Tuesday, June 2, 2020

நினைவெல்லாம் மக்கத்து நபிமீது

Hilal Musthafa
கலிமா கேசட்:5.

பாட்டியவர்: எஸ்.பி.பி. இசை:எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால் முஸ்தபா.

நினைவெல்லாம் மக்கத்து நபிமீது
நிலைத்தபின் நமக்கிங்கு துயரேது?

பிறக்கிற பெண்ணை உயிருடன்
மண்ணில்
புதைக்கிற கயவரைத் திருத்திய நாதர்!

உழைக்கிற பயிரை அறுக்கிற துயரை
முளையிலே கிள்ளி ஒதுக்கிய தாலே!



ஒதுக்கிய விதவையை மணக்கிற
உரிமையை
நமக்கெரு விதியினெ புதுக்கிய வேந்தர்!

சுவைக்கிற சுகத்தினை இழக்கிற
கனியை
அழைத்தொரு வழியினை வழங்கிய
தாலே!

கரத்தினில் உழைப்பு வடுவினைக்
கண்டதைக்
கண்களில் ஒற்றிய மா மனிதர்!

பிழைக்கிற தொழிலே சுவனத்து
நிழலென
உழைக்கிற இனத்தை உயர்த்திய தாலே!
இத்தனையும் கிளிக் செய்து பாருங்கள் 
Hilal Musthafa

No comments: