அபூபக்கர் (ரலி) அவர்கள் பிலாலின் எஜமானனிடம் 10 தங்க நாணயங்களை கொடுத்து அவரை விலைக்கு வாங்கினார்கள்..
அப்போது அந்த எஜமானன் உமைய்யா எகத்தாளமாய் சொன்னான்..
"ஒரு தங்க காசு தந்திருந்தாலும் நான் அவரை உமக்கு விற்றிருப்பேன்"என்று
பதிலுக்கு அபூபக்கர் சொன்னார்கள்.
"1000 தங்க காசுகள் தந்தாவது அவரை நான் மீட்டிருப்பேன்."
அப்படி வாங்கப்பட்ட பிலால்(ரலி)என்ற கறுப்பு தங்கத்தை வைத்து தான் நபி(ஸல்) அவர்கள் உலகமெங்கும் ஒலிக்கும் பாங்கை முதன் முதலாக கஃபாவில் முழங்க வைத்தார்கள்..
ஒரு அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்தா..!? இணை வைப்பவர்கள் எரிச்சலடைந்தார்கள்..!?
இது தான் இஸ்லாம் கற்று தந்த வழி..
இங்கு நிறவெறிக்கு, இனவெறிக்கு சாத்தியமேயில்லை..
இன்றும் பள்ளியில் பாங்கு சொல்பவர்களை மரியாதையாக அந்த #பிலாலின் பெயரை கூறித் தான் அழைக்கிறார்கள்..
இதை விட சிறந்த அந்தஸ்தை யாரால் கொடுத்து விட முடியும்.!?
"ஒரு கருப்பருக்கு
வெள்ளையரை விடவும்,
ஒரு வெள்ளையருக்கு
ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை,
இறையச்சத்தைத் தவிர!" (அஹ்மத் 22,391)
Saif Saif
No comments:
Post a Comment