Thursday, June 25, 2020

*லியோ டால்ஸ்டாய் & மகாத்மா காந்தியின் லட்சிய வாழ்வுக்கு வித்திட்ட டுகோபார்ஸ் சமுதாய மக்களின் வாழ்க்கை பற்றிய கட்டுரை இது.....*

பதினேழாம் நூற்றாணடில இருந்து ரஷ்யாவின் தெற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த இடையர்களும் விவசாயிகளும் உருவாக்கிய ஒரு மதப்பிரிவே டுகோபார்ஸ், இவர்கள் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் தேவாலயம். மதச்சடங்குகள் பாதிரிகளின் கட்டுபாடுகள் யாவற்றையும் எதிர்த்தனர், மனிதனின் மனதே ஆலயம், மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், ஆத்மாவை பலமாகவும். எளிமையாகவும் பரஸ்பர அன்பும் கருணையும் நிரம்பியதாக்க் கொண்டிருக்க வேண்டும், எந்தக் காரணம் கொண்டும் வன்முறை. கொலை கூடாது,  மனிதர்களில் எவரும் உயர்வும் தாழ்வும் கிடையாது, ஆகவே தங்களை ஆத்ம போராளிகள் என்று அழைத்துக் கொண்ட இவர்கள் எலிஸ்தவ்போல். டிப்லிவஸ் போன்ற பகுதிகளில் விவசாயப் பண்ணை அமைத்துக் கொண்டு சிறுசிறு கிராமங்களாக வாழ்ந்தனர்

காந்தி டால்ஸ்டாயிடம் இருந்து கற்றுக் கொண்ட பல விஷயங்கள் டுகோபார்ஸ்  மக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த வந்த பழக்கங்களே,

டால்ஸ்டாயின் படைப்புகள் எந்த அறத்தை வலியுறுத்தியதோ அதே விசயங்களை தங்களது வாழ்வில் கடைபிடித்தவர்கள் டுகோபார்ஸ், அதனால் டால்ஸ்டாய் அவர்களை தனது எண்ணங்களை நடைமுறைப் படுத்தும் முன்னோடிகளாகக் கருதினார், டுகோபார்ஸ்சின் வாழ்க்கை இயற்கையோடு இணந்த்து மகத்தானதாக உள்ளதை கண்டு டால்ஸ்டாய் வியந்து போற்றியிருக்கிறார்



டுகோபார்ஸ் மக்கள் கடுமையான உழைப்பாளிகள். விவசாயத்தில் நல்ல தேர்ச்சி கொண்டவர்கள். தங்களது சுயதேவைகளைத் தாங்களே பூர்த்தி  செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோட்பாடு, அதற்காக விவசாயம். ஆடு மாடுகளின் பண்ணை. வீட்டுஉபயோகப் பொருட்கள் தயாரித்தல். காய்கறிகள். பழங்கள். உற்பத்தி செய்வது. உடைகளை தாங்களே நெய்து கொள்வது. விவசாயத்திற்கு தேவைப்படும் உபகரணங்கள் மரசாமான்களை தாங்களே செய்து கொள்வது.  மண்ணர்ல் வீடுகட்டுதல். பொது சமுதாயக்கூடம் அமைப்பது என்று அவர்களின் உலகம் சுயதேவைகளுக்காக எவரிடமும் கையேந்தி நிற்காதது,

அது போலவே இறைவழிபாட்டிலும் அவர்களுக்கான வழிபாட்டுமுறைகள். பாடல்கள். விழாக்களை அவர்களே உருவாக்கிக் கொண்டனர். பைபிள் வாசிப்பது கூட அவர்களிடம் கிடையாது,

அவர்கள் முழுமையாக சைவஉணவு பழக்கத்தை கைக்கொண்டிருந்தார்கள். முட்டை சாப்பிடுவது கூட பாவம் என்று விலக்கப்பட்டிருந்த்து. அது போலவே பாலை அருந்தவும் அவர்கள் மறுத்தார்கள், அது முழுமையாக கன்றுகளுக்கு மட்டுமே உரியது என்று பாலை  ஒதுக்கினார்கள், திருமணத்திலும் கூட பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்தது,

தங்களை எவராது தாக்க வந்தால் திருப்பி அடிப்பதற்குப் பதிலாக அந்த அடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நடைமுறை, எவ்வளவு வன்முறை பிரயோகப்படுத்தபட்டாலும் டுகோபார்ஸ் திரும்பி அடிக்க மாட்டார்கள், அடியை தங்களது ஆத்மாவின் பலத்தை சோதிப்பதற்கான பரிட்சையாக நினைத்தார்கள்

புகையிலை மற்றும் மதுப்பழக்கம் அவர்களிடம் கிடையாது, அது போலவே தங்களைத் தேடிவரும் விருந்தாளிகளுக்கு உணவு உறைவிடம் தருவதற்கு அவர்கள் ஒரு போதும் பணம் வாங்குவதில்லை, ரொட்டியை விலைக்கு விற்பது மிக்க் கொடிய பாவம் என்பது அவர்களின் எண்ணம்
கிராமங்களின் வீதிகள் பெரியதாக இருக்க வேண்டும். மண்ணில் தான் வீடுகட்ட வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு மேலே உடையோ, உடைமைகளோ வைத்துக் கொள்ளக் கூடாது, பணத்தை ஒரு போதும் பெரிதாக நினைக்க்கூடாது, விலங்குகள் மற்றும் விவசாய உடைமைகள் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் கட்டாயம் தங்களால் ஆன வேலையை செய்தே ஆக வேண்டும். வயதாகியவர்களை ஊரே பராமரிக்கும், ஊரின் நிர்வாகத்தை கவனிக்க அவர்களே குழு அமைத்து கொள்வார்கள், ஆகவே அரசாங்கத்தின் எந்த உதவியும் தேவையில்லாமல் அவர்களே தங்களுக்கான சாலைகள் அடிப்படை வசதிகளை அமைத்து கொண்டார்கள், குளியலுக்காக பொதுகுளியல் கூடம் அவர்களிடம் இருந்தது,

திருமணம் செய்து கொள்வது கடவுளின் விருப்பம் என்பதால் அதை அரசாங்கத்தில் போய் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.

தொலைபேசி அறிமுகமான உடன் தங்களது கிராமங்களுக்குள் தொலைபேசி வசதியை தாங்களாகவே உருவாக்கி கொண்டது அவர்களின் முன்னோடி சாதனை, இது போலவே ஜாம் செய்வதிலும் தானியங்களைப் பாதுகாப்பதிலும். மாவு அரைப்பதிலும் அவர்கள் தனித்திறன் கொண்டிருந்தார்கள், இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் கையால் வேலை செய்வதே அவர்களின் பாணி, எங்கே செல்லும் போது நடந்து போவதையே அவர்கள் விரும்பினார்கள்.

இவை யாவையும் விட அவர்கள் ராணுவசேவையை வெறுத்தனர், ஒரு ஆண் கூட ராணுவத்தில் போய் பணியாற்றக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர், ராணுவம் என்பது ஒரு ஆயுதங்களால் மனிதனை அச்சுறுத்தி அடக்க்கூடியது, ஆகவே ராணுவசேவை எப்போதுமே சமாதானத்திற்கு எதிரானது என்று தாங்கள் எதிர்ப்பை காட்ட தங்களது அத்தனை ஆயுதங்களையும் தீயிட்டு
கொளுத்தினார்கள் டுகோபார்ஸ் மக்கள்
இன்னொரு பக்கம் தங்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பதால் அரசிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் நிலஅளவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் அவர் செயல்படுத்த அனுமதிக்கவில்லை, தாங்கள் ஒரு தனிராஜ்ஜியம் போலவே அமைதியாக வாழ்ந்தார்கள்

ஆனால் அரசு மக்கள் நிம்மதியாக ஒதுங்கி வாழ ஒரு போதும் அனுமதிக்காது தானே, ஆகவே கசாக்கியப்படையை அனுப்பி அவர்களை ராணுவத்தில் சேர்க்க முயன்றது, மறுத்தவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள், டுகோபார்ஸின் ஒரு கிராமத்தை சுற்றி வளைத்து அவர்களை அடிபணியும் படியாக அடித்தார்கள், அடியை தாங்களே முன்வந்து ஏற்றுக் கொண்டபோதும் ஒருவரும் அடிபணியவேயில்லை, வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, கைகால்கள் ஒடிக்கப்பட்டு சைபீரிய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள், பல ஊர்கள் தீக்கிரையாகின, வீடுகள் நொறுக்கப்பட்டன, ஆனால் அவர்களின் ஆத்மபலம் குறையவேயில்லை,

ஒரு நாள் முழுவதும் முந்நூறு கசை அடிவாங்கிய ஒரு மனிதன் மறுநாள் தன்னை அடிக்கின்ற கசாக்கிய வீரனிட்ம் உனக்கு சரியான ஒய்வு இல்லை, தேவையான உணவும். பழங்களும்  என் சேமிப்பில் இருக்கின்றன, அதை சாப்பிட்டு வந்து என்னை அடிக்கலாமே என்று சொல்லியிருக்கிறான்,. அது தான் டுகோபார்ஸின் இயல்பு....

(கட்டுரையை முழுதும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
https://www.sramakrishnan.com/?p=2135 )


No comments: