·
Vavar F Habibullah
பெரிய திட்டங்கள் சிந்தனைகள்
இப்போது தேவை இல்லை.
ஒரு வருடம்(short term)
ஆரோக்கியமாக வாழ
முயற்சி மேற்கொள்ளுங்கள்.
சொந்த மாநிலம் அல்லது சொந்த
ஊர் வசதி என்று எண்ணாதீர்கள்.
இருக்கும் இடம்,ஒரளவுக்கு வசதி
என்றால் அங்கிருந்து வேறு இடம்
தாவாதீர்கள். பயணம் மேற்கொள்
வோர் இப்போது சூழ்நிலை கைதி
கள் போல், ‘குவாரண்டைன் தனி
மையில்’ வாழ வேண்டும். இது
மேலும் மன அழுத்தம் தரும்.
ஊரில் இருப்பவர்களை, அருகில்
இருக்கும் உறவினர் அல்லது
நண்பர்களே இப்போது
அநுகுவதில்லை. கொரோனா
நோயாளி என்ற முத்திரை
உங்களையும் உங்கள் குடும்பத்
தையும் ஊர் விலக்கலுக்கு
அல்லது சமூக விலகலுக்கு
வழி வகுக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற சமதர்ம நிலைக்கு மன
நிலையை உயர்த்துங்கள்.
சினிமா, டூர், டிராவல்ஸ், ஷாப்பிங்
கிளப், ஹோட்டல்ஸ்,ஈட்டிங்
ஜாயிண்ட்ஸ், மீட்டிங்ஸ், ஸ்போர்ட்ஸ்
திருமண ஆடம்பரம் எட்செட்ரா
இல்லாத ஒரு அமைதியான
வாழ்க்கைக்கு மனதை,உடலை
சற்று பக்குவப்படுத்தி பாருங்கள்
கொரோனா ஆண்டவனின் ஒரு
அற்புதமான சிருஷ்டி. அதன்
பிறப்பு கூட ரகசியம் தான்.
நாட்டுக்கு நாடு தன் உருவத்தை
மாற்றிக் கொள்ளும்
அதிசயப் பிறவி. கட்டுப்படுத்த
மருந்து இல்லை. தடுத்து நிறுத்த
வேக்சின் இல்லை. மருத்துவ
வல்லுநர்களையே நாடி பிடித்து
சவக்குழிக்கு சலனமின்றி
அனுப்பி வைத்து பரிகசிக்கும்
ஒரு அபூர்வ சிந்தாமணி.
நோயின் பிடியில் நின்று
மீண்டவரை
மீண்டும் தேடிப் பிடித்து
வேட்டையாடும் இதன் அசுர
குணம் கண்டு மருத்துவ உலகம்
கூட கைபிசைந்து நிற்கிறது.
யாரை பிடிப்பது, யாரை விடுவது
என்பதை முழுக்க கொரோனாவே
முடிவு செய்கிறது.வெண்டிலேட்டரில்
ஏறி பயணம் செய்வோரையும் இது
விட்டு வைப்பதாக தெரியவில்லை.
கொரோனாவின் அச்சுறுத்தும்
மரண யுத்தம் தொடர்கிறது.
கத்தியின்றி ரத்தத்தமின்றி
தொடரும் அதன் அத்து மீறல்
கண்டு அணுஆயத வல்லரசு
நாடுகளே அதிர்வது அச்சம்
தருகிறது.
மரணம்!
பிறப்பை போன்றே
சிறப்புக்கு உரியது.
மரணமே பிறப்பின்
தர்மத்தை நிலை நாட்டுகிறது.
மரணம் இல்லை என்றால்
பிறப்புக்கு அர்த்தம் இல்லை.
அந்த சிறப்பான மரணத்தை
கொரோனா வெற்றி கொள்ள
அநுமதி தராதீர்.
60+ don’t go outside
even for a walk.
below 10,keep them inside.
in between, move if necessary
with all corona precautions.
do everything to prevent it
if it affects, don’t worry
don’t get panic
be bold
do the test
if its positive
get admission and treatment.
believe that with good
treatment the recovery is good.
hardly 5% of cases need
ICU admission.
in india especially
tamilnadu the doctors
and nursing staff are very
competitive and highly
dedicated and sincere.
They are much better
than doctors of other nations.
DR.HABIBULLAH
Senior Paediatrician
No comments:
Post a Comment