Mohamed Rafee நாகூர் ரூமி:
உயிரணுக்களெல்லாம் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் கற்றுக்கொண்டு செய்யுமா? இல்லை. அவைகள் உருவாகும்போதே தான்செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான அறிவுடனும், கடமையை நிறைவேற்றும் தகுதியுடனும்தான் உருவாகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒவ்வொரு செல்லும் ஒரு ஞானியாகவே பிறக்கிறது. வாழும் காலமெல்லாம் ஞானியாகவே வாழ்கிறது. கோடிக்கணக்கான ஞானிகளின் கூட்டமைப்புதான் மனித உடல் என்று சொன்னால் அது மிகையில்லை. -- நாகூர் ரூமி (நலம் நலமறிய ஆவல் நூலில்)
நாகூர் ரூமி: என் நலம் நலமறிய ஆவல் நூலின் முடிவுரை ----பல ஆராய்ச்சி நூல்களில் இருந்தும், மனசாட்சியுள்ள பல டாக்டர்கள், ஹீலர்கள், நண்பர்கள் ஆகியோரின் ஆடியோ, வீடியோக்கள், புத்தகங்களில் இருந்தும், என் சொந்த அனுபவத்திலிருந்தும் எனக்குப் புரிந்ததை உங்களுக்கும் புரிய வைக்க என்னால் ஆன விதத்தில் முயன்றுள்ளேன். அந்த மனிதர்களுக்கும், நூல்களுக்கும் நன்றிகள்.
நான் கொடுத்த விஞ்ஞானப்பூர்வமான தகவல்களில் தவறு இருந்தால் அதை திருத்திக்கொள்ளலாம். ஆனால் அடிப்படையில் எந்த தவறும் இல்லை. உடலே உடலைப் பார்த்துக்கொள்ளும் என்ற ஞானமே அடிப்படையானது. மருந்துகளும், மருத்துவமனைகளும், அறுவை சிகிச்சைகளும் நம்மை ஆரோக்கியமானவர்களாக ஆக்குவதற்கு பதிலாக நோயாளிகளாகவே வைத்து கஷ்டப்படுத்திக்கொண்டுள்ளன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
உடலுக்கு நன்மை செய்கின்ற, அல்லது தீங்கு செய்யாத மாற்று மருத்து சிகிச்சை முறைகள் எத்தனையோ உள்ளன. அதேபோல மருந்தில்லா மருத்துவமும் பிரபலமாகிவிட்டது. கேன்ஸர், எய்ட்ஸ் போன்ற வியாதிகளை உயிர்க்கொல்லி வியாதிகள் என்பதாக நாம் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். எந்த நோயும் வராமல் ஆரோக்கியமாகவே நாம் வாழ்ந்தாலும் ஒருநாள் போய்த்தான் ஆகவேண்டும். அதுவரை ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்ற கேள்விதான் நமக்கு முக்கியமானது.
அப்படியானால் அலோபதி மருத்துவ முறையை அடியோடு ஒதுக்க வேண்டுமா?
இந்தக் கேள்விக்கு ஆமாம் என்றும் முற்றிலுமாக ஒதுக்க வேண்டியதில்லை என்றும் நான் பதில் சொல்வேன். நோய் என்றால் அது எதுவாக இருந்தாலும் அலோபதி தேவையில்லை. திடீரென்று அடிபட்டு மண்டை உடைந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அலோபதி மருத்துவமனைக்குச் சென்று முதல் உதவி பெற்றுக்கொள்ளலாம் என்பதே என்கருத்து. ஏனெனில் மண்டை உடைந்தது ஒரு விபத்து. அது நோயல்ல. நோயாக இருந்தால் அது கேன்ஸராயினும் சரி, எய்ட்ஸாயினும் சரி, உடலே சரி செய்துகொள்ளும். ஆனால் உடல் சரி செய்துகொள்வதற்கான சூழ்நிலையை மட்டும் நாம்தான் உருவாக்க வேண்டும்.
அது என்ன சூழ்நிலை?
• பசிக்கும்போது மட்டும் உண்ணவேண்டும்
• தாகம் எடுக்கும்போது மட்டும் குடிக்கவேண்டும்
• இரவில் சீக்கிரம் படுத்துறங்க வேண்டும்
• குறிப்பிட்ட ருசிக்கு அடிமையாகிவிடக்கூடாது
• வாரம் ஒரு முறையோ அல்லது எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் நோன்பு பிடிக்கலாம்
• வாரம் ஒருமுறை பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தேய்த்துக்குளிக்கலாம்
• பாரம்பரிய உணவுவகைகளை மட்டும் பிரதானமாக சாப்பிடவேண்டும்
• செயற்கை உணவுகளை, பானங்களையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டும்
• அடிக்கடி பழங்கள், காய்கறிகள் சாப்பிடவேண்டும் (பழங்களும் உணவும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது முதலில் பழங்களைச் சாப்பிடவேண்டும்).
• உடம்பு சரியில்லாதபோது திட உணவைத் தவிர்த்து, உடலுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்
• ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து வீட்டுச்சாப்பாட்டையே அதிகம் உண்ணவேண்டும்
• உணவுக்கு நன்றி சொல்லிச் சாப்பிடவேண்டும்
• பிடித்த உணவை மட்டும் எந்த பயமும் இல்லாமல் உண்ணவேண்டும்
• சாப்பிடும்போது சாப்பிடுவதில் மட்டும் கவனம் இருக்கவேண்டும்
• மனிதர்களை, உயிர்களையெல்லாம் நேசிக்கவேண்டும்
• குறைந்த பட்சம் வெறுக்காமலாவது இருக்கவேண்டும் (இதற்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். புரியாவிட்டால் மனிதர்களை நேசித்துத்தான் பாருங்களேன், எவ்வளவு சீக்கிரம் உங்கள் நோய் குணமாகிறது என்பதை உணருவீர்கள்)!
• ஆரோக்கியம் பற்றி இணையம், வாட்ஸ் அப் -- இப்படி வந்து குவிந்துகொண்டிருக்கும் தகவல்களையெல்லாம் குப்பைகளைப் போல் சேர்த்து வைத்துக்கொண்டு, அதை அடுத்தவருக்கும் ஃபார்வர்டு செய்துகொண்டெல்லாம் இருக்கக் கூடாது!
அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வோம்.
இறையருள் துணை நிற்குமாக
அன்புடன்
நாகூர் ரூமி
========
No comments:
Post a Comment