Monday, June 15, 2020

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் . ..

Yembal Thajammul Mohammad

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் . ..

வாழ்த்த வேண்டியதுதானே ?

இல்லை ... அதில ஒருத்தர் - மாப்பிள்ளை -முஸ்லிம் ...

உங்களுக்கு எப்படித் தெரியும்?

ஃபேஸ்புக் எங்கும் இதே பேச்சா இருக்கு ...

அதனால ...

இது இஸ்லாத்தின் பார்வையில கூடுமா?

நீங்கதான் அந்த மாப்பிள்ளையா?

ஐயையோ ... நான் இல்லைங்க ...

அப்போ உங்களுக்கு என்ன பிரசனை?

அதுதான் சொன்னேனே ...இது இஸ்லாத்தின் பார்வையில கூடுமா?


இந்தக் கவலை அந்த மாப்பிள்ளைக்கு அல்லவா இருக்க வேண்டும்?
இங்கே பாருங்க அண்ணே, முஸ்லிம் பேரை வைச்சுக்கிட்டு யார் யாரோ செய்றதுக்கெல்லாம் ஒட்டு மொத்தமா நீங்களே கவலைப்படாதீங்க ...
அல்லாஹ் நாளைக்கு அவரைப் பற்றி உங்களையா கேட்கப் போறான்? அந்த மாப்பிள்ளைக்கு அருகில், அண்மையில், உறவில், உரிமையில் அறிவில் பக்தியில் சிறந்த எத்தனையோ முஸ்லிம்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் நிச்சயம் அந்த மணமக்களின் ஹிதாயத்துக்கு நல்லுபதேசம் செய்வார்கள், துஆ செய்வார்கள் என்று நன்னம்பிக்கை கொள்ளுங்கள்... உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா?

சொல்லுங்க ....

தமிழ்நாட்டில உள்ள எந்த ஸப்ரிஜிஸ்டார்( பத்திரப்பதிவு) ஆபீஸுக்கு மாசம் ஒருதடவை எப்போ வேணும்னாலும் போங்க ...

நான் சொத்து, பத்து ஒன்னும் வாங்கலையே ...

வாங்கினாத்தானா? அது அரசாங்க ஆபீஸுங்க...யாரும் போறதுன்னா போகலாம்... போய் நோட்டீஸ் போர்டைப் பாருங்க... படிங்க ....

எதுக்குங்க?

கல்யாணம் செய்துக்கப் போற ஜோடிகளோட படத்தைப் போட்டு யாருக்காவது ஆட்சேபணை இருக்கான்னு அங்க ஒட்டி இருக்கிற நோட்டீஸ்கள் கேட்கும்....

யாரோ செய்துக்கப் போற கல்யாணத்துக்கு ஊர்ல இருக்கிறவன் என்ன ஆட்சேபணை செய்றது?

செய்வான்- அவங்க உள்ளூர்ல செய்தா அடிதடி கலாட்டா கூட நடக்கும் ...

புரியலையே...

சொல்றேன்... பொண்ணும் மாப்பிள்ளையும் வேறவேற ஜாதியா இருப்பாங்க... அதனால உதாரணத்துக்கு சொல்றேன் .... குமரி மாவட்டத்து ஜோடி திருவள்ளூர் மாவட்ட ஆபீஸ்ல பதிவுத்திருமணம் செய்ய அப்ளிகேஷன் போடுவாங்க ...ஆபீஸரு சட்டப்படி ஒரு நோட்டீஸை ஒட்டச் சொல்வார்... இது எந்த மீடியாவிலும் சமூக ஊடகத்திலும் வராது... சில வாரங்கள் ஆன பிறகு பெற்றோர்-உறவினர்களுக்குத் தெரியாம சட்டப்படி கல்யாணம் நடந்திடும் ...

அதுக்கு நாம என்னங்க செய்ய முடியும்?

ஒண்ணும் செய்ய முடியாதுதான்...ஆனா அதில நீங்க கவனிக்க வேண்டிய விஷயமும் இருக்கே ...

அது என்னங்க?

இந்த நோட்டீஸ் போர்ட்ல- அதுவும் அநேகமா எல்லா பதிவு ஆபீஸிலும்- எல்லா மாசத்திலும்- இந்து முஸ்லிம் மணமக்கள் விவரம் படத்தோட ஒட்டி இருப்பாங்க ...

ஐயையோ...

என்ன ஐயையோ ... அவங்க ஜாம்ஜாம்னு கல்யாணம் முடிச்சிட்டு எங்கேயாவது போய் வாழ்வாங்க....தமிழ்நாட்ல அநேகமா தொடர்ந்து நடக்குற இதுக்கு நீங்க ஏதாவது செய்ததுண்டா?

இல்லையே ...

இதுமாதிரி கேரளாவில மட்டுமில்லை... ஆங்காங்கே இந்தியாவெங்கும் நடக்குது ...

என்னதான் சொல்ல வர்றீங்க ....

இந்து- முஸ்லிம் பொண்ணு மாப்பிள்ளை கல்யாணத்துல பரவலா இஸ்லாம்தான் ஜெயிக்குது... சம்பந்தப்பட்ட பொண்ணோ ஆணோ இஸ்லாமாயிடுறாங்க... சிலபேர் ரெண்டுங்கெட்டானாகவே காலம் தள்ளுறாங்க...

இதுக்கு ஒரு நல்ல தீர்வே இல்லையா?

ஏன் இல்லை? நம்ம நபிகளாரின் நபித்துவ வாழ்வுல பெரும்பகுதி அழைப்புப் பணிதான் செய்தாங்க... அது மாதிரி நம்ம சமூகத்து மக்கள் - ஆணோ, பெண்ணோ- எந்தப் படிப்பு படிச்சாலும் என்ன தொழில் செய்தாலும் காதல்வசப்பட்டாலும் அதோடு நல்ல அழைப்புப் பணி மனப்பான்மை செய்கிற உறுதியோட இருந்தா, எந்த மாதிரி கல்யாணம் செய்தாலும் யாரோட இஸ்லாமும் எங்கேயும் போயிடாது ... இஸ்லாம் பத்திரமா வளர்ந்துகிட்டுதான் இருக்கும் ...

அப்படியும் வராம போனா...?

அது அவங்களோட விதி... மார்க்த்துல கட்டாயமும் இல்லை ... நம்மால முடிஞ்சது - நாம அணுகக் கூடியவங்களா இருந்தா எடுத்துச் சொல்றது, துஆ செய்றதுதான்...அதுக்குமேல அல்லாஹ் போதுமானவன்...

அந்த முர்தத்துகளோட நாம உறவு பாராட்ட முடியுமா?

அறிமுகம் உள்ள- இல்லாத மனிதர்களுடன் ஒரு நல்ல முஸ்லிம் எப்படிப் பழகுவாரோ அப்படி - முடிந்தால் பழகுங்கள். இல்லைன்னா "அழகிய முறையில்" வெறுத்துக்குங்க.

இருந்தாலும் ஜீரணிக்க முடியலயே ...

இப்படி உங்களுக்கு அஜீரணக் கோளாறு இருக்குன்னு தெரிஞ்சா குழப்பிப் பிழைக்கிற 'கொள்கைத் தங்கம்' எவனாவது வந்து உங்களை ஏத்திவிட்டு வம்புல மாட்டி விடுறது மட்டும் இல்லாம அவனே உங்களை உளவுத்துறையிலும் போட்டுக் கொடுத்துட்டுப் போய்க்கிட்டே இருப்பான் .. நீங்க எங்கேயாவது வசமா மாட்டிக்குவீங்க ...

இப்போ நான் என்னதான் செய்யணும்?

ஒண்ணும் செய்ய வேணாம்னுதான் சொல்றேன் வேணும்னா ஒரு ஜெலுஸில் சாப்பிடுங்க .....

No comments: