Tuesday, June 16, 2020

இது_இன்றைய_புதிய_செய்தி

Suhaina Mazhar
12 hrs ·
#இது_இன்றைய_புதிய_செய்தி

முதன்முறையாக கொரோனா வைரஸுக்கு எதிரான உயிர்காக்கும் மருந்தை கண்டறிந்துள்ளார்கள். இதை முன்பே கண்டறிந்திருந்தால் லட்சக்கணக்கான நோயாளிகளைக் காப்பாற்றி இருக்கலாமே என்று இங்கிலாந்து மருத்துவ வல்லுனர்கள் கவலைப்படுகிறார்களாம்.

இத்தனைக்கும் இது ஒன்றும் புதிய மருந்தல்ல. 1960ம் ஆண்டு முதல் பரவலாக உலகமெங்கும் பயன்படுத்தப்படும் மிக மிக விலை மலிவான மருந்து தான். Dexamethasone என்று சொல்லக் கூடிய இந்த ஸ்டீராய்டு பயன்படுத்தும் போது...

கொரோனா வைரஸ் தாக்கியவர்களில் "இவர்களைக் காப்பாற்றவே முடியாது, உறுதியாக இறந்து விடுவார்கள்..." என்று கைவிட்ட கேஸ்களில் ஐந்து பேரில் நான்கு பேரின் உயிரைக் காப்பாற்றி விடலாமாம்... அதாவது இப்போது இருக்கும் இறப்பு எண்ணிக்கையை ஐந்தில் ஒரு பங்காக இது குறைத்து விடுமாம்...


உதாரணமாக கொரோனாவால் தமிழகத்தில் 200 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் இந்த மருந்தை பயன்படுத்தி இருந்தால் 160 பேர் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். 40 பேர்கள் மட்டுமே இறந்திருப்பார்கள்.

இதில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்சிக்ளோரோகுயின் என்ற மருந்து அதிக உயிரிழப்புகளின் காரணமாக இப்போது தரப்படுவதில்லை. அதற்கு பதிலாக சீக்கிரம் நோயை குணப்படுத்தும் Remdesivir என்ற மருந்து கொடுக்கப்படுகிறது.

இந்த ரெம்டெசிவர் பயன்படுத்தும் போது வழக்கமாக ஒருவர் உடலில் பதினைந்து நாட்கள் கொரோனா கிருமி இருக்கும் என்றால் இதை உட்கொண்டால் ஒரு வாரத்துக்குள் நீங்கி விடும்.

இந்த ரெம்டெசிவர் மருந்தும் டெக்ஸாமெத்தசோன் மருந்தும் இணைந்து பயன்படுத்தும் போது கொரோனா ஆபத்திலிருந்து மக்கள் எளிதில் வெளிவர முடியுமென்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எனினும் இந்த மருந்து ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே உதவக் கூடியதாகும். கொரோனா ஆரம்பநிலையில் இருப்பவர்கள் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இதைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த புரஃபஷர் லாண்ட்ரே குறிப்பிட்டுள்ளார்.
Suhaina Mazhar
இது குறித்த ஆங்கில கட்டுரை லின்க்  https://www.bbc.com/news/health

No comments: