Monday, June 1, 2020

FEW WORDS

Vavar F Habibullah
FEW WORDS

நாடு எங்கே போய் கொண்டு
இருக்கிறது என்று கேள்வி
கேட்டால் கூட குண்டர்
சட்டத்தில் கைது செய்து
உள்ளே போட்டு விடுவார்கள்
போல் தெரிகிறது.

ஃப்ரண்ட் லைன் வர்கர்ஸ்
டாக்டர்கள், பேக் லைன்
வரிசையில் கைகட்டி
நிற்கிறார்கள்.மருத்துவர்
செவலியர் சாவு எண்ணிக்கை
அதிகம் நிகழ்வது கவலை
தருகிறது.ஊரடங்கால் நோய்
கட்டுப்படாத போது தளர்வுகள்
என்ன செய்யும்.....மேலும்
அதிகரிக்க உதவுமே தவிர
குறைய உதவாது.


குமரி மாவட்டத்தில் தொடர்
மழை கொட்டுகிறது. குளிர்
தென்றல் வீசுகிறது என்று
மீடியாக்கள் சொல்ல, குளிர்
காய்ச்சல் வந்து குழந்தைகள்
அவதிப் படுவது இப்போது
அதிகரித்து விட்டது.

காய்ச்சல் சளி இருமல்
மூச்சுத் திணறல் ஆஸ்த்மா
குழந்தைகளை மிரள வைக்
கிறது. சாதாரண மக்களிடம்
கொரோனா டெஸ்ட் செய்ய
பணம் இல்லை. குழந்தைக்கு
மூச்சுத் திணறல்.. தாய்க்கோ
பயத்தில் மூச்சுத் திணறல்.
நோயாளிகள் அதுவும் பச்சை
குழந்தைகள் படும் அவதி
டாக்டர்களுக்கு புரிகிறது.
புரிந்தவர்களின் செலக்டிவ்
மெளனம் கவலை தருகிறது.

கூலி உயர்வு
கேட்டான் அத்தான்
குண்டடி பட்டு
செத்தான் அத்தான்!
என்று பள்ளி மாணவனாக
இருந்த போது கேட்ட குரல்
இப்போது நினைவில் வந்து
தொல்லை தருகிறது.
வேலையே இல்லாத போது
கூலி உயர்வு கேட்பது எப்படி!
மருத்துவம் செய்ய போதிய
பணமின்றி பாமர மக்கள்
அவதிப்படுவது கண் முன்
தெரிகிறது.

நாடு என்ன செய்தது
என்று கேட்காதே!
நீ என்ன செய்தாய் அதற்கு!!
தனது நாட்டின் நிலை கண்டு
தனது மக்களுக்கு முதலில்
சொன்னவன் கலீல் ஜிப்ரான்
அமெரிக்கர்களோ இதை
சொன்னவன் ஜான் எஃப்
கென்னடி என்றார்கள்.
நமது தமிழக மக்களோ
இது எம்ஜிஆர் சினிமாவில்
சொன்னது என்றார்கள்.
யார் சொன்னால் என்ன!

கொரோனாவை தடுக்க
அரசு என்ன செய்தது
என்று கேட்காதீர்கள்.
கொரோனா உங்களை
தாக்காமல் தடுக்க நீங்கள்
என்ன தடுப்பு முறைகளை
கையாள்கிறீர்கள் என்பதை
சற்று கவனத்தில் கொள்ளுங்கள்.
அச்சம் தவிருங்கள்
நோயை வெல்லுங்கள்.
உங்களை நீங்களே
பாதுகாத்து கொள்ளுங்கள்.
dr.habibullah
Senior Paediatrician

No comments: