Saturday, June 13, 2020

இது ஒருவகைக் காதல்....!

Hilal Musthafa

ஆஹாஹா அவள்பொழியும்
அருளுக்கு இங்கேதான் எல்லை ஏதம்மா!

அந்தப்புரம் மிஞ்சும்லீலா
அருவிதரும் ஆனந்த போதை தானம்மா!
(ஆஹாஹா)

விண்முகட்டில் மண்புறத்தில்
பொன்னெழிலைச் சிந்திசிந்தி
மின்ன வைக்கின்றாள்!
வண்ணம்கொட்டி ஒன்றையொன்று
வாரித்தழுவி இன்பவெறியில்
பின்ன வைக்கின்றாள்!
(ஆஹாஹா)



விழியெங்கும் ஒளிமழையால்
விதவிதமாய்ப் பூக்கள்தூவி
துள்ளிக் குதிக்கின்றாள்!
முழுவதுமாய் நெஞ்சுக்குள்ளே
முத்துமுத்தாய் வியர்வைதங்க
அள்ளிப் பதிக்கின்றாள்!
(ஆஹாஹா)

அவள்பெயரைச் சொல்லச்சொல்ல
உயிருக்குள்ளே தேன்பிழிந்து
சுவையை விதைக்கின்றாள்!
அகமனதைத் தீண்டிதீண்டிப்
புல்லாங்குழல் மொழியலொரு
கனவைப் புதைக்கின்றாள்!
(ஆஹாஹா)

சின்னசின்னக் குறுப்புகளால்
தட்டித்தட்டித் தாளலய
மேளம் எழுப்புகிறாள்!
கன்னப்பக்கம் மொழியொழுதி
கனிரசத்தில் மயக்கியொரு
கவிதை குழப்புகிறாள்!
(ஆஹாஹா)

அந்தரங்கப் போகச்சுகம்
அள்ளியள்ளி இதழ்வழியத்
தின்ன வார்க்கின்றாள்!
அலையடிக்கும் சுனைக்குள்ளே
அடுத்துத்தள்ளி அரவணைத்துக்
கரத்தால் கோர்க்கின்றாள்!


Hilal Musthafa

No comments: