கனடா
கிழக்கே சில்லென்று அட்லாண்டிக்
மேற்கே சிலுசிலுப்பாய் பசிபிக்
இருபெருங் கடல்களுக்கு இடையில்
வடதுருவத்தின் மடியில்
அமெரிக்காவின் தலையில்
முத்து பவளம் மாணிக்கம் வைரம்
வைடூரியங்கள் பதித்த மகுடமாய்
ஜொலிஜொலிக்கும் நாடுதான் கனடா
கனடாவின் உயர்வுக்கு முக்கிய காரணங்கள் மூன்று
1. கனடாவின் வளம்
2. கனடிய மக்கள்
3. கனடிய அரசு
இந்த மூன்றையும் சிறப்பாக எடுத்துக்கூறவேண்டும் என்று நினைத்தேன். அதையே கனடா தினத்தன்று ஒரு பட்டிமன்றமாய்ச் செய்தேன். எதிர்பார்ததைவிடவும் சிறப்பாய் கனடிய பேச்சாளர்கள் பிளந்து கட்டி இருக்கிறார்கள்.
கனடாவைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்ளும் ஓர் அரிய வாய்ப்பாய் இந்தப் பட்டிமன்றம் அமைந்துவிட்டது.
கனடாவின் உயர்வுக்குக் காரணம் வளமா? மக்களா? அரசா? என்ற வழக்கில் வெற்றி பெற்றது எது என்பதை அலசி ஆராய்ந்து சொல்லி இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை அறிய விழைகிறேன்
இதோ பட்டிமன்றம் யுட்யூபில் உங்களுக்காக...
அன்புடன் புகாரி
No comments:
Post a Comment