Wednesday, June 17, 2020

ஜாதி வழி கோட்டையிலே


ஜாதி வழி கோட்டையிலே
தண்டாக்கறேன் பேட்டையிலே
ஏக ஜன கூட்டமடி தங்கமே
எமன் வந்தால் ஓட்டமடி தங்கமே

எத்தனையோ கோடி ஜென்மம்
இருக்கும் உலகத்துண்மை
அறிந்தவன் ஞானியடி தங்கமே
அதையறிந்து தேறுமடி தங்கமே



எத்தனையோ கோடி ஜென்மம்
இருக்கும் உலகத்திலே
அத்தனைக்கும் மேலானது தங்கமே
அஜலான ஜென்மமிது மானிட ஜென்மமிது

எத்தனையோ கோடி ஜென்மம்
ஆடுவதும் பாடுவதும் ஆளடிமையாகுவதும்
தேடுவதும் ஓடுவதும் தங்கமே
ஒரு ஜான் வைத்துக்கடி தங்கமே

தவத்துக்கு ஒருவரடி
தமிழுக்கு இருவரடி
சவத்துக்கு நால்வரடி தங்கமே
இது தாரணி வழக்கமடி தங்கமே

எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணத்தில் எண்ணிக்கொண்டு
மண்ணில் உருளாதாடி தங்கமே
மயங்கி நீ மடியாதடி தங்கமே

ஒருவன் சொன்னமுறையை
உற்றுனி பார்ப்பாயானல்
சற்றே விளங்குமடி மயிலே
உன் தலைவனும் தெரியுமடி

எத்தனையோ கோடி ஜென்மம்
இருக்கும் உலகத்திலே
அத்தனைக்கும் மேலானது தங்கமே
அஜலான ஜென்மமிது தங்கமே

ஜாதி வழி கோட்டையிலே
தண்டாக்கறேன் பேட்டையிலே
திண்டாட்ட கோலமடி தங்கமே
மன்றாடிச்சேருமடி தங்கமே

*Guru Bawa Muhaiyaddeen Kathasallahu Sirrahul Azeez.

No comments: