கோழி ஜார்ஜ் கோழிச் சண்டைகளின் நுட்பங்களை மிக நன்றாகவே தெரிந்து கொண்டான். வயதான மிங்கோ மாமா ஒருநாள் இறந்துபோனார். அதன் பிறகு ஜார்ஜ்தான் கோழிப் பண்ணையின் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான்.
பல பந்தயங்களுக்கு மாசா டாம்லீயுடன் சென்று நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்தான்.
இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாசா வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த #மாடில்டா என்ற அடிமைப் பெண்ணைக் காதலித்தான். பிறகு ஒருநாள் டாம்லீயின் அனுமதியோடு அவளை திருமணமும் செய்து கொண்டான்.
1828 ல் மாடில்டா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
குழந்தையை கையிலெடுத்த ஜார்ஜ் தன் தாத்தா குன்டே கின்டே தன் தாய் கிஸ்ஸிக்கு பெயர் வைத்து தன் வரலாறு சொன்ன மாதிரியே தன் குழந்தைக்கும்
#விர்ஜில் என்று பெயர் வைத்து வரலாறு சொன்னான்.
தொடர்ந்து மாடில்டா வருசந்தோறும் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள்.
மொத்தம் எட்டு குழந்தைகள்.
ஆறு ஆண் . இரண்டு பெண்.
காலங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
ஜார்ஜின் நாலாவது மகன்
#டாம் இரும்பு பட்டறைத் தொழில் செய்வதில் திறமை மிக்கவனாக வளர்ந்தான். அவனுக்கு டாம்லீ ஒரு பட்டறை வைத்துக் கொடுத்து அதிலும் நல்ல வருமானம் பார்த்தான்.
டாம்லீக்கு 78 வயதானபோது இங்கிலாந்திலிருந்து ஒரு பணக்காரர்
கோழிச் சண்டைக்காகவே கப்பலில் பயணித்து வந்து சேர்ந்தார்.
அவரது கோழிகளோடு தன்னுடைய கோழிகளை மோதவிட்டு
வெற்றி பெற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்று டாம்லீ நம்பினான்.
அவன் நினைத்தபடியே நடந்தது.
முதல் போட்டியிலேயே இருபதாயிரம்
டாலர் டாம்லீக்கு கிடைத்தது.
இங்கிலாந்துக்காரர் அடுத்த சுற்று போட்டிக்கு அழைத்தார்.
தன் கெளரவத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத டாம்லீ அதை ஏற்றுக் கொண்டு விளையாட ஜெயித்த பணம் மட்டுமல்ல ...
சொந்த பணம் அத்தனையும் இழந்து தன் சொத்து பத்து எல்லாவற்றையும் இழந்தான்.
அந்த ஆங்கிலேயர் டாம்லீயின் சொத்துக்கு பதிலாக
ஜார்ஜை மட்டும் தனக்குத் தந்தால் போதும் . வேறு எதுவும் வேண்டாம் என்றார்.
டாம்லீ மறுபேச்சு பேசாமல் ஜார்ஜை இங்கிலாந்துக்காரருக்கு தருவதாக ஒப்புக் கொண்டான்.
ஜார்ஜுக்கும் அவன் குடும்பத்துக்கும் விடுதலை பத்திரங்களை எழுதி
வைத்துக் கொண்டு நீ இங்கிலாந்திலிருந்து நீ திரும்பி வந்ததும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் விடுதலை. இதோ விடுதலை பத்திரம் எழுதி விட்டேன்.
நீ இங்கிலாந்துக்கு சென்றே ஆக வேண்டும் என்று கூறி விடுவான்.
அடிமை ஜார்ஜால் என்ன செய்ய முடியும் ?
குடும்பத்தை விட்டு பிரிந்து இங்கிலாந்து சென்று விடுவான்.
டாம்லீ கிழவனாகி விட்டான்.
குடித்து குடித்து எல்லாவற்றையும் இழந்தான். அடிமைகள் வேலை செய்த வயல்களையும் இழந்தான்.
வீடு பாழடைந்து வறுமையில் விழுந்தது. தன்னிடம் இருந்த ஜார்ஜின்
குடும்பத்தார் அனைவரையும் பணத்துக்காக அலமாலன்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த
#மாசா_முர்ரே என்பவருக்கு விற்று விட்டான். அவர்கள் முர்ரேயிடம் வேலை பார்த்தார்கள். அவர் கொஞ்சம் நல்லவராக இருந்தார்.
டாம் பெரிய கொல்லனாக பேரெடுத்து பணம் சம்பாதித்தான்.
#ஐரின் என்ற பெண்ணை மணமுடித்தான்.
1860 ம ஆண்டு ஐரின் ஒரு பெண் குழந்தை பெற்றாள்.அதற்கு
#மரியா என்று பெயரிட்டார்கள்.
ஐந்து வருடம் கழித்து இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த ஜார்ஜ் 83 வயது கிழவன் டாம்லீயை சந்தித்து தனது விடுதலை பத்திரத்தை பறித்துக் கொண்டு தன் குடும்பத்தைத் தேடி அலமாலன்ஸ் மாவட்டத்துக்கு வந்து சேர்வான்.
நடந்த சம்பவங்களையும் அனுபவித்த கொடுமைகளையும் அவர்கள் பரிமாறிக் கொள்வார்கள்.
அதே வருடம் அமெரிக்காவின் அதிபராக #ஆப்ரஹாம்_லிங்கன்
தேர்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியான செய்தி வந்து கறுப்பின மக்களை சந்தோஷப்படுத்தியது.
ஐரின் எழு குழந்தைகளுக்கு தாயானாள் . எல்லா குழந்தைகளுக்கும் டாம் தன் குடும்ப வரலாறை சொல்லிக் கொடுத்து வளர்த்தான்.
1863 ஜனவரி ஒன்னாம் தேதி அமெரிக்காவில் அடிமைகளாக இருப்பவர்கள் அனைவரும்
சுதந்திரமானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
குன்டாவின் சந்ததிகள் அமெரிக்காவில்
தங்களுக்கு விருப்பமான பகுதியில் குடியேறியது.
தங்கள் திறமைக்கு ஏற்ற வேலைகளைச் செய்து நல்ல வசதியாக சுதந்திரமாக வாழ ஆரம்பித்தார்கள்.
ஐரின் டாம் தம்பதிகளின் கடைசிக் குழந்தை
#சிந்தியாவுக்கும்_வில்_பால்மர் என்பருக்கும் திருமணம் நடந்தது.
1895 ல் அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு
#பெர்தா_ஜார்ஜ் என்று பெயரிட்டார்கள்.
எல்லாக் குழந்தைகளுக்கும் தங்கள் குடும்ப வரலாறை சொல்லிக் கொடுத்தார்கள்.
1920 ல் பெர்த்தாவுக்கும்
#சைமன்_அலெக்சாண்டர்_ஹோலி
என்பவருக்கும் திருமணம் நடந்தது.
அமெரிக்காவின் சுதந்திர மனிதர்களாக மாறிய ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் குடியேறி நன்றாகப் படித்து நல்ல வேலைகளில் சேர்ந்தார்கள்.
1921 ம் வருடம் தன் தாய் சிந்தியாவைவை சந்தித்த பெர்த்தா அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தாள்.
அந்தப் பரிசுதான்
#அலக்ஸ்_ஹேலி .
இந்த நூலை
#Roots என்ற பெயரில் எழுதிய ஆசிரியர்.
* இதுவரை எழுதியது முன்னுரை என்ற பெயரில் வேர்கள் நூலின் கதை சுருக்கம் .
அல்லது வரலாற்றுச் சுருக்கம்.
இந்த நூலைப் பற்றியும்
இதை எழுதிய அலெக்ஸ்ஹேலி
தமிழ் படுத்திய எம்.எஸ்.அப்துல் ஹமீது
ஆகியோர் பற்றியும் ஒரு சிறப்புரை
இன்ஷா அல்லாஹ்
#நாளை
Abu Haashima
No comments:
Post a Comment