Noor Saffiya
காணும் சொரூபமெலாம்!
கத்தன் மழ்ஹரென்றே!
பேணி ஷுஹுது செய்தே!
படைத்தோன்முன்னே
பாசநபியுடனே கரம்
பற்றிருப்போம்! நாம்.
சிந்தையில் எந்நேரமும்
சர்தாரின் நினைவே!
சிகரம் காண்பதற்கு
ஷெய்கின் வரமே!
சங்கையுடனே முதலில்
பெறும் வாக்கே!
சிறிய இவ்வுலகினிலேயே
பெறும் பேரின்பம் காணுமே!
ஷெய்கின் வரமோ நம்
சிந்தைக்கு வசந்தமே!
சிந்தை மகிழும் ஷெய்க்
சிரசின் திறவுகோலே!
ஷெய்க் சொல்லும்
செயலும் நம்மிலே!
சிதறாமல் எக்காலமும்
சீரிய மாண்பினிலே!
சிறந்த காமில் ஹபீபை
சகலத்திலும் நிலைத்தே!
செய்யும் தவம் யாவுமே
சாட்சியாளரினிலே!
சங்கமித்து சூழ்ந்திடும்
சீரிய ப்ரபஞ்சத்திலே!
ஆனந்தகளியாட்டமோ
அங்கலாய்த்திடுமே!
அமுத கானமாய் சிந்து
இசைத்திடுமே🎸!
உன்னில் தோன்றும்
உள்ளுணர்வு நிலையானதே!
ப்ரபஞ்சத்தில் நீ
சேருகிறதுபோல,
ப்ரபஞ்சமும் உன்னுள்
உதயமே இது நிதர்சனமே!
நீ குழந்தையாய் மாறியே!
நிலைத்து நிற்பதாலே!
நிமலோனில் வாழும்
நிரந்தர நிம்மதி ஆவாய்!
நாளும் நடக்கும் நிகழ்வு
நன்மை,தீமை தெரியாது
நல் மலக்கோடு பயணித்து
நித்தம் நித்தம் ரப்பிலே!
நாதமாய் இதழினில்
நாதராய் நாமமாய்!
நவிழும் மழலையின்
கல்பு கஷடறியா நிலையாய் நிலைத்தால், நம்மிலே!
நடப்பதறிந்து தருவானே
நன்மையின் வாசமே!
நம்மில் சுவாசமாய் வீசுமே!
ஞானத்தின் மோளமே
பறை சாற்றிடுமே!
ஞாபக சக்தியுடனே
திறந்திடுமே!
ஞானத்தின் வாசலுமே!
எட்டா நிலையும்,
எட்ட வைத்திடுமே!
ஏற்றமிகு ஆயிர தாமரை
இதழும் விரிந்துடுமே!
ஏகனின் தரிசன உலகு மணிமகுடம் சூடிடுமே!
எம் காமில் ஷெய்க் சொல்லும்
செயலும் ஒன்றாக்கிடுமே!
ஷெய்க் கரம் பற்றியதும்,
சிரசினில் வைக்கணும்.
எச்சூழ்நிலையிலுமே!
சிந்தை மாறாது
செம்மை படுத்தியே!
தவ வலிமையில்
தாஹாவினொளி கண்டதும்,
தரும் ஷெய்கின் முதல் வரமே!
நமக்கு தரும் முதல் வசந்தமே,
நம் ஞானத்தின் திறவுகோலே!
நம்பிக்கை கொண்டோர்
வீண் போவதில்லை!
நாயனின் அம்சமும்
நம்மின் அங்கமும்;
நாதரின் அசைவும்
நம்மின் இசைவும்!
நலம் பெற நன்மை
பயப்போம்!
காமில் ஷெய்க் நம்மிலே
காட்சியானாளே!
கடைசி வரை சிறக்குமே!
சீரிய நற்பண்பு பிறக்குமே!
சங்கமிக்கும் சகத்திலுமே!
சக்ராத்தில் ஹரஹர சப்தமோ
சர்தாரோடு சுவைக்க,
சாந்தம் தவழும்
சற்குண சீலராக்கி!
இஸ்ராயீலின் வருகையும்
இயல்பாய் கண்டு மகிழவே!
இன்முக புன்முருவலாய்,
இறைவனை காணும் பாக்யம்!
துடிக்கும் இறுதி மூச்சினிலே!
துய்யோனின் தூய திக்ர்
திலாவத் கலிமா முழங்கிட!
தீன் தீன் என மலக்குகள்
சோஃபன குரலுமே!
தீதாராய் தூய வெண்ணிற
ஆடையுடனே!
வாழ் நாளில் வரிசைபடியே
வழி தவறி தெரிந்தும்,
தெரியாத பாவம்
கடல் அலைபோல்
மீண்டும் மீண்டும்
மனமெனும் மாளிகையாய்!
மாயையான இவ்வுலகில்
லயித்தே!
மண்ணுலகம்,
விண்ணுலக நிரந்தமே!என
தெரிந்த நிலையிலே!
மறுமறுபடியும் இவ்வுலகிலே!
வஞ்சித்த,வெறுத்த,விரும்பாத
அனைத்து சிறிய,பெரிய செய்த பாவம் யாவுமே!
ஆடை,அணிகலன் போல,
இம்மையிலே! அனைத்து
பாவத்தையும் நீக்கியே! படைத்தோன்முன்பரிசுத்த வெண்ணிறமாக்கியே!
மகிழ்ந்த நிலையிலேயே!
மாநபி வருகையும்,
மலக்கின் சோஃபன ஓசையும்,
இறை கிருபை பார்வையும்!
இதமான இயற்கை சூழலும்!
இறைவா! நீ தருவாய்!
இரசூலின் ஹுப்பினாலே!
இருக்கும் காலமெலாம்
இறை ரசூலின் வாழும்!
இதயநேசம், இயற்கைவாசம்!
புகழ்ந்திடும் கல்பு!
பகிர்ந்திடும் விரல்!
உதித்திடும் மனம்!
விதைத்திடும் எண்ணம்!
முளைத்திடும் பதிவு!
கலந்திடும் காற்றில்!
வீசிடும் மணமாய்!
விரும்பிடும் இயற்கை!
வாழ்ந்ததின் அர்த்தம்!
வருகின்ற சொல்
வந்தனமே!
வெல்லும் ஒவ்வொரு
கல்பிலுமே!
வெறுப்பை நீக்கிடுமே!
விரும்பும் நிலையாயிடுமே!
இன்ப,துன்ப நிலை
தெரியாதே!
இவ்வுலக பேராசை
பிறக்காதே!
இச்சை விலகி
ஓடிடுமே!
இஷ்க்,இல்மென
வாழ்ந்திடுமே!
போதுமென எதுவும்
ஆக்கிடுமே!
புண்ணிய வழி
காட்டிடுமே!
படைப்பில் மனம்
லயித்திடுமே!
பார்ப்பதில் பரவசம்
கண்டிடுமே!
எதிலும் கூறிடுமே,
அல்ஹம்துலில்லாஹ்!
எச்செயலிலும் சொல்லுமே!
அஸ்ஸுக்ரன்லில்லாஹ்!
பார்ப்பதில் போற்றி
புகழுமே!
சுபுஹானல்லாஹ்!
இத்தகு பாக்யமே!
இறுதி வரையுமே!
அழகிய ஹக் திக்ரும்
அஹ்மதரின் ஸலவாத்
துதித்து நாவினில்
நனைவோம்.!
ஆமீன் !!
யா ரப்பே !!
என் ஹுப்பே !!
ஸல்லல்லாஹு
அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு
அலைஹிவ
வஸல்லம்💞
🖋நூர்ஷஃபியா காதிரியா
No comments:
Post a Comment