4, 1187. அஸ்கலான் நகரின் கோட்டை வாசலில், கடல் போல் திரளாக நின்றிருந்தது படை. அந்தப் படையின் தலைவரிடம் ‘சரண்’ என்று தன்னை ஒப்படைத்தது அந்நகரம்.

தமது நீண்ட நெடிய வெற்றிக்கும் சாதனைகளுக்கும் தொடர்பற்ற எளிமையுடன், ஆடம்பரமற்ற எளிய உடையில் குதிரையில் அமர்ந்திருந்தார் சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி. ஐம்பது வயது. வட்ட முகம். எச்சரிக்கையுடன் பார்வையைச் செலுத்தும் கூரிய விழிகள். தாடி நரைக்க ஆரம்பித்திருந்தது. தலைப்பாகைக்கு அடியில் வெளியே தெரிந்த தலைமுடியோ கருமையாகவே இருந்தது. போலோ விளையாட்டு வீரரின் லாவகத்துடன் குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தார் அவர்.

oOo

அம்மாகிட்ட நெறய கேக்கணும் ...



தேசத்தின் தலைப்புச் செய்திகளில் கஷ்மீர் மீண்டும் இடம்பெறுகின்றது. ஆனால் இந்த முறை கல்வீச்சு, தனிநாடு போராட்டம், இறுதி ஊர்வலக் கலவரம் என்று வழக்கமாக வருவதைப் போல் இல்லாமல் வித்தியாசமான செய்தியுடன்.

கஷ்மீர் என்றாலே இந்திய மக்களுக்கு நினைவுக்கு வருவது இராணுவம் மீதும், காவல்துறை மீதும் கற்களை வீசும் சிறுவர்கள், வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த கையோடு இந்தியாவிற்கு எதிராகப் போராடும் தொப்பி, ஜிப்பா, தாடி வைத்த மக்கள். திரும்பத் திரும்ப இவற்றைத் தான் தேசிய ஊடகங்கள் என்று சொல்லப்படும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் நமக்குக் ‘கஷ்மீர்’ என்ற பெயரில் காட்டி வருகின்றன. நாமும் கஷ்மீர் என்றால் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகள் நிறைந்த பகுதி என்றே எண்ணுவதற்குப் பழகிவிட்டோம்.

கனடா ஸ்டெர்லைட் போராட்ட நாளில்...

கனடா ஸ்டெர்லைட் போராட்ட நாளில்...

காப்பரைத் தின்று
தமிழினத்தின் மீது கேன்சரைக் கக்கும்
வேதாந்தா பணப்பிசாசே

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரங்கள்
சிதைத்தழிய ஆட்டிப்படைக்கும்
அணில் அகர்வாலே

தமிழினத்தின் மீது
தொடர்த் துயரங்களை
வாரி வாரி இறைக்கும்
கொடுங்கோல் மத்திய அரசே

Friday, April 13, 2018

மிஹ்ராஜ் இரவுப் பொழுது.....

மிஹ்ராஜ் எனும் அதிசயம்.!

************************************


புனிதப் பயணங்களில்

தலையான பயணமிது....!


மனிதருள் புனிதரும் அவர்தம்

மன்னவனும் சந்தித்துக் கொண்ட

முத்தான நிகழ்வு முகிழ்ந்த பயணமிது....!


முன்பின் இலா மூத்தோனும் அவனின்

அன்பின் உருவான நம் அண்ணலும்

தத்தம் பரஸ்பர நேசம் வெளிப்படுத்தியமை கண்டு

விண்ணோரும் மண்ணோரும்

வியந்து மகிழ்ந்த பயணமிது.....!

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!



سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ لِنُرِيَهُ ۥ مِنۡ ءَايَـٰتِنَآ‌ۚ إِنَّهُ ۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ


(அல்லாஹ்) மிகப் பரிசுத்த மானவன் அவன் முஹம்மது ( ஸல் ) என்னும் தன் அடியாரைக் ( கஅபாவாகிய ) சிறப்புற்ற பள்ளியிலிருந்து ( வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.அவ்வாறு அழைத்துச் சென்ற ) நாம் அதனைச்சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம்.நிச்சயமாக ( உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் -17-1 )

மிஃராஜ் -- விண்ணகப் பயணம் உலக வரலாற்றிலும்,சமைய வரலாற்றிலும்,அது வரை நடந்திராத அது மாதிரி இது வரையும் நடக்காத அதி அற்புத பயணம்.நபிமார்களின் சரித்திரத்திலும் நிகழாத அதிசயமான ஒரு சம்பவம்.யாரும் அடையாத சிகரத்தை இதன் மூலம் நபி நாயகம் ( ஸல் ) அடைந்தார்கள். இதனால் மிஃராஜ் பற்றி சொல்ல வந்த அல்லாஹ் ஆச்சரியமானதைக்குறிக்கும் சுப்ஹானவைக் கொண்டு தொடங்குகின்றான்.

Wednesday, April 11, 2018

பாலைவனத்தில் ஒரு குட்டி ஏரி

 தமாம் அருகே இருக்கும் பாலைவனத்தில் ஒரு குட்டி ஏரியை உருவாக்கி அதை பச்சை பசேல் என்று வைத்திருக்கிறார்கள்... பல ஏக்கர் நிலபரப்பில். இதை மெயிண்டனன்ஸை ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்..!
தகவல்
Mohamed Sainuddin

பாலைவனச் சோலைவனம்

Vavar F Habibullah

நீர் வரட்சி, நில வரட்சி,
நீர் அருவிகளில் வரட்சி
நீர் தேக்கங்களில் வரட்சி

தலக்காவேரி இருந்தும்
நீர் வளம் இருந்தும்
அண்டையர்
நீர் தர மறுப்பதால்
நமதூரில் பாய்ந்தோடும் காவேரி
நீரின்றி இன்று வரண்டு கிடக்கிறது.
இயற்கை பொய்த்தால்
மனித செயற்கை கை கொடுக்குமா!

சமீபத்தில்
நான் துபை சென்றிருந்த நேரம்
எனது மகன் ஆசிக், உங்களுக்கு
துபையில் அதிசயம் ஒன்றை காட்டி
தரவா என்று கேட்ட போது, ஏதோ
விண்ணைத் தொடும் புது வண்ணமிகு
கட்டட அழகு என்றே எண்ணினேன்.

Monday, April 9, 2018

எத்தனை அற்புதமான நிகழ்ச்சி..

நண்பர் ஒருவர் அதிகாலையில் ஊருக்குக் கிளம்பினார்.

அப்போது அந்த பூனை சடாரென சாடி அவருக்கு முன்பாக ஓடி வந்தது..

இருட்டாக இருந்ததால்
எங்கே போனது என்று தெரியவில்லை..

எனக்கு அது என்னவோ நண்பர் இருந்தக் காருக்குக் கீழே போனது போல ஒரு தோற்றம்..

ஒன்றுமில்லை .... ஏகனவன் உண்டு ....!


ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
ஒருபாடு பாடுபட்டு ஓடாய் தேய் கிறோம்
முடிவில் மிஞ்சுவது ஒன்றுமே இல்லை

ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
விறுதாய் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டுகிறோம்
முடிவில் கூட்டு நிற்க யாருமே இல்லை

ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
பயந்து படபடத்து ஓடி ஒழிக்கிறோம்
முடிவில் நிமிர்ந்து நின்று
ஒரு நோக்கு நோக்கியால்
அதனையும் வெறும் பீதி என்று முடிவில் உணர்கிறோம்

ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
சந்தேகப் பார்வையில்
சகலமும் கண்டு கொண்டு சலனப் படுகிறோம்
முடிவில் சந்தோசம் துறக்கிறோம்

ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
யாரை எல்லாமோ துணைக்கு அழைக்கிறோம்
தனிமையை வெறுக்கிறோம்
முடிவில் தனித்தே போகிறோம்

ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
காரணம் கற்பிக்க
காலமெல்லாம் காரணிகள் தேடுகிறோம்
முடிவில் காரியத்தின் காரண கர்த்தாவாகி நிற்கிறோம்

எது திட்டமிடல்...?

எது திட்டமிடல்...?

திட்டமிடல் என்பது நல்லதை நாடியோ அல்லது கெட்டதை நாடியோ இருக்கலாம்...! ஆனால் அதற்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுத்து அதை நிறைவேற்றுவது என்பதிலேயே இருக்கிறது நாம் வகுத்த திட்டத்தின் வெற்றி.

காலத்தால் அழியாத கருத்துக்களை நமக்கு விட்டுச்சென்ற
ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் திட்டமிடல் பற்றி தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் சொல்லிவிட்டு போன கருத்து இது...👇

ஒரு மருத்துவரை காண அவரது நண்பர் வருகிறார். வீட்டுவாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, வீட்டுனுள்ளே சென்றுவிட்டு திரும்ப வந்து பார்க்கையில் வாசலில் நிறுத்திவிட்டு போன தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை! உடனே சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.

உலகம் ஒவ்வொருவரின் திறமையை எதிர் நோக்கியே இருக்கிறது

இன்றைய உலகம் ஒவ்வொருவரின் திறமையை எதிர் நோக்கியே இருக்கிறது. ஒவ்வொரு பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒவ்வொருவருடைய திறைமைக்கே முக்கியத்துவம் கொடுக்கும். அதிலும் நாவான்மைக்கு சிறந்த இடம்.

என்னிடத்தில் நன்பர் வந்தார்; என் மகன் ஸ்கூலில் பாடத்தை நன்றாக நடிப்பதாகவும் நல்ல ஒழுக்கமாக இருப்பதாகவும் மிஸ் கூறினார்கள். ஆனால் அவனால் படித்ததையோ கற்றுக் கொடுத்ததையோ அவனால் சொல்ல முடியவில்லையாம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறானா என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார் நன்பர்.

சுவடுகள் ....


பூமியில் பதிவது
பாதங்களின் சுவடுகள் ...

காலங்களில் பதிவது
வாழ்க்கையின் சுவடுகள் ...

உழைப்பில் பதிவது
வேர்வையின் சுவடுகள் ...

கரங்களில் பதிவது
உழைப்பின் சுவடுகள் ...

பிரிக்கவும் சேர்க்கவும் பழகவும்


மகிழ்ச்சியையும் முத்தத்தையும்
பகிர்ந்தால் மட்டுமே
இன்பத்தைச்
சுவைக்க முடியும்

கோபத்தையும் ரகசியத்தையும்
பகிராவிட்டால் மட்டுமே
நிம்மதியைக்
காக்க முடியும்

Saturday, April 7, 2018

என் மனதில் இருந்த ஒரு எண்ணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெண்கள் அன்பையும் ஆதரவையும் மிகவும் விரும்புவார்கள் . நாட்டில் உள்ள பல மக்களிடமிருந்து பல செய்திகளை ;தொலைக்காட்சி ஊடகங்கள் . மூலம் கிடைப்பதில் பெருமிதம் அடைகிறார்கள், அவர்களை ஊடகங்கள் ஊக்கமளிக்கின்றனர், ஊடகங்கள் வழியே அறிவைப்பெறுவதுடன் அதன் வழியே கற்றவர்கள் சிலர் பொருள் ஈட்டவும் செய்கின்றனர் .அதில் மிகச் சிலர் தவறான வழியில் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர் . ஊக்கமளிக்கும் அளவுக்கு ஊடகங்களில் பங்கு பெறும் பெண்களிடம் இருந்து நிறைய செய்திகளைப் பெறமுடிகின்றன . அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று சிலர் தம் மகள்களுக்கு சொல்லும் அளவிற்கு சென்றுவிடுவார்கள். பெரும்பாலும் குடும்பங்களில், பெண்கள் சமையலறையில் சமைப்பதிலும் சாப்பிட்டவுடன் பாத்திரங்களை: கழுவுவதிலும் இருக்கின்றார்கள் . முஸ்லீம் இல்லங்களின் விருந்தோம்பல் ஒரு அம்சமாகும், அவர்கள் படிக்க வேண்டும். அவர்கள் "சமூகத்தின் காரணத்திற்காக உறுதியுடன் இருக்க வேண்டும்" . ஒரு பெண் ஒவ்வொரு படிநிலையிலும், அவள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூ டாது என்று தீர்மானிக்கும்.சிறந்த திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் . ஒரு கலவர பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லும் நிலையில் ,தாமதமாக இரவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலையில் , வேலைக்கு போகும் அவசியமானால் ? தனியாக பயணம் செய்யும் போதும் அத்தனையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான, எளிதான வழி செலுத்துதல் அவசியம் . குடும்பத் தலைவர்கள் பெரும்பாலும் இந்த விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை .. பெண்களுக்கு சமமான உரிமையும், வளர அனுமதிக்கப்படாவிட்டால், நம் சமூகம் முன்னேற முடியாது என்பது இப்போது தெளிவாகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு சமூகத்திலும் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி இல்லாமல் நமது நாடு முன்னேற முடியாது. ஆனால் : பெண்கள் முன்னணிக்கு தேவையான அனைத்தையும் செய்ய சமூகம் அனுமதிக்குமா ? . பெண்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து கூடுதலான ஆதரவைப் பெற வேண்டும், உங்கள் சொந்த குடும்பத்திலுள்ள பெண்களை மேம்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களது குடும்பத்தினரால் ஆதரிக்கப்படுவதில்லை மேலும், பெண்கள் சமூகத்தில் சமமானவர்களாக நடத்தப்படாவிட்டால், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும். போதுமான தியாகம் செய்யாவிட்டால் செயல்புரிவது கடினம், தனிப்பட்ட முறையில் ஈடுபடுத்தப்பட்ட தியாகம் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும் உங்கள் அசாதாரண வாழ்க்கை மற்றும் தேவைகளுக்கு இடமளிக்க நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டும் நீங்கள் வழிநடத்த விரும்பினால், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள், குழந்தை வளர்ப்பது, சமைத்தல், சுத்தம் செய்தல், உங்கள் குடும்பத்தை திட்டமிட உதவுங்கள்.



என் மனதில் இருந்த ஒரு எண்ணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 பெண்கள்   அன்பையும் ஆதரவையும்  மிகவும் விரும்புவார்கள் .

 நாட்டில் உள்ள பல மக்களிடமிருந்து பல செய்திகளை ;தொலைக்காட்சி ஊடகங்கள் .
மூலம்  கிடைப்பதில் பெருமிதம் அடைகிறார்கள், அவர்களை  ஊடகங்கள்
ஊக்கமளிக்கின்றனர்,

ஊடகங்கள் வழியே அறிவைப்பெறுவதுடன் அதன் வழியே கற்றவர்கள் சிலர் பொருள்
ஈட்டவும்

செய்கின்றனர் .அதில் மிகச் சிலர் தவறான வழியில் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர் .



இரவில் தூங்காமல் அல்லது தூக்கம் வராமல் இருந்தால்


நீங்கள் இரவில் தூங்காமல் அல்லது தூக்கம் வராமல் இருந்தால், உணவுகள் மாற்றத்தால், குறைப்பாட்டால், தலையில் அடிப்பட்டதினால், சின்ன சின்ன பிரச்சனைகளை கூட மனதில் வைத்து நினைத்து நினைத்து வருந்துவதுவதால், அதனால் வரும் குழப்பத்தால், எந்நேரமும் கவலையில் இருப்பது,  தனிமையில் அதுவும் வயதான காலத்தில் இருப்பது இப்படி இதனால் வரக்கூடிய விளைவுகள், நோய்கள் அதிகம் இருந்தாலும் ஒவ்வொருவரையும் முதலில் பாதிக்கக்கூடிய விஷயம்  " மறதி"

இந்த மறதி நோய் ஒவ்வொருவரையும் இந்த உலகில் வாழ்வதையே தகுதியற்றதாக ஆக்கிவிடும். இந்த மறதி நோயிலிருந்து விடுதலை, குணம் பெற வேண்டுமென்றால் உங்களை நீங்கள் எங்கே துலைதத்தீர்களே  அங்கே நீங்கள் தேடவேண்டும். அதாவது மறதிக்கு காரணமான செயலை விட வேண்டும். பிறகு உங்களை நீங்கள் நம்பவேண்டும், மதிக்கவும் வேண்டும் பின்னர் மருத்துவத்தை விட இறை திக்ரு தியானம் உங்களை மாற்றும்.

Tuesday, April 3, 2018

வெகுமதியா! தண்டனையா!! (கொஞ்சம் தத்துவம்

வெகுமதியா! தண்டனையா!!
(கொஞ்சம் தத்துவம்)
@By.Dr.Vaver F .Hsbibullah
வாழும் உலகில்
நாம் நித்தமும் காணும் செய்திகள்
வெகுமதியா இல்லை தண்டனையா!
நண்பர் டாக்டர் தனசிங் கேட்ட
கேள்விக்கு பதில் தருவது சற்று கடினம் தான்.

தந்தையை கொன்ற மகன்
மகனை கொன்ற தந்தை
தாயை கொன்ற மகள்
மகளை கொன்ற தாய்
மனைவியை கொன்ற கணவன்
கணவனை கொன்ற மனைவி
காதலியை கொன்ற காதலன்
காதலனை கொன்ற காதலி
நண்பனை கொன்ற உயிர் நண்பன்
இதில் யார் வெகுமதி
யார் தண்டனை!

பண மோசடிகள்....
அழிந்த தொழிலதிபர்கள்!
பதவி கொள்ளைகள்...
அழிந்த அரசியல்வாதிகள்!
புகழின் போதை...
விழுந்து மறைந்த
நாடக மேடைகள்!
பணம்,பதவி,புகழ் இவையெல்லாம்
வெகுமதியா இல்லை தண்டனையா!

பெற்றோர்களுக்கு குழந்தைகள்
குழந்தைகளுக்கு பெற்றோர்கள்
கணவருக்கு மனைவிமார்
மனைவியருக்கு கணவன்மார்
காதலர்கள் - உயிர் நண்பர்கள்
அமைவதெல்லாம்... உண்மையில்
வரமா! இல்லை தண்டனையா!

மனிதனின் வாழ்வும் வளமும்
அவனது ரத்த பந்தங்கள், உறவுகள்
கைகளில் முடியுமென்றால்...
பாவங்களில் சேர்ந்த பணம்
படுகுழியில் தள்ளுமென்றால்...
மோசடி பதவி சுகங்களே
வீழ்ச்சிகளின் நுழை வாசல் என்றால்!
விளம்பரமாகும் புகழே
வீழ்த்தி விடும் ஆயுதம் என்றால்...
இது வரமா இல்லை தண்டனையா!

ஒன்றின்றி மற்றது
அமையாது என்றால்...
ஒன்றின் கைகளிலேயே
மற்றொன்றின்
முடிவு அமையுமென்றால்...
வினை விதைத்தவன்
வினை அறுப்பான் என்பதும்
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும் என்பதும்
வெகுமதியா இல்லை தண்டனையா!

மனித ஆசைகளை
தூண்டும் எண்ணங்களே
மனித முடிவுகளை நிறைவு
செய்கின்றன.
தனக்கான
வெகுமதிகளையும் தண்டனைகளையும்
மனிதனே தீர்மானிக்கிறான்
அவனே கொள்முதல் செய்கிறான்.
எது வெகுமதி எது தண்டனை
என்று புரியாமல் தடுமாறும் மனிதன்
வெகுமதியில் ஒளிந்திருக்கும்
தண்டனையையும்,தண்டனையில்
ஒளிந்திருக்கும் வெகுமதிகளையும்
அறியாமலே தேர்வு செய்கிறான்.
ஒன்றை தொட்டே மற்றொண்டை
பெற்றுக் கொள்கிறான்.
மனித விதிகள் தடம்புரளலாம்
இறை விதிகள் என்றும் தவறுவதில்லை.
@vavar F Habibullah

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது

மன்னிப்பைப் பற்றி
மருத்துவம் சொல்வது
பகீர் தகவலாக உள்ளது.
'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.
உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.
அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.
அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.
'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.
'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

இதயக்கூடு திறந்துவைத்து...

ஒருவன்
நல்லவனாய் இருப்பதை
ஏமாளியாய் இருக்கிறான்
என்று நகைப்பவர்கள்
ஏமாற்றுக்காரர்கள் என்று 
உறுதியாய்த் தங்களை 
அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்
நல்லவன் என்பது
ஏமாளி என்று பொருள்தரும்
குணாதிசயமன்று
எந்த நல்லவனும்
ஏமாந்து நிற்கத் தயாராய் 
இருப்பதே இல்லை
நல்லவனாய் இருப்பதென்பது
உன்னையும்
நல்லவனாய்க் காண 

கப்பலுக்கு போன மச்சான்.....

இளம்வயதில் திருமணம் முடித்து
மகிழ்வாக  கொஞ்சிவிலையாடும்
வயதில் பிழைக்க வெளிநாடு சென்று
கனவில்  முழ்கி வாழும் என் அன்பு
நெஞ்சங்களுக்கு இந்த பாடல் சமர்
பணம்

தன்னை உருக்கி பிறருக்கு வெளிச்சம்
கொடுக்கும் மெழுகு போல்
தன்னை உருக்கி தன் குடும்பத்துக்ககாக
வாழும் ஜிவன் தான் வெளிநாட்டில்
வசிக்கும் மனிதன்